Kathir News
Begin typing your search above and press return to search.

கொலையாளியை கட்டி தழுவிய தி.மு.க, கொலையுண்டவரின் குடும்பத்திற்கு உதவிய பா.ஜ.க - வெளிப்பட்ட இரண்டு முகங்கள்

பிரதமரை கொன்ற கொலையாளியை கட்டிப்பிடித்து அழைத்தால் தி.மு.க எனவும் அந்த படுகொலை சம்பவத்தில் இறந்த காவலரின் குடும்பத்தை அழைத்து உதவி செய்தால் பா.ஜ.க எண்ணவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

கொலையாளியை கட்டி தழுவிய தி.மு.க, கொலையுண்டவரின் குடும்பத்திற்கு உதவிய பா.ஜ.க - வெளிப்பட்ட இரண்டு முகங்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  12 July 2022 10:57 AM GMT

பிரதமரை கொன்ற கொலையாளியை கட்டிப்பிடித்து அழைத்தால் தி.மு.க எனவும் அந்த படுகொலை சம்பவத்தில் இறந்த காவலரின் குடும்பத்தை அழைத்து உதவி செய்தால் பா.ஜ.க எண்ணவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

௯௦'களின் ஆரம்பத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகம் வந்திருந்த பொழுது திட்டமிட்டு குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இந்த படுகொலை சம்பவத்தின் நீட்சியாக பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சில தினங்களுக்கு முன்பு பேரறிவாளன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வெளியில் விடுவிக்கப்பட்டார், பேரறிவாளன் வெளியில் வந்தவுடன் அதனை வைத்து அரசியல் செய்யும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க பேரழிவாளனை அழைத்து கட்டி அணைத்து ஆரத்தழுவி வரவேற்றது.

பேரறிவாளன் குற்றமற்றவர் என நீதிமன்றம் கூறாத நிலையில் குற்றவாளி பேரறிவாளனை அழைத்து தமிழக முதல்வர் ஸ்டாலினே ஆறத் தழுவி கட்டி வரவேற்றது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மத்தியில் தமிழகத்தை தலை குனிய வைத்தது. ஒரு பிரதமரை கொன்றவரை அழைத்து கட்டி அணைத்து வரவேற்றதன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு, 'பார்த்தீர்களா எங்கள் மாநிலத்தின் நிலையை' என கூறுவது போல் அமைந்தது இதனை பல அரசியல் தலைவர்களும் கண்டித்தனர். இருப்பினும் தி.மு.க பேரழிவாளனை அழைத்து வைத்து விருந்து வைத்து கொண்டாடி அதனை படம் பிடித்து ஊர் முழுவதும் பரப்பியது.

இந்த சூழலில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்களின் குடும்பம் மற்றும் அந்த குண்டுவெடிப்பில் இருந்த பிறரின் குடும்பங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளை என்ன இப்படி இருக்கிறது என வெறுத்துப் போய் மனம் நொந்து போயிருந்தனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி படுகொலையின் போது இறந்த எட்டு காவலர்களில் ஒருவரான தர்மன் என்பவரின் குடும்பமும் இதில் அடக்கம்.

இந்த சூழலில் தர்மன் அவர்களின் பேத்தி அக்ஷிதா பேட்மிண்டன் வீராங்கனையாக இருப்பதும் அவர் இந்தியா முழுவதும் சென்று தனது விளையாட்டுக்காக பயிற்சி எடுக்க பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருவதையும் அறிந்த பா.ஜ.க'வின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு நலன் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அதற்கான வேலைகளில் உடனே இறங்கினார்.

நேரில் சென்று தர்மன் அவர்களின் குடும்பத்தை சந்தித்து தர்மனின் பேத்திக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உண்டான செலவை பா.ஜ.க ஏற்கும் என அறிவித்தது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தை கமலாலயம் அழைத்து வந்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகையை வழங்குவதற்கு உறுதி அளித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இது அனைவரின் மத்தியிலும் சிறப்பு கவனம் பெற்றது மட்டுமல்லாமல் வரவேற்பையும் பெற்றது.

பிரதமரை போன்ற கொலையாளியை அழைத்து அரத்தழுவி கட்டி வரவேற்று அதனையும் அரசியல் ஆக்கிய தி.மு.க, பிரதமர் படுகொலையில் இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு முன்னேற்றத்திற்காக உதவி செய்த பா.ஜ.க என இரு வேறு வேறு நிலைப்பாடுகளும் மக்களுக்கு புரிந்தது. இந்நிலையில் கொலையாளியை கட்டி அணைத்தால் அது தி.மு.க எனவும் இறந்தவரின் குடும்பத்திற்கு உதவியாக நின்றால் அது பா.ஜ.க எனவும் மக்கள் மத்தியில் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News