அஞ்சலக செல்வமகள் சேமிப்பு திட்டம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதங்கள் உயர்த்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By : Bharathi Latha
அஞ்சலகத்தில் பல்வேறு திட்டங்கள் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டதில் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கின்றன. அந்த வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கிடைக்கும் தொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பது தற்போது பலருடைய கேள்வியாக எழுந்துள்ளது காரணம் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா தற்போது மக்களிடம் இருந்து வாங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வைத்தது. அதனால் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுமா? என்பது மக்களின் கேள்வியாக இருந்துவருகிறது.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 7.6% வழங்கப்பட்டு வருகிறது மேலும் இது பாதுகாப்பான ஒரு இடமாகவும் அமைந்துள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் திருமணம் போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுக ளுக்காக இந்த திட்டம் மிகவும் சிறப்பாக அமையும். எனவே வரும் ஜூலை மாதத்தில் இருந்து இத்திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் உயர்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை இருந்தாலும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் ரெப்போ ரேட் விகிதங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதன் காரணமாக பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் வட்டி விகிதங்களும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது.
Input & Image courtesy:News 18