Kathir News
Begin typing your search above and press return to search.

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் திமுக:விரிவான விளக்கத்தோடு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா!

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் திமுக:விரிவான விளக்கத்தோடு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா!
X

SushmithaBy : Sushmitha

  |  29 Nov 2024 7:50 PM IST

முதல்வர் அறிக்கை

28 நவம்பர் 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது அதற்குப் பதிலாக சமூகநீதி அடிப்படையிலான சாதியப் பாகுபாடற்ற அனைத்துக் கைவினைக் கலைஞர்களுக்கும் முழு ஆதரவளிக்கும் விரிவான திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும்

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வென்ற தலைவர்களின் கொள்கை வாரிசுகளான நாங்கள் குலத் தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று பதிவிட்டிருந்தார்

எஸ்.ஜி.சூர்யா பதிலடி

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளை விமர்சித்ததோடு விஸ்வகர்மா திட்டம் குறித்து விரிவான பதிலையும் அளித்தார் ஸ்டாலினுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டதாக சூர்யா வாதிட்டார் அதாவது விஸ்வகர்மா திட்டம் என்னவென்றே புரியாமல் அரசியல் செய்யும் தமிழக முதல்வருக்கு அதை விளங்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம் மக்கள் பயன்பெற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது அதனை செயல்படாத உங்கள் அரசு விமர்சிப்பது முற்றிலும் தவறானது முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களே என்றும் இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டினார் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் கடன்கள் பயிற்சி சந்தை ஆதரவு மற்றும் நவீன கருவிகள் மூலம் கைவினைஞர்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் ஆரம்ப ஒதுக்கீடு ரூபாய் 13,000 கோடி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்

இருப்பினும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் யூடியூப் சேனலாக செயல்பட்டு வருகின்ற திராவிடப் பிரச்சார நிறுவனமான யூ-டர்ன் எஸ்.ஜி சூர்யா கூறியதை திரித்து அறிக்கை வெளியிட்டது மேலும் திராவிடவாதியான ஐயன் கார்த்திகேயன் சூர்யாவின் கருத்தை விமர்சிக்கும் வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பதிவுகளை இட்டு வர எஸ்.ஜி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் திரு ஐயன் கார்த்திகேயன் அவர்களே தாங்கள் என் அறிக்கையை படித்துப்பார்த்து அதன் பிறகு பதிவிட்டீர்களா என தெரியவில்லை இருப்பினும் நான் சில விஷயங்களை தெரிவுபடுத்த விரும்புகிறேன் என்று பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்

மடைமாற்ற முயலும் திமுக!

என்னுடைய அறிக்கையில் தமிழ்நாட்டின் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறீர்களே அப்பொழுது அது சாதி அடிப்படையில் வராதா என்ற கேள்வியை எழுப்பியதை அந்த ஒற்றைவரியில் உள்ள சாதி என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு நீங்கள் என்னுடைய மொத்த அறிக்கையும் சாதிய ரீதியில் இந்த விஷயத்தை அணுகுகிறேன் என மடைமாற்ற முயல்கிறீகள். அது தவறு உள்நோக்கம் கொண்டது

என் அறிக்கையில் கூற வந்ததை உங்கள் தெளிவிற்காக நான் இங்கே உங்களுக்கு வகுப்பெடுக்க விரும்புகிறேன் முதலில் திரு.நரேந்திர மோடி கைவினை கலைஞர்கள் வாழ்வில் ஒளியேற்ற கொண்டு வந்த இந்த விஸ்வகர்மா திட்டத்தை நீங்கள் சாதி அடிப்படையில் பார்ப்பது தவறு அது உடல் உழைப்பையும் பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி தொழில் செய்யும் பிரிவிக்கானது என தெளிவுபட சொல்லியிருக்கிறேன்

கடந்த 1973-ஆம் ஆண்டு மறைந்த திரு.கருணாநிதி அவர்களால் கைத்தரித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்- பூம்புகார் என்ற பெயரில் துவக்கப்பட்ட நிறுவனத்தில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறீர்களே அப்பொழுது அது எந்த பிரிவில் வழங்குகிறீர்கள் மத்திய அரசு எந்த நோக்கத்தின் அடிப்படையில் கைவினை கலைஞர்களை பிரிக்கிறதோ அதே அடிப்படையில் என்றுதான் சுட்டிக்காட்டியுள்ளேன்

நீங்கள் கைவினை கலைஞர்களை அழைத்து பாராட்டி அவர்கள் செய்த தொழிலை மதித்து விருது கொடுத்தல் அது சரி மத்திய அரசு கைவினை கலைஞர் வாழ்வை உயர்த்த ஒரு திட்டத்தை அறிவித்தால் அது தவறா முதலாம் ஒன்று சமூக நீதி இரண்டாம் ஒன்று சமுதாய அடிப்படை என எப்படி பிரிக்கிறீகள் என கேள்வி எழுப்பியுள்ளேன்

ஆனால் திரு.கார்த்திகேயன் அவர்களே வழக்கம்போல நீங்கள் என்னுடைய அறிக்கையை வாசித்துவிட்டு அதில் சாதி என்ற வார்த்தையை வைத்து விளையாடி நீங்கள் இன்று வேலை பார்த்துவிட்டீர்கள் என உங்களுக்கு ஊதியம் வழங்க கணக்கு காட்டிவிட்டிர்கள் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மொத்தமாக படித்துவிட்டு இதில் சாதி என்ற சொல்லை மட்டும் வைத்து அரசியல் செய்ய துவங்கிவிட்டிர்கள் அதுதான் சரி

இறுதியாக சொல்கிறேன் என்னுடைய அறிக்கையை மீண்டும் வாசித்துவிட்டு பின்னர் தெளிவு படவும் உங்கள் வழக்கமான சமூக நீதி என்ற இரவல் வார்த்தையை வைத்து அரசியல் செய்ய நான் ஆள் கிடையாது அதற்கு வேறு ஆள் பார்த்துக்கொள்ளவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்

அதுமட்டுமின்றி விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று சொல்வது கேலிக் குறியது பிரதமர் மோடியை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் திமுக அரசு விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கிறது இந்த திட்டம் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News