Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரமடையும் திருப்பரங்குன்றம் விவகாரம்:மிருக பலிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சிகள்,இந்து ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தீவிரமடையும் திருப்பரங்குன்றம் விவகாரம்:மிருக பலிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சிகள்,இந்து ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
X

SushmithaBy : Sushmitha

  |  30 Jan 2025 6:36 PM IST

தர்கா வக்பு சொத்து

இந்துக்களின் புனித தளமாக விளங்குகின்ற திருப்பரங்குன்றம் மலையானது ஒரு இஸ்லாம் அரசியல்வாதியின் சர்ச்சைக்குரிய பதில் மற்றும் கேள்விகளால் பெரும் பதட்டத்தையும் பிளவையும் எதிர்கொண்டுள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான ராமநாதபுர எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தர்கா வகுப்பு சொத்து என கூறினார் அவரின் இந்த அறிக்கை அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது மேலும் தற்போது ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கும் அதுவே காரணம் என கூறப்படுகிறது

திருப்பரங்குன்றம் மலை-சிக்கந்தர் மலை

ஏனென்றால் முன்பெல்லாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் சம்பவமாக எம்பி நவாஸ் கனியின் பேச்சு இருக்க அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்ற மலைகள் முழுவதையும் சிக்கந்தர் மலைகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சில இஸ்லாமிய அமைப்புகள் மழையின் உச்சியில் மிருகப்பலி நடத்தும் உரிமையை நிலைநாட்ட முயன்று வருகின்றனர்

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக தான் கடந்த டிசம்பரில் மலையின் உச்சியில் உள்ள தர்காவிற்கு பலி கொடுப்பதற்காக முயன்ற ஒரு இஸ்லாம் குடும்பத்தின் குழுவை மதுரை போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் அப்பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்தது அதுமட்டுமின்றி 20-க்கும் மேற்பட்ட உள்ளூர் இஸ்லாமியர்கள் மலை அடிவாரத்தில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வெடித்த போராட்டம்

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில் அதாவது ஜனவரி 5 2025 இல் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி இஸ்லாம் போராட்டக்காரர்களின் மற்றொரு பெரிய குழு ஒன்று கூறியது அவர்களின் கோரிக்கைகளையும் போலீசார் மறுத்ததால் இந்த பதற்றம் அதிகரித்தது மேலும் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவின் போது ஆடு மற்றும் சேவல்கள் பலியிட பட்டதாக கூறப்படும் மலை உச்சி தர்காவில் சமத்துவ விருந்து பற்றி சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாக பரவ இதனால் ஏற்படும் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வர மலைக்கு கால்நடைகளை கொண்டு செல்வதை போலீசார் தடுக்க தடுப்பணைகளை அமைத்து சோதனைகளை நடத்தினர் இப்படி தர்கா ஜமாத்துக்கு மிருக பலிக்கு அனுமதி இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது எடுத்து இந்த போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது காவல்துறையிடனுன் மோதலில் அவர்கள் ஈடுபட்டனர்

களத்தில் இறங்கிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள்

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக அமமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உரிமை மீட்பு குழு இந்து முன்னணி புதிய தமிழகம் கட்சி இந்திய ஜனநாயக கட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி வீர தமிழர் முன்னேற்ற கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலெக்டரிடம் இந்தியா பார்வர்ட் பிளாக் என்ற மனுவை அளித்துள்ளது அதுமட்டுமின்றி விலங்கு பலியை அனுமதிப்பது அந்த இடத்தில் இதற்கு முன்பு கடைபிடிக்கப்படாத ஒரு நடைமுறை சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் அப்பகுதியில் மத பதட்டங்களை உருவாக்கும் என்று தங்கள் வாதங்களை முன் வைத்தனர்

மாவட்ட ஆட்சியருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் திருப்பரங்குன்றம் மலை சைவ சமூகத்தினரின் புனிதத் தலமாகும் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது இந்த மலையில் சைவ தெய்வங்களான விநாயகர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஏராளமான குகை மற்றும் சிவன் கோயில்கள் உள்ளன மலையைச் சுற்றிலும் பல ஷைவக் கோயில்கள் உள்ளன மேலும் விலங்குகளைப் பலியிடும் நடைமுறை ஷைவ மதத்தின் புனிதத்தன்மையுடன் நேரடியாக முரண்படுகிறது நாங்கள் பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம் இதுபோன்ற நடைமுறைகள் இதற்கு முன் ஏற்பட்டதில்லை இத்தகைய நடைமுறைகளை அனுமதிப்பது இந்து பக்தர்களின் உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் மற்றும் பல தலைமுறைகளாக அமைதியாக வாழ்ந்து வரும் உள்ளூர் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எனவே இப்பகுதி மக்களின் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் மிருக பலியை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் திருப்பரங்குன்றத்தில் வாழும் பலதரப்பட்ட சமூகத்தினரிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் மேலும் மோதலை தடுக்க விரைந்து தீர்வு காணவும் வலியுறுத்தப்பட்டது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News