Kathir News
Begin typing your search above and press return to search.

பூர்வாஞ்சல் விரைவு சாலை: செய்ய முடியாதென முந்தைய ஆட்சியில் காகித அளவில் இருந்த திட்டத்தை, 3 ஆண்டுகளில் சாத்தியமாக்கிய பிரதமர்!

ஆக்ரா - லக்னோஎக்ஸ்பிரஸ்வே திட்டத்தை விட, பூர்வாஞ்சல் திட்டம் சிறப்பான முறையில் வந்துள்ளது.

பூர்வாஞ்சல் விரைவு சாலை: செய்ய முடியாதென முந்தைய ஆட்சியில் காகித அளவில் இருந்த திட்டத்தை, 3 ஆண்டுகளில் சாத்தியமாக்கிய பிரதமர்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  18 Nov 2021 2:53 AM GMT

திட்டத்தின் தொடக்கம்:

முதலில் இந்தத்திட்டமானது சமாஜ்வாதி ஆட்சியில் வெறும் காகித அளவிலேயே இருந்துள்ளது. யோகி ஆதித்யநாத் அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது. 2018ஆம் ஆண்டு, ஜூலை 14 ஆம் தேதி,பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் பாராபங்கி, அமேதி, சுல்தான்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அசாம்கர், காசிபூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கும் 340 கி.மீ. தூரத்திற்கான பூர்வாஞ்சல் விரைவு சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பூர்வாஞ்சல் விரைவு சாலை திட்டம்:

பூர்வாஞ்சல் விரைவுச்சாலை 341 கிமீ நீளம் கொண்டது. இது லக்னோ-சுல்தான்பூர் சாலையில் (NH-731) அமைந்துள்ள லக்னோ மாவட்டத்தில் உள்ள சௌத்சராய் கிராமத்திலிருந்து தொடங்கி, உ.பி-பீகார் எல்லையிலிருந்து கிழக்கே 18 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண். 31 இல் அமைந்துள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது. இந்த விரைவுச் சாலை 6 வழிச்சாலை அகலம் கொண்டது, எதிர்காலத்தில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். சுமார் 22500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூர்வாஞ்சல் விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் குறிப்பாக லக்னோ, பாரபங்கி, அமேதி, அயோத்தி, சுல்தான்பூர், அம்பேத்கர் நகர், அசம்கர் ஆகிய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப் போகிறது.

சாலையின் சிறப்பம்சங்கள்

ஐஆர்சி விதிகளின்படி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மண் அரிப்பைத் தடுக்க முன்னேறிய தொழில்நுட்பமான ஜியோசெல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 397 கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரு வழியிலும், பல இடங்களில் இரு புறங்களிலும் இந்த அணுகுசாலைகள் அமைந்துள்ளன. போதிய இடைவெளியில் 16 இடங்களில் பயணிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது வசதி மையங்கள், பெரிய பாலங்கள், சிறுபாலங்கள், சுரங்கப்பாதை, சுங்கச்சாவடிகளில் சிறப்பான தரத்தில் விளக்குகள் வசதி அமைந்துள்ளது. இ-டெண்டரிங் முறையில்காயத்ரி புராஜக்ட்ஸ், ஜிஆர் இன்பிரா புராஜக்ட்ஸ் ஆப்கோ இன்பிராடெக், பிஎன்சி இன்பிராடெக், ஓரியண்டல் ஸ்டிரக்சுரல் இன்ஜினீயர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே சிறந்த நிறுவனங்கள் என்று பெயர் வாங்கியவை. நாடு முழுவதும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதித்திட்டங்களை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

திட்டத்தால் உண்டாகும் நன்மைகள்

பூர்வாஞ்சல் விரைவு சாலை உத்தரபிரதேசத்தின் பொருளாதாரத்தை மாற்றும். இது பொருளாதார வளர்ச்சிக்கான தூண்டுதலாக செயல்படும்.விவசாயம், தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது ஒரு தொழில்துறை பாதையாக செயல்படும். உற்பத்திப் பிரிவுகள், மேம்பாட்டு மையங்கள் மற்றும் விவசாயப் பொருளாதாரம் ஆகியவை மாநிலத் தலைநகரத்திற்கும் தேசியத் தலைநகருக்கும் தடையின்றி கொண்டு செல்லப்படும். இது கைத்தறி மற்றும் உணவு பதப்படுத்தும் அலகுகள், சேமிப்பு ஆலைகள், மண்டி மற்றும் பால் சார்ந்த தொழில்களை அமைப்பதற்கான ஒரு ஊக்கியாக செயல்படும்.

எதிர்கால தொழில்வாய்ப்புகள்

உ.பி.யில் விரைவுச் சாலைகள் தயாராகி வரும் நிலையில், தொழில்துறை வழித்தடத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மிக விரைவில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையைச் சுற்றி புதிய தொழில்கள் வரத் தொடங்கும். வரும் நாட்களில், இந்த விரைவுச் சாலைகளை ஒட்டி அமைந்துள்ள நகரங்களில், உணவு பதப்படுத்துதல், பால், குளிர்பதனக் கிடங்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமிப்பு, தானியங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் இதர விவசாயப் பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளின் பணிகள் வேகமாக அதிகரிக்கும். உ.பி.யில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு வழித்தடமும் புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரப் போகிறது. இந்த உள்கட்டமைப்பு பணிகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்திற்கு புதிய உயரங்களை வழங்கும்












Next Story
கதிர் தொகுப்பு
Trending News