ஏடிஜிபியின் புகாரும்,அலுவலக தீ விபத்தும்:டிஜிபி அலுவலகத்தின் பதில் இதுவா!முழு பின்னணி!

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் முதல் ஏடிஜிபி வரை
அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைத்த ஏடிஜிபியான கல்பனா நாயக் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் பல கோடி ரூபாய் சம்பள வேலை அமெரிக்காவை கிடைத்தும் அதை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன கல்பனா நாயக் பஞ்சாப் ஆந்திரா தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார் மேலும் இவர் கடந்த வருடம் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்துள்ளார்
உதவி ஆய்வாளர் தேர்வில் நடந்த முறைகேடு
கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை மே மாதத்தில் வெளியிடப்பட்டது அந்த அறிவிக்கையில் நடத்தப்பட்ட தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது இதனை அடுத்து இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து இட ஒதுக்கீடு கடைபிடிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய ஆணையிட்டது இதற்குப் பிறகு புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது ஆனால் அதிலும் குளறுபடிகள் இருப்பதால் புதிய பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது ஆனால் அதில் எந்தவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை
தீ பற்றி எரிந்த ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம்
இந்த சூழ்நிலையில் தான் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அந்த முறைகேடுகள் குறித்த விரிவான அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தயாரித்து அளித்ததாகவும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டை முன் வைத்தார் அதுமட்டுமின்றி சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் முறைகேடு பற்றியும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் ஏற்பட்ட இட ஒதுக்கீடு முறைக்கேடு பற்றியும் குற்றச்சாட்டை முன் வைத்தார்
இந்த குற்றச்சாட்டை ஏடிஜிபி கல்பனா நாயக் முன்வைத்த சில தினங்களிலேயே சென்னை எழும்பூரில் உள்ள தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை அவர் அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கல்பனா நாயக் அலுவலகம் தீப்பற்றி எரிந்துள்ளது
இந்தத் தீ விபத்து கொலை முயற்சியா
கல்பனா நாயக்கின் அலுவலகம் தீ பற்றி எரிந்ததை அடுத்து இந்த தீ விபத்து சீருடை பணியாளர் தேர்வாணையம் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் வந்த கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை கல்பனா நாயக் முன்வைத்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஆளும் கட்சிக்கு பெருங்குடச்சலையும் கொடுத்தது ஆனால் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின் கசிவு தான் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த தீ விபத்து குறித்த தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு கல்பனா நாயக் புகார் மனுவை முன் வைத்திருந்தார்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றம்
இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றியது தமிழக காவல்துறை மேலும் ஒரு பெண் ஏடிஜிபியின் உயிருக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது அவருக்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதில் சதி நடந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் திமுக அரசை விமர்சித்து இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர்
டிஜிபி அலுவலகத்தின் பதில்
இந்த விவகாரத்திற்கு 2025 பிப்ரவரி 3 இல் டிஜிபி அலுவலகம் பதிலளித்திருக்கிறது அதில் ஏடிஜிபி கல்பனா நாயகியின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தாலும் ஆபத்தும் இல்லை அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதே என்று விளக்கம் அளித்துள்ளது