Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் - இருதரப்பு உறவுகளின் நிலை என்ன? ஓர் பார்வை!

பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் - இருதரப்பு உறவுகளின் நிலை என்ன? ஓர் பார்வை!

Saffron MomBy : Saffron Mom

  |  1 April 2021 11:19 AM GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பங்களாதேஷிற்கு விஜயம் செய்து திரும்பினார். அவரின் வருகையை எதிர்த்து பங்களாதேஷின் சில இஸ்லாமிய கும்பல்களும் அரசாங்கத்திற்கு எதிரான மாணவர்கள்களும் நடத்திய போராட்டங்கள் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசினாவிற்கு கண்டிப்பாக சங்கடத்தை ஏற்படுத்தியது.

டாக்கா பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இன்னும் பல மாவட்டங்களில் தீவிரமான இஸ்லாம் கூறுகளான Hefazat-e-Islam ஐ அடக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்தது. போலீஸார் துப்பாக்கிச்சூடுகளில் பல உயிர்கள் பறிபோயின.

பங்களாதேஷில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த சம்பவங்களை முடிந்த அளவு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. மேலும் பங்களாதேஷின் 1971 போர்க்குற்றங்களுக்காக தூக்கு மேடைக்கு அனுப்பி வைக்கப்பட்ட jamaat-e-islami என்ற அமைப்பின் இடம் தற்பொழுது இந்த ஹெபாசாட்டால் (Hefazat-e-Islam) நிரப்பப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு உதவும் திட்டங்களை தீட்ட வேண்டியது பங்களாதேஷ் அரசாங்கத்தின் கடமையாகும். கடந்த சில வருடங்களாக Hefazat-e-Islam அமைப்புக்கு பங்களாதேஷ் அரசாங்கம் இடமளித்தது அங்குள்ள மத சார்பற்ற சக்திகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

2015க்கு பிறகு தற்பொழுது தான் பங்களாதேஷிற்கு செல்லும் நரேந்திர மோடியின் விஜயம், அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் பலவிதங்களில் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது. மோடி தன்னுடைய நிலைப்பாட்டினை முழு விஜயத்தின் போதும் வெளிப்படுத்தினார்.

இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகள், பங்களாதேஷ் விடுதலைப்போராட்டம் 1971இல் நடந்த பொழுது தார்மீக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இந்தியா அளித்த உதவிகளையும் சுட்டிக்காட்டினார். பல வழிகளில் பங்களாதேஷில் திரு நரேந்திர மோடி மற்றும் சஷேக் ஹசீனாவின் தொடர்பு, பழைய தலைமுறைக்கு பங்களாதேஷின் அப்போதைய தலைவரான ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் இந்திரா காந்திக்கும் 1970களின் ஆரம்பத்தில் இருந்த நல்ல தொடர்பை நினைவுபடுத்தியது.

பங்களாதேசை பொருத்தவரை அவர்களுடைய 50 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ஒரு இந்திய தலைவர் சிறப்பு விருந்தினராக இருப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

திருமதி. இந்திரா காந்தி 50 வருடங்களுக்கு முன்னால் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் பங்களாதேஷின் விடுதலைக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினார். தற்பொழுது திரு நரேந்திர மோடி இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் உள்ள சுமுகமாக உறவில் இடையில் இருக்கும் பலவித தடைகற்கள் நீக்கப்படும் என உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலிமையாகவே இருக்கின்றன. சுகாதாரம், ஆற்றல், தொடர்பு, வளர்ச்சி, கூட்டுறவு ஆகிய ஐந்து முக்கியமான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கு இது முக்கியமான விஷயமாகும்.

இதனுடன் சேர்த்து எட்டு திட்டங்கள், சிலைபஹ்ரியில் இருக்கும் குதிபரியை புதுப்பித்தல், பங்களாதேஷின் முஜிப் நகரில் இருந்து மேற்கு வங்காளத்தில் இருக்கும் கொல்கத்தாவிற்கு சுதந்திர பாதை அமைத்தல், 1971ஆம் ஆண்டு போரில் மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு கல்லறை அமைத்தல், சிலகால்ட்டி மற்றும் ஹால்டய்பறி பகுதிகளுக்கு இடையில் ரயில் சேவைகளை துவங்கி வைத்தல், இந்தியாவிலிருந்து பங்களாதேஷிற்கு பரிசாக அளிக்கப்படும் 109 ஆம்புலன்ஸ்கள், இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் இரண்டு கிராம சந்தைகளை திறத்தல் ஆகிய இரண்டு அரசாங்கங்களும் மேற்கொள்ளும் இந்த திட்டங்கள் இந்த விஜயத்தில் சிறப்பு அம்சங்களாக இருந்தன.

இருநாடுகளிடையே பிரச்சனைகள், உதாரணமாக டீஸ்டா தண்ணீர் பங்களிப்பு விவகாரம், இந்திய எல்லை காவல் படை சம்பவங்கள் ஆகியவை தொடர்ந்தாலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவின் அடிப்படைகள் மாறாமல் உள்ளது. பங்களாதேஷின் வெளிநாட்டு கொள்கைகள் சமீப காலமாக மாறி வருகிறது.

சீனாவுடனான உறவுகள் வளர்ந்து வருகிறது. இந்த உறவுகளை குறித்து இந்தியாவிற்கு சரியான அபிப்பிராயம் இல்லை என்றாலும், இந்த விவகாரத்தில் நரேந்திரமோடிக்கு ஷேக் ஹசீனா உறுதியளித்தார். மேலும் ரோஹிண்யா அகதிகள் விவகாரத்தில் மியான்மர் அரசின் மீது அழுத்தங்கள் கொடுத்து பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியாவை பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது.

ஷேக் முஜிபூர் ரஹ்மானின் கல்லறைக்கு இந்திய பிரதமர் சென்றது இதில் ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும். ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலைவர் இந்தப் பகுதிகளுக்கு சென்றது இதுவே முதல் முறையாகும். 1975இல் படுகொலை செய்யப்பட்ட முஜிபூர் ரஹ்மானின் கல்லறை துங்கிபரவில் இருக்கிறது.

அவர் இறந்த பிறகு அவருக்கு இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட 'காந்தி அமைதிப் பரிசு' பங்களாதேஷிற்கு விடுதலை வாங்கித் தந்தவருக்கு இந்திய அரசாங்கம் தரும் மரியாதையை குறிக்கிறது. சக்தி தாரா மற்றும் கோபால்கஞ் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றதும் மோடியின் பங்களாதேஷ் விஜயத்தின் முக்கியமான பகுதியாகும்.

இது அங்குள்ள பங்களாதேஷ் இந்து சமூகத்திற்கு உறுதி அளிக்கும் விதத்தில் இருந்தது. பங்களாதேஷின் மாத்வ சமூகத்தினருடன் அவர் நடத்திய உரையாடலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்குவங்காளத்தில் இந்த சமூகத்தைச் சேர்ந்த கணிசமானவர்கள் வசித்து வரும் வேளையில், இது மேற்கு வங்காளத்தேர்தலில் பிரதிபலிக்க கூடும் என்ற குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி ஏற்கனவே முன்வைத்துள்ளார்.

பங்காளதேஷின் 50 ஆவது சுதந்திர தினத்துக்கு இந்திய பிரதமர் சென்று வந்தது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிப்படையுமோ என்ற பங்களாதேஷ் மக்களின் 2014 சந்தேகங்களுக்கு தற்பொழுது விடை கிடைத்திருக்கலாம். இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை நிலைத்திருக்கிறது.

With Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News