Kathir News
Begin typing your search above and press return to search.

மஹாராஷ்ட்ராவிலுள்ள விஸ்வகர்மா சாதியினர் இடஒதுக்கீடு சலுகையை உதர முடிவு ! பொதுப் பிரிவினருடன் இணைய முனைப்பு !

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பெருமளவில் வசிக்கும் விஸ்வகர்மா வகுப்பை சேர்ந்த சுடர் என்ற இடைநிலை சாதியினர் தாங்களாகவே முன்வந்து இட ஒதுக்கீடு சலுகையிலிருந்து வெளியேற பொதுப்பிரிவினர் உடன் தங்கள் தங்கள் சாதியை இணைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மஹாராஷ்ட்ராவிலுள்ள விஸ்வகர்மா சாதியினர் இடஒதுக்கீடு சலுகையை உதர முடிவு ! பொதுப்  பிரிவினருடன் இணைய முனைப்பு !

DhivakarBy : Dhivakar

  |  30 Sep 2021 11:31 PM GMT

இந்தியாவில் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு, கல்வி போன்ற எல்லா தளங்களிலும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு முன்னேற வழிவகை செய்து வருகிறது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை இன்றும் பலர் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றன.

எப்படி சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றன ?

இட ஒதுக்கீடு அமல் படுத்தியது முதல் ஒருவர் தன் சமூகத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு இட ஒதுக்கீடு சலுகையை அனுபவிக்கிறார். அதன்மூலம் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் முன்னேறியவராக திகழ்கிறார். இதுவே இட ஒதுக்கீட்டின் நோக்கம்.ஆனால் அத்துடன் அவர்கள் நிறுத்தவில்லை, அவர் இட ஒதுக்கீடு மூலம் பயன் அடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுகளையும் அதே இட ஒதுக்கீட்டை பயன்படுத்துகின்றன. இந்த செயலின் மூலம் ஒரு தகுதியான பயனாளி பெறக்கூடிய சலுகையை அவர் தடுக்கிறார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பெருமளவில் வசிக்கும் விஸ்வகர்மா வகுப்பை சேர்ந்த சுடர் என்ற இடைநிலை சாதியினர் தாங்களாகவே முன்வந்து இட ஒதுக்கீடு சலுகையிலிருந்து வெளியேற பொதுப்பிரிவினருடன் தங்கள் சாதியை இணைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

பூனேவை மையமாகக்கொண்ட விஸ்வகர்மா பிரடிஷ்டன் என்ற அமைப்பை நிறுவிய உறுப்பினர்களான விஷ்ணு கருட் மற்றும் சஞ்சய் பாலேராவ் விஸ்வகர்மா சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்,, விஸ்வகர்மா சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக.இட ஒதுக்கீட்டில் இருந்து வெளியேறவும் மற்றும் பொதுப் பிரிவினருடன் தங்களது சாதியை இணைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றன.

விஷ்ணு கருட் மேலும் கூறுகையில் " சுடர் சமுதாயம் ஹிந்து மதத்திலுள்ள சடங்குகள்,சம்பிரதாயங்கள், பூஜைகள் மற்றும் தர்மங்களை பயில்கின்றனர். சுடர் சமுதாயத்திற்கும் பிராமண சமுதாயத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதனால் இந்தச் சமுதாய மக்கள் இட ஒதுக்கீடு சலுகையை கை உதறிவிட்டு பொதுப்பிரிவினருடன் தங்கள் சாதியை இணைக்க விரும்புகின்றன.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கரூட் மற்றும் பலேராவ் மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் "ஒரு கணக்கெடுப்பு நடத்தி சுடர் சமுதாயத்தை பொதுப்பிரிவினர் உடன் இணைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் அவர்கள் இதை ஒரு வழக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக கூறுகின்றன.

"கடந்த 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தங்களுக்கு பொருளாதார ரீதியிலும், கல்வியிலும், சமூகத்திலும் முன்னேற உதவியது" என்றும் கருட் கூறுகிறார்.

இந்த சுடர் சமுதாயம் போல பல சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டை முழுவதுமாக பயன்படுத்திவிட்டு இட ஒதுக்கீட்டின் சலுகைகளை விட்டொழிய வேண்டும்.

Hindu Post.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News