இந்தியாவின் புதிய அடையாளமான சென்ட்ரல் விஸ்டா - 8'ம் தேதி கோலாகலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி 8'ம் தேதி திறந்து வைக்கிறார்.
By : Mohan Raj
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி 8'ம் தேதி திறந்து வைக்கிறார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் முக்கோண வடிவிலான நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம், இல்லம் போன்றவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி வரும் 8'ம் தேதி திறந்து வைக்கிறார்.
ராஜபாட்டையில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் மாநில வாரியாக உணவங்களுக்கும், பசுமை நடைபாதைகளும், தோட்டங்களும் அமைக்கப்பட உள்ளன.
இருப்பினும் இந்தியா கேட் முதல் மான்சிங் சாலை வரையிலான பசுமை தோட்டங்களுக்கு உணவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கேட் வரையிலான மொத்த விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி திறந்து 8ம் தேதி திறந்து வைக்கிறார். 20 மாதங்களுக்கு இப்பகுதியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 20 மாதங்களுக்கு பிறகு பார்வையாளர் அனுமதி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.