Kathir News
Begin typing your search above and press return to search.

சீருடையுடன் ஹிஜாப் அணிய கேரள அரசு அனுமதி மறுப்பு - பா.ஜ.க ஆளும் கர்நாடகத்தை பார்த்து மட்டும் பொங்கும் தமிழக ஊடகங்கள்!

No-hijab-with-student-police-cadets-uniform-Kerala

சீருடையுடன் ஹிஜாப் அணிய கேரள அரசு அனுமதி மறுப்பு - பா.ஜ.க ஆளும் கர்நாடகத்தை பார்த்து மட்டும் பொங்கும் தமிழக ஊடகங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Feb 2022 7:35 AM GMT

கேரளாவில் காவல் துறையினர் சார்பில், "மாணவர் போலீஸ்" என்ற தன்னார்வ படை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பங்காற்றி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களை சமூகத்தில் எதிர்காலதலைவர்களாக்குதல், சட்டம், ஒழுக்கம், குடிமை உணர்வு, சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சேவை செய்தல் போன்ற நோக்கத்துடன் மாணவர் போலீஸ் படை திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ போலீஸ் படையில் சேரும் மாணவ மாணவிகளுக்கு சீருடையும் வழங்கப்படுகிறது.

சீருடையுடன் சேர்த்து ஹிஜாப் அணியவும் அனுமதிக்க வேண்டும் என 8 ஆம் வகுப்பு பயிலும் முஸ்லீம் மாணவி ஒருவர் விடுத்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்துள்ளது. சீருடையானது மாணவர்கள் பாலின நீதி, இன மற்றும் மத சார்பற்ற விஷயங்களில் பாகுபாடின்றி பணியாற்றும் வகையில் இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற சீர்திருத்தம் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளது.

கேரள அரசால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து எதிர்வினையாற்றாத ஊடகங்கள், கர்நாடக பள்ளி சம்பவத்தை மட்டும் ஊதி பெரிதாக்கி வருகின்றன. இப்போதும் கூட அங்கே பள்ளி வகுப்பறைக்குள் தான் பார்தா அணியக்கூடாது என்கின்றனரே தவிர, பள்ளி வளாகத்தில் அணிய தடை விதிக்கப்படவில்லை. ஆறு மாணவிகள் வகுப்பறைகுள்ளும் அணிவேன் என்று உண்டாக்கிய சர்ச்சை இவ்வளோ பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.

பாஜக எதிர்ப்பு போக்கை கடைபிடிக்கும் தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களுக்கு, தீனி போடும் விடயமாக மாறிவிட்டது. கேரளா என்றால் வாய் திறக்காதவர்கள், கர்நாடகாவிற்கு மட்டும் பொங்குவது ஏன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News