Kathir News
Begin typing your search above and press return to search.

ஒடிசாவின் கோர ரயில் விபத்து.. மக்களுக்கு உதவ களம் இறங்கிய 1,000 மேற்பட்ட RSS, ABVP சேவகர்கள்..

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி மக்களுக்கு உதவும் 1,000 மேற்பட்ட RSS, ABVP சேவகர்கள்.

ஒடிசாவின் கோர ரயில் விபத்து.. மக்களுக்கு உதவ களம் இறங்கிய 1,000 மேற்பட்ட RSS, ABVP சேவகர்கள்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Jun 2023 3:56 PM GMT

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகிறது அறிக்கைகள்.

இந்தியாவின் பிரதமர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் உள்ளிட்ட பலரும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்தனர் மேலும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்து கொண்டார்கள். இந்த ஒரு போராட்ட களத்தில் தான் தற்பொழுது மனிதாபிமான அடிப்படையில் மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும். மேலும் விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவகர்களான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அகில பாரத் வித்யார்த்த பரிஷத் என்று அழைக்கப்படும் ABVP ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் உதவிகளை செய்ய தொடங்கி வருகிறார்கள். குறிப்பாக விபத்து நடைபெற்ற நேரத்திலிருந்து தற்போது வரை மும்மரமாக இத்தகைய அமைப்பை சார்ந்த இளைஞர்கள் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை செய்து வருகிறார்கள்.


விபத்து இரவு நேரத்தில் நடந்ததன் காரணமாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? எத்தனை பேர் இன்னும் சிக்கி இருக்கிறார்கள்? என்பது தற்போது வரை விசாரிக்கப்பட்டு தான் வருகிறது. அதற்காக தற்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ABVP அமைப்பைச் சேர்ந்த சேவகர்கள் தெருக்களில் இறங்கி தங்களால் ஆன பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணுவதற்கு 600க்கும் மேற்பட்ட RSS அமைப்பை சேர்ந்த சேவகர்கள் இவர்கள், பல்வேறு நபர்களுக்கு மற்றும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அவர்களை அடையாளம் காட்டுவதற்கு உதவி வருவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி லட்சுமி என்பவர் தகவலை பகிர்ந்து இருக்கிறார்.


அதுமட்டுமில்லாமல் தேவையான இடங்களில் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கும் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வரும் நபர்களை அவர்களுடைய உறவினர்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் பல்வேறு செயல்களையும் செய்து வருகிறார்கள். விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் மற்றும் அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் கொடுக்கும் வகையில் செல்போன் சேவைகள் போன்ற பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி மேலும் கூறி இருக்கிறார்.


அடிப்படை தேவைகளான பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் வழங்கும் இரத்த வங்கி சேவைகளும் செயல் படுகிறது. 24/7 மணி நேரமும் பாதிக்கப்பட்ட இடங்களில் RSS மற்றும் ABVP அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். எங்களால் ஆன அளவிற்கு மனித உயிர்களை காப்பதற்கு நாங்கள் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம். இங்கு நிலமை மீண்டும் நல்லபடியாக திரும்பும் வரை நாங்கள் அனைத்து உதவிகளும் தேவைப்படும் மக்களுக்கு 24 மணி நேரமும் உதவிகளை செய்ய தயாராக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Organiser News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News