Kathir News
Begin typing your search above and press return to search.

பாம்பன் பாலம் திறப்பு எப்பொழுது? தமிழகத்திற்கு மோடி அரசு கொடுத்த தனி கவனம்.!

பாம்பன் பாலம் திறப்பு எப்பொழுது? தமிழகத்திற்கு மோடி அரசு கொடுத்த தனி கவனம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Feb 2025 11:21 PM IST

பாம்பன் பாலத்தை மோடி திறந்து வைப்பார், ராமேஸ்வரம் பாம்பன் பால பணிகள் முழுதும் நிறைவடைந்து விட்டன. பாம்பன் பாலத்துக்கான அனைத்துச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன ரயில்வே பாதுகாப்பு ஆணையம் எழுப்பிய சந்தேகங்களுக்கு நாட்டின் முதலாவது செங்குத்தான தூக்கு கடல் பாலம் எனவும் நாட்டின் தனித்துவமான பாலம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைப்பார் திறப்பு விழாவுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறும் போது,பயணியர் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரை எழும்பூர் இடையே நான்காவது புதிய ரயில் பாதை பணி அடுத்த இரண்டு மாதங்களில் முடியும்.


மேலும் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் 50 சதவீத பணிகளை இந்த நிதி ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகத்திலும் நமோ பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெற்கு ரயில்வேயில் ரயில் விபத்துக்களை தவிர்க்க 14 60 கிலோமீட்டர் தூரம் 'கவச்' தொழில்நுட்பம் நிறுவத்திட்ட மிட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 601 கி.மீ.,தூரம் நிறுவ டெண்டர் வெளியிட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக நேற்று அவர் அளித்த பேட்டியில், மத்திய பட்ஜெட்டில் ரயில்வேயில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த 1.16 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் பழைய ரயில் பாதைகள் அனைத்தும் மாற்றப்படும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 நமோ பாரத் ரயில்களும், 100 அம்ரித் பாரத் ரயில்களும், 200 வந்தே பாரத் ரயில்களும் இயக்க பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1000 பாலங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. 200 கிலோமீட்டர் தூரத்திற்குள் முக்கிய நகரங்களுக்கு இடையே, 'நமோ பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் 6626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏழு புள்ளி ஐந்து மடங்கு அதிகம். மேலும் 22 ரயில் பாதை திட்டங்கள் 33 467 கோடி ரூபாயில்,நடந்து வருகின்றனர்.

இது தவிர சென்னை எழும்பூர் மதுரை ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்களில் 1896 கோடி ரூபாய் செலவில், சர்வதேச தரத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் 1200 முன்பதிவு இல்லாத பெட்டிகள் தயாரித்து ரயில்களில் இணைத்து இயக்கப்படுகின்றன அடுத்த சில ஆண்டுகளில் 14000 முன்பதிவு இல்லாத பெட்டிகளை தயாரித்து இணைக்கவுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

Input & Image Courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News