Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே ஆண்டில் சென்னையில் அதிகரித்த ரவுடிகளின் எண்ணிக்கை - காவல்துறைக்கு எழும் தலைவலி

சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே ஆண்டில் சென்னையில் அதிகரித்த ரவுடிகளின் எண்ணிக்கை - காவல்துறைக்கு எழும் தலைவலி

Mohan RajBy : Mohan Raj

  |  4 Dec 2022 1:08 PM GMT

சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறைக்கு பெரும் சவால்களாக இருப்பது ரவுடிகள்தான் அவர்களை கண்காணித்து குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ரவுடிகளை ஏ ப்ளஸ் ஏ, பி,சி என ரேங்கிங் போல காவல்துறை பிரித்து வைத்துள்ளது.

ஏ ப்ளஸ் ரவுடிகள் என்பவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கூலிப்படை வைத்து கொலை சம்பவத்தை அரங்கேற்றுபவர்கள். அதிக கொலை முயற்சி மற்றும் அடிக்கடி வழக்குகளில் கைதானவர்கள் பி வகை ரவுடிகள் ஒரு சில கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் அதிக திருட்டு வழக்கு சம்பந்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை காவல்துறை கணக்கெடுப்பில் கடந்த ஒரு வருடத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவு ரவுடிகள் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3674 ரவுடிகள் இருந்தது தெரிய வந்துள்ளது இந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3,711 ரவுடிகளாக அதிகரிப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக சென்னை காவல்துறை கூறுகிறது.

அதிலும் ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடிகள் 69 லிருந்து 92 ஆகவும் அதிகரித்திருப்பது காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஏன் கேட்டகிரி ரவுடிகள் 276 பேர், பி கேட்டகரி ரவுடிகள் 1699 பேர், சி கேட்டகிரி ரவுடிகள் 164 ரவுடிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 2100 ரவுடிகள் அதிகரித்திருப்பதாக தமிழக காவல்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் குற்ற பின்னணி நபர்களின் குற்றங்களை ஒடுக்கி குற்றமில்லாத நகரமாக மாற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News