Kathir News
Begin typing your search above and press return to search.

மறைக்கப்பட்ட 1 லட்சம் கோடி ஊழல்.. பேச்சுப் பொருளான கள்ளச்சாராய மரணம்.. கிளம்பும் பகீர் தகவல்!

ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கத்தான் கள்ளச்சாராயம் மரணம் நிகழ்ந்து இருக்கிறதாக பகீர் குற்றச்சாட்டு.

மறைக்கப்பட்ட 1 லட்சம் கோடி ஊழல்.. பேச்சுப் பொருளான கள்ளச்சாராய மரணம்.. கிளம்பும் பகீர் தகவல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 May 2023 6:38 AM GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆறு பெயருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் விஷம் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது மட்டுமல்லாது செங்கல்பட்டு மாவட்டத்தில் சீதாயூர் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் சுமார் 4 பேர் இதே மாதிரியான அறிகுறிகள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார்கள். அவர்களும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி இறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


முதற்கட்ட விசாரணையில் 2 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவருமே ஒரே தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்து இருக்கலாம் என்றும், விஷ சாராயம் என்பது எத்தனால் மற்றும் மெத்தனால் கலக்கப்பட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அருந்தியதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் போது ஒருவர் சிறிது நேரத்திலேயே இறப்புகளை கூட சந்திக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒரு தகவல் காரணமாக விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த 10 பேரில் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் தொடர்ச்சியான வண்ணம் மது அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்காக அதிகமான தொகைகளை செலவிட்டு வருகிறது. அந்த வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நஷ்ட ஈடு திமுக தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் பகிர் தகவல் இருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த ஒரு அறிக்கை தான் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இவர் நேரடியாக அரசாங்கத்தை தாக்கி அந்த அறிக்கையில் தன்னுடைய கருத்தை முன்வைத்து இருக்கிறார். குறிப்பாக இது பற்றி இவருடைய அறிக்கையில் கூறும் பொழுது விஷமது கள்ளச்சாராயம் அருந்தி உரை நாளில் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கும் மரணச் செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையில் உண்டாக்கி இருக்கிறது அதற்கு என்னுடைய இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் கள்ளச்சாராயம் மெத்தனால், எத்தனால், வார்னிஷ் உள்ளிட்ட பல்வேறு போதையூட்டும் பொருட்களை அருந்தி ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காகவே தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தற்போது மதுவை கொள்முதல் செய்து, விற்பனை செய்து வருகிறது. இதற்காகத்தான் அரசே மது விற்பனை செய்து வருவதாக, மதுவிலக்கை அமல்படுத்தாமல் அன்று முதல் இன்று வரை ஆட்சியாளர்கள் நாயம் தெரிவித்து வருகிறார்கள்..


கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 19 மதுபான ஆலைகளில் உற்பத்தியாகும் அந்நிய நாட்டு மதுபானங்கள் டாஸ்மாக் என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 5500 க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் பார்கள் மூலமாக நடைபெறும் விற்பனைகள் மூலம் பெரிய அளவில் அரசுக்கு வருவாயும் இழப்பும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழலும் நடைபெற்று இருக்கிறது என்று தமிழக ஆளுநர் அவர்களை கடந்த பத்தாம் தேதி அன்று சந்தித்து மனு அளித்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு காப்பாற்றக்கூடிய வகையில் பூரண மதுவிலகை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழலை முற்றிலும் ஆக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அந்த மனுவில் நான் குறிப்பிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.


கலாச்சாராயம் காய்ச்சப்படுகிறது. கேரளாவில் இருந்து கடத்தி விற்கப்படுகிறது என்றெல்லாம் சுட்டிக்காட்டினால் எல்லா அமைச்சர்களும் வானத்திற்கும், பூமிக்கும் துதிப்பார்கள். முதலமைச்சரோ இவை அனைத்தும் விளம்பரத்திற்காக என்பார். ஆனால் இப்போது ஒன்றல்ல. மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த செய்தி வருவதற்கு முன்பாகவே இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சமும் சிகிச்சை பெற்றவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 50 ஆயிரத்தையும் திமுக அரசு தானம் செய்து இருக்கிறது. ஆனால் இதைப்போன்று அன்றாடம் தமிழகத்தில் நிகழும் மரணங்களுக்கு குறிப்பாக சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு விபத்து, இடி மின்னல் தாக்கி விவசாயிகள் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் நஷ்ட ஈடு பெறுவதற்கு நாம் தலைகீழாக நின்று போராட வேண்டி இருக்கும் நிலையில் அரசை தானாக முன்வந்து அதிக தொகையை நஷ்ட ஈடாக வழங்கியிருக்கிறது என்றால் அங்கு ஊழல் அரங்கேறி இருக்கிறது தான் அர்த்தம். எனவே கள்ளச்சாராய உயிர் இழப்பில் உள்ள சதிகளை வெளிக்கொண்டுவரவும், விஷமது மரணங்கள் விபத்துக்கள் அல்ல. டாஸ்மாக் நிறுவனத்தின் ஒரு லட்சம் ஊழலை மறைக்கும் செயல்கள்.. எனவே மதுவிலக்கை அமல்படுத்தாமல் டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்த காரணம், திட்டமிட்ட சதி என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: PT Party

Next Story
கதிர் தொகுப்பு
Trending News