'ஜிகாதிகளுக்கு எதிராக இந்து மதத்தை பாதுகாத்திடுங்கள் ' - நெதர்லாந்திலிருந்து இந்துக்களுக்காக குரல் கொடுத்த எம்.பி
'ஜிகாதிகளுக்கு எதிராக இந்து மதத்தை பாதுகாத்திடுங்கள் ' என உதய்பூர் படுகொலை தொடர்பாக நெதர்லாந்திலிருந்து எம்.பி குரல் கொடுத்துள்ளார்.
By : Mohan Raj
'ஜிகாதிகளுக்கு எதிராக இந்து மதத்தை பாதுகாத்திடுங்கள் ' என உதய்பூர் படுகொலை தொடர்பாக நெதர்லாந்திலிருந்து எம்.பி குரல் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவரை கவுஸ் முகமது, ரியாஸ் முகமது ஆகிய இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் நுபுர் சர்மாவை ஆதரித்து வலைதளத்தில் பதிவிட்டதாகவும் அதனால அவரை கொலை செய்தோம் எனவும், பிரதமர் மோடியை குறிப்பிட்டு எச்சரித்து அந்த இருவரும் வீடியோ வெளியிட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக நெதர்லாந்து எம்.பி கீர்ட் வைல்டர்ஸ் தற்பொழுது உதய்பூர் படுகொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'மனிதனை கொலை செய்திருக்கிறார்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்களின் சித்தாந்தத்தை போலவே வன்முறை மற்றும் சகிப்புத்தன்மை அற்றவர்கள் இதற்கு ஒரே விட என்னவெனில் நாம் அனைவரும் ஒன்றாக நுபுர் ஷர்மாவை ஆதரிப்போம் என கூறுவோம். ஏனெனில் அவர்களால் நாம் அனைவரையும் கொள்ள முடியாது.
இந்தியாவில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இது அவர்களின் தாய் நாடு இஸ்லாமிய நாடு அல்ல இந்தியா' என பதிவிட்டு இருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில் இந்தியாவை குறிப்பிட்டு, 'ஒரு நண்பனாக நான் உங்களுக்கு சொல்கிறேன் சகிப்புத்தன்மையற்றவர்களிடம், சகிப்புத்தன்மையுடன் இருப்பதை நிறுத்துங்கள். தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஜிகாதிகளுக்கு எதிராக இந்து மதத்தை பாதுகாத்திடுங்கள் இஸ்லாத்தை திருப்திப்படுத்தார்கள் படுத்தாதீர்கள் ஏனெனில் அதனால் நீங்கள் அதிக விலை கொடுக்க நேரிடும்' என கீர்ட் வைல்டர்ஸ் கூறியுள்ளார்.