மோடி திட்டத்தில் கட்டப்பட்ட வீடு இடித்து தரைமட்டம் - அமைச்சர் கே.என்.நேருவால் நடுத் தெருவுக்கு வந்த குடும்பம்!
மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டை இடித்துத் தரை மட்டம் ஆக்கிய திமுக அமைச்சரால் திருச்சியில் பரபரப்பு.
By : Bharathi Latha
தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது மத்திய அரசு வழங்கும் திட்டங்களில் பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட அனைவருடைய வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கிராமப்புறங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் திமுக ஆட்சியில் ஜல் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் நிதியை மட்டும் தாங்கள் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு நன்மை செய்யாமல் குறிப்பாக சில பகுதிகளில் குழாய்களே அமைக்காமல் திட்டம் நிறைவடைந்து விட்டதாக சொல்லும் ஊழல் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது திருச்சியில் இந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்கள் பயனடைந்து வந்திருக்கிறது.
இந்த ஒரு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் சிறிய அளவிலான வீட்டை கட்டி குடியேறி இருக்கிறது. இந்த வீட்டை தான் திமுக அமைச்சர் கே.என் நேரு தற்போது இடித்து தரைமட்டம் ஆக்கியிருக்கிறா எனவும், அந்த ஒரு சம்பவம் காரணமாக குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து இருக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த வீடு இடிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கதறும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை கண் கலங்க வைக்கும் செயலாக அமைந்து இருக்கிறது.
------Video------
திருச்சியை சேர்ந்த பாஜக சிறுபான்மை அணி துணைத் தலைவர் ஏ.ஆர்.பாஷா நேரடியாக களத்திற்கு சென்று குடும்ப மக்கள் கூறும் வேதனையை பதிவு செய்து இருக்கிறார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டதற்கு காரணம் மற்றும் இதன் பின்னணியில் திமுக அமைச்சர் கே என் நேரு இருக்கிறார் என அப்பகுதி மக்கள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவை நேரடியாக எதிர்க்காமல், பா.ஜ.க செய்யும் நலத்திட்டங்களை அனுபவித்து வரும் மக்களை இப்படி தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்றும் அவர் அந்த வீடியோவில் கேட்டு இருக்கிறார். KN நேரு அவர்கள் உடனடியாக இந்த குடும்பத்திற்கு உரிய உதவிகள் செய்தாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். உரிய தீர்வுகளை வழங்காவிட்டால் திருச்சி பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக கே.என் நேரு அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்று போராடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இடிக்கப்பட்ட வீட்டு தற்போது பாரத பிரதமர் மோடி அவர்களின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜக கொண்டு வந்த ஒரு திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வந்த மக்களை தற்போது வீடு இல்லாமல் திமுக ஆக்கி இருக்கிறது.
ஏற்கனவே இடிக்கப்பட்ட வீட்டிற்கு முறைப்படி பட்டா சிட்டா எல்லாம் இருப்பதாகவும், தாங்கள்தான் குடிசை பகுதியில் இருந்த இவர்களுக்கு பாஜக சார்பில் மோடி அவர்களின் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். வீட்டிற்கு உரிய முறைப்படி பட்டா இருந்தும் ஏன் இதை அரசாங்கம் இடித்து இருக்கிறது? மாநகராட்சி இதைப்பற்றி விசாரணை நடத்தாமல் இடித்து இருப்பதாகவும் திருச்சி பகுதியை சேர்ந்த பாஜக சேர்ந்தோர் மற்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.