விஜய் கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி:யார் இவர்?ஃபுல் ஸ்டோரி!

தமிழக அரசியலில் பரபரப்பான நகர்வு என விஜய் அரசியலுக்கு வந்தது பார்க்கப்பட்டாலும் தற்பொழுது விஜயின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி, கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமாரின் இணைப்பை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சுறுசுறுப்பாக உற்சாகத்தில் சிறக்கிறது
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்ததில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி தான் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் யூகங்களை வகுத்துக் கொடுக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்பட்டாலும் முதல்முறையாக விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவை நியமித்துள்ளார்
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முழுவதையும் தமிழகத்தில் தான் முடித்திருக்கிறார் சென்னை லயோலா கல்லூரியில் படிக்க முடித்து 11 ஆண்டுகளாக குட் ரிலேஷன் இந்தியா என்கிற நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்து பிறகு ஆப்பில் நிறுவனத்தின் பிராண்டின் பிரிவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி இந்தியாவில் ஆப்பிள் மொபைல் போன்கள் மார்க்கெட்டிங் செய்வதற்கான பல வியூகங்களை வகுத்தும் கொடுத்திருக்கிறார்
ஜான் ஆரோக்கிய சாமியின் அரசியல் வியூக பயணம்
இதற்கிடையிலே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவிற்காக தேர்தல் வகுத்துக் கொடுத்து அதில் அவரின் திறமையை பார்த்து தனது மகன் ஆதித்யா தாக்கரேவின் தேர்தல் வெற்றிக்கான வியூக பணிகளையும் உத்தவ் தாக்கரே ஜான் ஆரோக்கியசாமியிடம் ஒப்படைத்தார் இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் சித்தராமையா டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மும்பையில் தாக்கரே என இந்தியா முழுவதும் ஜான் ஆரோக்கிய சாமியின் தேர்தல் வியூகங்களும் தொடர்புகளும் பரந்து விரிந்தது
தமிழகத்தில் ஜான் ஆரோக்கியசாமியின் முதல் அரசியல் வியூகம்
இப்படி டெல்லி மும்பை ஆந்திராவில் இருந்த ஜான் ஆரோக்கிய சாமியின் வியூகம் முதன் முதலில் 2016 சட்டமன்ற தேர்தலின் பொழுது தமிழகத்தில் அதுவும் பாமக அன்புமணியை முன்னிறுத்தி தேர்தல் வியூகம் அமைக்க வைத்தது அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்கிற பிரச்சாரம் தமிழகம் முழுவதும் அன்புமணியை கொண்டு சேர்த்தது இந்த பிரச்சாரங்கள் வன்னியர் அல்லாத பலரையும் அன்புமணி மீது திருப்பியது
நாம் தமிழர்-ஜான் ஆரோக்கியசாமி
இதற்குப் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தது ஜான் ஆரோக்கியசாமி குழு இந்த தேர்தலில் அவர் வகுத்துக் கொடுத்த வியூகமும் சீமானுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்த அடைமொழியும் திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க விரும்பாத மக்கள் அனைவரின கவனத்தையும் ஈர்த்து அவர்களுடைய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அந்தத் தேர்தலில் மட்டும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை ஆறு சதவீதத்திற்கு மேல் பெற வைத்து தமிழகத்தில் மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சியை பிடிக்க வைத்தார் ஜான் ஆரோக்கியசாமி
தவெகவும் ஜான் ஆரோக்கியசாமியும்
இப்படி கடந்த 20 வருடங்களாக அரசியல் கட்சிகளுக்கும் தனிநபர்களுக்காகவும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து வந்த ஜான் ஆரோக்கியசாமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழக வெற்றி கழகத்திற்கும் விஜய்க்கும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வந்துள்ளார் விஜயின் முதல் மாநாடு கொள்கை தலைவர்களை அறிவித்தது விஜய் பரந்தூருக்கு வந்தது என தமிழக வெற்றி கழகம் தொடங்கி பலரது கவனத்தையும் தமிழக அரசியல் கவனத்தையும் பெற்ற இந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்திற்கான ஆலோசனைகளை வழங்கியது ஜான் ஆரோக்கியசாமி தான் இருப்பினும் கட்சியின் தினசரி விவகாரங்களில் ஜான் ஆரோக்கியசாமி என்றுமே தலையிட்டதில்லையாம் ஏன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளையும் நியமனத்தில் கூட ஜான் ஆரோக்கியசாமி தனது கருத்து என எதையும் கூறவில்லையாம் விஜயை எப்படி பொது மேடையில் முன்னெடுத்துவது கட்சியை எப்படி இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பது அவரின் முக்கிய வியூகமாக உள்ளது
இந்த நிலையில் தான் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார் அவருடன் இணைந்து ஜான் ஆரோக்கிய சாமியும் செயல்படுவார் என விஜய் அறிவித்துள்ளார் அதன்படி விஜயின் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் வியூகங்களை ஜான் ஆரோக்கியசாமி வகுத்து அதனை பொதுச்செயலாளர் ஆனந்திடமும் கட்சி தலைவர் விஜயுடமும் கலந்து பேசி செயல்படுத்தும் பொறுப்பு ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது