Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான்: கடந்த வருடத்தில் மட்டும் தாக்கப்பட்டு, இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை தெரியுமா?

பாகிஸ்தானின் இந்து சமூகங்கள், அவர்களின் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தான்: கடந்த வருடத்தில் மட்டும் தாக்கப்பட்டு, இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை தெரியுமா?

Saffron MomBy : Saffron Mom

  |  6 Aug 2021 11:45 PM GMT

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டாத நாளில்லை. ஆனால் பாகிஸ்தானில் உயிர்வாழவே போராடும் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையினரின் நிலையை சரிபார்க்க அவர் எப்போதாவது முயற்சித்ததாக தெரியவில்லை.

பாகிஸ்தானில் குறிப்பாக சிறுமிகள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கட்டாயத் திருமணம் ஆகிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும், வெறும் 2.14% (இந்து மக்கள் தொகை) உள்ள மக்கள் மீதான கொடுமைகள் அத்துடன் நிற்கவில்லை. பாகிஸ்தானின் இந்து சமூகங்கள், அவர்களின் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் எத்தனை இந்து கோவில்கள் தாக்கப்பட்டது?

போங்கில் உள்ள விநாயகர் கோவில்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் அழிக்கப்பட்டு, எரிக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங் நகரில் புதன்கிழமை, ஒரு கும்பல் கோயிலைத் தாக்கியது. குச்சிகள், கற்கள் மற்றும் செங்கற்களால் அந்தக் கோவில் தாக்கப்பட்டது. கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது மற்றும் சிலைகள் சிதைக்கப்பட்டன.

இஸ்லாமாபாத்தின் முதல் இந்து கோவிலாக இருக்க வேண்டிய கிருஷ்ண பகவான் கோவில் கட்டுமானம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்களால் கோவிலின் எல்லைச் சுவர்கள் இடிக்கப்பட்ட பின்னர், கட்டுமானத்தை நிறுத்துவதற்கு மூலதன மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட வேண்டியிருந்தது.

கோவில் கட்டுமானம் நகர அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டது, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கோவில் கட்டுமானம் செய்யலாமா என்ற பிரச்சினை எழுந்தது. இந்து பஞ்சாயத்து இப்போது தனது சொந்த நிதியிலிருந்து கோவிலைக் கட்ட முயற்சிக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், பாகிஸ்தானின் லியாரியில், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பேயிருந்த அனுமன் கோவிலை ஒரு கட்டடம் காட்டுபவர் இடித்ததாக கூறப்படுகிறது. இந்து உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, கட்டுமானப் பணியின் போது கோவிலைத் தொடமாட்டோம் என்று பில்டர் உறுதியளித்திருந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று கோவில் தரைமட்டமாக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி வசிக்கும் 18 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தக் கோவிலில் தரிசனம் செய்ததாகக் கூறினர்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நாகர்பார்கரில் உள்ள ஸ்ரீ ராமர் கோவில் அழிக்கப்பட்டது.



பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அனிலா குல்சார், சிந்துவில் 428 இல் 20 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறினார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் ஒரு இந்து கோவிலை எரித்து அழித்தனர்.

கராக்கின் தெரி யூனியன் கவுன்சிலில் அமைந்துள்ள கிருஷ்ணா துவாரா கோவில், நூற்றுக்கணக்கானவர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. பிறகு கட்டிடத்திற்கு தீ வைத்து, பின்னர் அதை சுத்தியல் போன்ற ஆயுதங்களால் இடித்ததனர்

1947 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு இப்பகுதியில் வசித்த முஸ்லீம்கள் இக்கோவிலை மூடிவிட்டனர். 2015 ஆம் ஆண்டில் தான் இக்கோவில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி மீட்டெடுக்கப்பட்டது.



பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா அரசாங்கம், இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்து கோவிலை எரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 350 பேர் மீதான வழக்குகளை, இந்து சமூகம் கும்பலை மன்னித்ததாகக் கூறி வாபஸ் பெற முடிவு செய்தது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 100 ஆண்டு பழமையான இந்து கோவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெறித்தனமான கும்பலால் தாக்கப்பட்டது. சுமார் 12 பேர் கொண்ட கும்பல் கோவிலுக்குள் நுழைந்து பிரதான கதவு, மேல் மாடியில் உள்ள மற்றொரு கதவு மற்றும் படிக்கட்டு ஆகியவற்றை சேதப்படுத்தியது.

கடந்த ஆண்டு ஜனவரியில், மற்றொரு இஸ்லாமிய கும்பல் சிந்து பாகிஸ்தானின் தர்பார் சக்ரோவில் உள்ள மாதா ராணி பாத்தியானி தேவி கோயிலை அடித்து நொறுக்கியதாகவும், இந்துக்களின் புனித புத்தகங்களுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த கும்பல் அம்மன் சிலையை அவமதித்து சிலை முகத்தை கருப்பாக்கியது.




இந்தியா டுடே அறிக்கையின்படி, பாகிஸ்தானில் உள்ள 365 இந்து கோவில்களில், 13 மட்டுமே Evacuee ட்ரஸ்ட் சொத்து வாரிய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது, 65 கோவில்கள் பொறுப்பு அங்கே துன்பம் மற்றும் வறுமையில் உழலும் இந்து சமூகத்திடம் உள்ளன. மீதமுள்ளவை நில மாஃபியாக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளன.


Cover Image Courtesy: DNA India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News