Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் விழா - 7200 நபர்களின் பசியாற்றப்போகும் SG.சூர்யாவின் NAMO MEAL டீம்

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 72 இடங்களில் 7200 நபர்களுக்கு உணவு அளிக்கும் தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் நமோ மீல் குழு

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் விழா - 7200 நபர்களின் பசியாற்றப்போகும் SG.சூர்யாவின் NAMO MEAL டீம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Sept 2022 6:16 PM IST

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 72 இடங்களில் 7200 நபர்களுக்கு உணவு அளிக்கும் தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் நமோ மீல் குழு

"உணவு வழங்கப்பட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்" என்பதனை தாரக மந்திரமாகக் கொண்டு, தினமும் பல்வேறு வகையான நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர், "நமோ மீல்" (NAMO MEAL) குழுவைச் சேர்ந்தவர்கள். இந்த நல்லதொரு திட்டத்தின் மூலமாக, பல்வேறு நபர்களுக்கு, தினமும் வயிராற, விலை இல்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, 72 இடங்களில், 7 ஆயிரத்து 200 நபர்களுக்கு, உணவு வழங்கப்படும் என அதன் நிர்வாகி பிரதீப் அவர்கள் அறிவித்து உள்ளார். வழக்கமாக பிறந்த நாள் அன்று, பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடுவர். ஆனால் அதற்கு மாறாக, எளிய மக்களுக்கு விலை இல்லாமல் உணவு வழங்கி கொண்டாடுவதன் மூலமாக, அவர்களின் வயிறு நிரம்புவதுடன், மனதும் நிரம்பும்.

அவர்களுடைய வாழ்த்து, இந்தியப் பிரதமரை வாழ்வாங்கு வாழ வைப்பதுடன், நமது நாட்டிற்கு நல்லாட்சி கொடுக்க வைக்கும் எனவும், இத்தகைய முயற்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News