Kathir News
Begin typing your search above and press return to search.

பான் கார்டு- ஆதார் கார்டு இணைக்கவில்லையா? என்ன ஆகும் தெரியுமா?

பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்காவிட்டால் ஜூலை 1இல் இருந்து அபராதம் செலுத்த வேண்டும்.

பான் கார்டு- ஆதார் கார்டு இணைக்கவில்லையா? என்ன ஆகும் தெரியுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 July 2022 2:24 AM GMT

ஆதார் மற்றும் பான் கார்டு புறக்கணிக்கப்பட்ட அரசாங்கம் அபராதம் விதிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தவகையில் ஜூலை 1ம் தேதியில் இருந்து இதனை செய்ய தவறியவர்கள் ரூபாய் 1000 அபராதமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படியே, NSDL போர்ட்டலில் சலான் எண். ஐடிஎன்எஸ் 280-ன் கீழ் இதற்கான தொகையை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அனைத்து இந்திய குடிமகனும் தனது ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு கட்டாயமாக அரசு வலியுறுத்தி வந்தது.


மார்ச் கடைசி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது இத்தகைய ஒரு சூழ்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2022 ஆண்டு இதற்கான நீட்டிப்பை தற்போது நீடித்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல் ஆதார்- பானை இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது. மேலும் ஏப்ரலில் இருந்து ஜூன் வரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.


இந்த அபராத தொகையை தற்பொழுது இரண்டு மடங்காக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே தற்போது இரண்டு மடங்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க படுவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது அடுத்த மார்ச் 31, 2023 ஆம் தேதிக்குள் இணைக்காவிடில் பான் கார்டு செயலிழக்க நேரிடலாம் மற்றும் வருமான வரிச்சட்டம் 1961 ன் கீழ் அனைத்து விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது. எனவே உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டால் எந்த ஒரு நடவடிக்கைக்கும் அதை பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News