முன்னேறும் ஆசிய நாடுகளும் மேலை நாடுகளின் பிரச்சினைகளும்!
By : Saffron Mom
கடந்த பல்லாண்டுகளாக சீனா மற்றும் இந்தியாவின் எழுச்சி உலகளாவிய வலிமையை குறித்த பார்வையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் இயல்பானது. மேலை நாடுகள் தங்களுடைய வலிமைக்கு இது சவாலாகும் என்று உணர்ந்து கொள்கிறார்கள்.
ஏனெனில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மேலை நாடுகள் உலகெங்கிலும் தங்களுடைய கொள்கைகளை நிலை நிறுத்தினர். அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் பல நாடுகளின் வலிமையும் வளர்ச்சியும் விரிவடைந்தன. ஆனால் கிழக்கு நாடுகளின் எழுச்சி மேற்கு நாடுகளின் முடிவு அல்ல.
இந்தியா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய சக்தியாக தொடரும். ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம் மற்றும் முக்கியமாக உலகளாவிய சந்தை பொருளாதாரம் ஆகிய மேற்கத்திய கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் தொடர்ந்து வலுவாக உள்ளன.
மேலை நாடுகளில் இத்தகைய லட்சியங்கள் நிலைத்திருக்க ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் ஜனநாயகம் மற்றும் சந்தை பொருளாதாரம் பெரும்பாலும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவது. இது தவறாக செயல்படலாம் எனும் போது கூட அந்த தவறுகளை தவிர்க்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஜனநாயக அமைப்புகளில் எப்போதும் சரியான முடிவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தாராளமய ஜனநாயகத்தின் இத்தகைய மாதிரிகள் அதிக சவால்களை தற்போது எதிர் கொண்டுவருகின்றன. இதற்கான தீர்வுகளை கண்டறிவது மேலைநாடுகளின் பொறுப்பாகும். தங்களுடைய குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தங்கள் ஜனநாயக அமைப்புகளை அச்சுறுத்தும் என்பதை ஐரோப்பிய நாடுகள் உணராத வரை அவற்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
மக்கள் தொகையில் அதிகரித்தல் ஐரோப்பாவில் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. அங்கு பொருளாதார மற்றும் கலாச்சார கவலைகள் ஏற்பட்டுள்ளன. இது இங்கிலாந்தில் பிரெக்ஸிட்டிற்கு வழி வகுத்தது.
ஐரோப்பாவில் பெரும்பான்மையான மக்களிடையே வருமானம் மற்றும் வளர்ச்சியில் தேக்கம் பொருளாதார கவலையை ஏற்படுத்துகிறது. மேலும் பல நாடுகளில் இருந்து வரும் குடியேற்றம், அதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் கலாச்சார கவலையை தூண்டுகிறது. இந்த கவலைகள் சரிசெய்யப்பட வேண்டும். இவை ஐரோப்பாவின் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் என்பது உணரப்பட விட்டால் இப்பிரச்சனைகள் தொடரும்.
தொழில்நுட்ப புரட்சி அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த புரட்சியில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எப்படி நினைக்கிறோம், மிக முக்கியமாக அரசாங்கங்கள் எப்படி செயல்படும் என்பதை மாற்றி அமைக்கும் தொழில்நுட்ப புரட்சியின் வாய்ப்புகளை முதலில் புரிந்துகொள்வது அரசியலின் எதிர்காலத்தை உணர உதவும்.
இது போன்ற பெரிய கேள்விகளுக்கு ஒத்திசைவான பதில்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் கோபம் வளர்ந்து பல தவறான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வழி உருவாகும். இரண்டு குழுவினர் அதிகப்படியான கோபத்துடன் ஒருவர் பேசுவதை கவனிக்க கூட தயாராக இல்லை எனில் ஜனநாயக அமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும்.
தற்போதைய நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் எதார்த்தம், சீனா தன்னுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மகத்தான மக்கள் தொகை ஆகியவற்றின் மூலம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும். இதன் சமநிலையை பராமரிக்க இந்தியாவும் பெரிதாக வேண்டும் என்ற விருப்பத்தை தூண்டும்.
இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் .குறிப்பாக சந்தை பொருளாதாரத்தை தழுவுவது. சீனாவின் விஷயத்தில் அந்நாடு மேலும் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்த விரும்பினால் அது சமூக சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனா அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினால் அவர்கள் சட்டத்தின் ஆட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான சுதந்திரம் போன்ற பல அமைப்பு ரீதியான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
எல்லா இடங்களிலும் மனிதர்கள் வளமானவர்கள் ஆகவும் அவருடைய தலைவர்கள் பொறுப்புடையவர்கள் ஆகவும் இருக்க வேண்டும். மக்கள் அதை நோக்கிய பாணியிலே தான் தொடர்ந்து பயணிப்பார்கள்.
Reference: ORF