Kathir News
Begin typing your search above and press return to search.

'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்பது தி.மு.க கொள்கை - யார் அந்த 'தேவன்'.!

'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்பது தி.மு.க கொள்கை - யார் அந்த 'தேவன்'.!

ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது தி.மு.க கொள்கை - யார் அந்த தேவன்.!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  25 Nov 2020 10:13 AM GMT

தி.மு.க தன்னை கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட கட்சியாக காட்டிக் கொண்ட போதும், ஓட்டுப் போடுபவர்களும் கட்சி உறுப்பினர்களும் பல்வேறு மதங்களைஞ் சேர்ந்தவர்களாக இருப்பதால் 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற கொள்கையை கடைபிடிப்பதாக கூறப்படுவதுண்டு. அதன் இந்து விரோதப் போக்கை சுட்டிக் காட்டும் போதும் இதே பதில் தான் தரப்படுகிறது.

ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமைப் பின்பற்றுபவர்களுக்கு வேண்டுமானால் இது ஒத்து வரலாம். அவர்களுக்கு கடவுள் ஒருவர் தான். ஆனால் வாக்காளர்களாகவும், கட்சி உறுப்பினர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை இந்துக்களுக்கு இது எப்படி ஒத்து வரும்‌ என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எனினும் வாய் விட்டுக் கேட்பார் இல்லை.

இந்துக்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கலாம். ஆனால் அவர்கள் பிற தெய்வங்களை அவமதிப்பதோ நிந்தனை செய்வதோ இல்லை. அனைத்துக் கோவில்களுக்கும் சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபடுகின்றனர். அப்படி இருக்க மதச்சார்பற்ற கட்சி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் தி.மு.க ஏன் இப்படி ஒரு கொள்கையை வகுத்தது?

இந்தக் கேள்விக்கு தி.மு.கவைத் தோற்றுவித்த அண்ணாதுரையின் பேச்சுக்களிலும் புத்தகங்களிலும் பதில் காணக் கிடைக்கிறது. தனது ஆரிய மாயை என்ற புத்தகத்தில்

"பேராசைப் பெருந்தகையே போற்றி பேச நா இரண்டு உடையாய் போற்றி

தந்திர மூர்த்தி போற்றி

தாசர் தம் தலைவா போற்றி

வஞ்சக வேந்தே போற்றி

வன்கண நாதா போற்றி

கொடுமை குணாளா போற்றி

கோழையே போற்றி போற்றி

பயங்கொள்ளிப் பரமா போற்றி

படுமோசம் புரிவாய் போற்றி

சிண்டு முடிந்திடுவோய் போற்றி

சிரித்திடு நரியே போற்றி

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி

உயர் அநீதி உடையோய் போற்றி.." என்று பிராமணர்களை தூஷிப்பதாகக் கூறி இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி இருக்கிறார்.

எங்கிருந்து இவ்வாறு இகழும் நோக்கும் உத்வேகமும் அண்ணாவுக்கு கிடைத்தது? அதையும் அவரே சொல்கிறார். Abbe J.A. Dubois என்ற பிரெஞ்சு மிஷனரி தன் புத்தகத்தில் அவர் பிராமணர்களைப் பற்றி எழுதியதைப் பின்பற்றியே இந்த பாசுரத்தை எழுதியதாக புத்தகத்தில் குறிப்பிடுகிறார். யார் இந்த Dubois? Missions Étrangères என்ற பெயரில் இந்தியாவில் உள்ள இந்துக்களை மதமாற்றுவதற்காக வந்தவர் தான் Dubois. Hindu Manners Customs and Ceremonies என்ற புத்தகத்தில் தான் அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

தனது மத மாற்ற முயற்சிகளை தவிடுபொடியாக்கிய பிராமணர்கள் மீது இருந்த வெறுப்பில் Dubois எழுதிய புத்தகம் இது. அவர் 1823 ஆம் ஆண்டு இந்துக்களை மதம் மாற்றுவது இயலாத காரியம் என்று தனது சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்து மற்றும் பிராமண வெறுப்பைக் கக்கும் கருத்துக்களைக் கொண்ட‌ தனது புத்தகங்களை அவர் விதையாக விட்டுச் சென்றிருக்கிறார். அவரது புத்தகத்தில் இருந்துதான் தி.மு.கவைத் தோற்றுவித்த அண்ணாதுரையின் இந்து வெறுப்பு மற்றும் பிராமண வெறுப்பு தோன்றுகிறது.

அந்த வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக, "நாலு தலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி, ஆனைமுக சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலைமீது தையலை தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷிபத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளில் உள்ளனவே.!"

"நாம் இந்து என்று கூறிக் கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே, இந்தச் செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே.! இந்தக் கண்றாவிக்கு என்ன செய்வது? இந்த ஆபாசத்தை தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவே தான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்" என்று இந்துக் கடவுள்களை ஆபாசமாகச் சித்தரித்து வசைபாடி இருக்கிறார்.

பின்னர் எந்த மாதிரி தெய்வத்தை தான் வணங்கக் கூடும், எந்த மாதிரி தெய்வத்தை தான் ஏற்றுக் கொள்ளக் கூடும் என்று அவரே விவரிக்கிறார். "நமக்கு நாலு, ஆறு, 48 கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும்! உருவமற்ற தேவன்! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசை கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள்! அப்பம் பாயாசம் அக்காரவடிசில் கேட்காத சாமி...தரும் தேவதைகள் வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே நாம் நம்மை இந்து அல்ல வென்று கூறுகிறோம்" என்று எழுதி இருக்கிறார்.

இந்து கடவுள்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று திராவிடர் கழகத்தினர் கூறுவது அவர்களது சொந்தக் கருத்தா? அது தான் இல்லை. மேற்சொன்ன மிஷனரி Dubois தனது புத்தகத்தில் இப்படி எழுதி இருக்கிறார். 'இந்துக்களை தனி ஒரு இனமாக மாற்ற வேண்டும் என்றால் அவர்களது நாகரிகம், மதம், சமூக கட்டமைப்பு ஆகியவற்றின் அடித்தளத்தை அழிக்க வேண்டும்.'

'அழித்து அவர்களை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மாற்ற வேண்டும்.' என்று தமிழ் இந்துக்களை மதம் மாற்ற முடியாத தனது இயலாமையை வெளிப்படுத்தி திட்டமும் வகுத்துத் தந்திருக்கிறார். இதைத் தான் அன்றில் இருந்து இன்று வரை பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகமும் அதிலிருந்து பிரிந்த தி.மு.கவும் செய்து கொண்டிருக்கின்றன.

இந்துக்களை தங்களது மதம், வாழ்வியல், கலாச்சாரத்தை வெறுக்கச் செய்து அவர்களை ஆபிரகாமிய மதங்களைப் பின்பற்றச் செய்வது தான் இவர்களது நோக்கம். தேவர் சமாதியில் திருநீற்றைக் கீழே கொட்டுவதும் இதனால் தான், திருச்சியில் பூர்ண கும்ப மரியாதையை மறுப்பதும் இதனால் தான். இப்போது புரிகிறதா யார் அந்த 'ஒரே தேவன்' என்று?

நன்றி : @RealityCheckInd

Next Story
கதிர் தொகுப்பு
Trending News