Kathir News
Begin typing your search above and press return to search.

வங்கதேசத்தின் ஆதிக்கத்தை உடைக்கும் இந்தியாவின் "கலாதான்" ஸ்கெட்ச்..வங்க கடலுக்கே இனி நாங்கதான்..!

வங்கதேசத்தின் ஆதிக்கத்தை உடைக்கும் இந்தியாவின் கலாதான் ஸ்கெட்ச்..வங்க கடலுக்கே இனி நாங்கதான்..!
X

SushmithaBy : Sushmitha

  |  22 May 2025 4:51 PM IST

வங்கதேசத்தில் சீனாவின் போக்கு

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்ட தாக்குதல் இயக்கு பிறகு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் எந்த ஒரு நாட்டையும் இந்தியா ஆதரிக்கவில்லை அதில் சீனாவும் வங்கதேசமும் அடங்கும். வங்கதேசத்தில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு தொடர்ச்சியாக சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது, அதோடு பஹல்காமில் தாக்குதல் நடந்ததற்கு இந்தியா பாகிஸ்தான் மீது பதில் தாக்குதலை நடத்திய பொழுது நாங்கள் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்றுவோம் என வங்கதேசத்தில் இருக்கக்கூடிய ஒரு மூத்த அதிகாரி பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது, முன்னதாக சீனாவுடன் பேசிய வங்கதேச மூத்த ஆலோசகர் சீன பயணத்தின் பொழுது வடகிழக்கு இந்தியாவோட முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அதிக முதலீடுகளை ஈர்க்கிர வகையில பேசி இருந்த பேச்சும், நாங்கதான் வங்கதேசத்தோடு பாதுகாவலர்களாக இருக்கிறோம் என பேசி இருந்தார். இப்படி தொடர்ச்சியாக வங்கதேசம் வடகிழக்கு மாநில பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்துவதோடு தங்கள் ஆதிக்கத்தை அங்கு காட்டுவது போன்ற நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறது.

இதனால் வங்கதேசத்தை தவிர்த்து வடகிழக்கு மாநிலங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா இருந்து வருகிறது. அதனை தொடர்ந்தே தற்போது கலாதான் பல்முனை போக்குவரத்து திட்டம் பற்றிய பேச்சும் நடவடிக்கையும் வேகமெடுத்து உள்ளது. இந்த திட்டம் கடந்து 2008 ஆம் ஆண்டு மியான்மர் மற்றும் இந்தியாவிற்கிடையே ஏற்படுத்தப்பட்டது, மேலும் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கப்பட்டது அதோடு வங்கதேசத்தை சாராமல் மியான்மரோடு இணைந்து எப்படி வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது என்பதுதான் இந்த திட்டத்தின் சாரம்சமாக உள்ளது. சீனாவில் இருந்து அதிக முதலீடுகள் செல்வதாலும் வடகிழக்கு பிராந்தியத்தின் மீது வங்கதேசத்தின் பார்வை எப்பொழுதுமே இருந்து வருவதாலும் வடகிழக்கு பகுதிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சிலிகுரி சிக்கல்

ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக தாமதம் முன் சிக்கலும் இருப்பதற்கு காரணம் மிகவும் சிக்கலான இடங்களை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் எல்லையாக உள்ள சிலிகுரி 22 கிமீ இடைவெளியில் வங்கதேசத்தின் எல்லையை ஒட்டியும் சீனாவின் எல்லையை ஒட்டியும் உள்ள பகுதியாகும் இதனால் மிகவும் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாக சிலிகுரி உள்ளது. இது மட்டும் இன்றி வங்கதேசத்தின் மிகவும் பழமையான விமான தளமும் முதலாம் உலகப் போரின் பொழுது முக்கிய விமான தளபமாக இருந்த லால்முனிர் ஹாட் விமானத்தளம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அதை சுற்றி உள்ள பல வர்த்தகங்களில் சீனாவின் முதலீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த விமான தளத்தை சீனா கைப்பற்றக் கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை சீனா இந்த விமான தளத்தை கைப்பற்றினால் சிலிகுரி பகுதியில் இருந்து வெறும் 108 கிலோமீட்டரில் இந்த விமான தளம் உள்ளது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் தான் கலாதன் பல்முனை போக்குவரத்து திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கலாதன் பலமுனை போக்குவரத்து திட்டத்தின் செயல்பாடு

கொல்கத்தாவை மையமாக வைத்து சிலிகுரி வழியாக வடகிழக்கு மாநிலங்கள் அடைய வேண்டும் என்றால் கிட்டதட்ட 1,500 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. அதே தொலைவில் தற்போது கடல் வழியாகவும் நாம் பயணம் மேற்கொண்டு வடகிழக்கு பிராந்தியத்தை அடையலாம் என்பதை தான் இந்த திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது கொல்கத்தா துறைமுகத்திலிருந்து மியான்மரில் சித்வே துறைமுகத்தை 539 கிலோமீட்டர் தூரத்தில் கடல் மார்க்கமாக வர்த்தக பொருட்கள் அடையும், அதாவது ஏற்கனவே சிலிகுரி அதிக பதட்டத்தை சந்தித்து வருகிறது இதில் பொருட்களும் அவ்வழியாக எடுத்துச் சொல்லப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசலை சிலிகுரி சந்திக்கும் அதனைத் தவிர்த்து கடல் மார்க்கமாகவும் வடகிழக்கு பிராந்தியத்தை வர்த்தக பொருட்கள் அடையலாம் என்பதை இந்த திட்டம் எளிதாக கையாண்டுள்ளது.

சித்வே துறைமுகத்தை பொருட்கள் அடைந்தவுடன் மிசோரத்தை அடைவதற்காக கலாதான் என்ற நதி வழியாக பலேத்வா என்ற இடத்திற்கு 158 கிலோமீட்டருக்கு கடல்மார்க்கமாக பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய எல்லை பகுதியிலுள்ள சொரின்புய் என்ற இடத்தை 110 கிலோமீட்டரில் சாலை மார்க்கமாக அடைய வேண்டிய நிலையில் உள்ளது இதில் 50 கிலோ மீட்டருக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டது. சொரின்புய்யை அடுத்து 88 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு லாங்தலாய் என்ற இடத்தை அடைந்து, 244 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மிசோரத்தின் தலைநகரமான அய்சால்லை வர்த்தகப் பொருட்கள் அடையும். இதற்குப் பிறகும் சில்சார் என்ற அசாம் பகுதியை சென்றடையும், இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிற நிலையில் சில்சாரில் இருந்து 22,000 கோடி ரூபாய் மதிப்பில் மேகாலயா தலைநகர் ஷில்லாங் பகுதியையும் இணைக்ககூடிய திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. மொத்தமாக இந்த திட்டம் கலாதான் நதிக்கரையின் வழியாக ஆரம்பிக்கப்படுவதால் இந்த திட்டத்திற்கே கலாதான் பல்முனை போக்குவரத்து திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மொத்தமாக கொல்கத்தாவிலிருந்து வடகிழக்கு பிராந்தியம் முழுவதையும் இணைக்கும் திட்டமாக இந்த திட்டம் மாறுகிறது. ஏனென்றால் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா பகுதிகளை இந்த திட்டம் இணைப்பதால் அங்கிருந்து மணிப்பூர் மற்றும் நாகலாந்து போன்ற பகுதிகளுக்கும் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News