Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் திடீரென அதிகாலையில் இறங்கிய என்.ஐ.ஏ - பின்னணி என்ன?

சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் திடீரென அதிகாலையில் இறங்கிய என்.ஐ.ஏ - பின்னணி என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jun 2022 8:45 AM GMT

சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை மண்ணடி இப்ராஹிம் முதல் தெருவில் உள்ள தனியார் இல்லத்தில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சாதிக்பாட்சா விற்கு சொந்தமான தற்காப்பு மையத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது, சோதனை நடைபெற்று வரும் சில இடங்களில் தடை செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் ஹார்டு டிஸ்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த வழக்கில் தொடர்புடைய இர்பான் என்பவரது மாமனார் வீடு காரைக்கால் சுண்ணாம்பு காரை தெருவில் உள்ளது இங்கு இன்று அதிகாலை சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினார்கள் இந்த சோதனையில் பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் பிரயோக லேப்டாப்பில் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர் தங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தடயங்கள் குறித்து புலனாய்வு அதிகாரிகள் வீட்டில் இருந்த அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல் மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். மயிலாடுதுறை அருகே நீடூரில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய சாதிக் பாஷா என்ற இக்காமா பாஷா உள்ளிட்ட 5 பேரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News