Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்முவில் தளர்த்தப்பட்ட விதிகள் - புதிதாக இணையும் 12 லட்சம் வாக்காளர்கள்

ஜம்மு காஷ்மீரில் விதிகள் தளர்த்தப்பட்டு ஓராண்டு வசித்தால் வாக்குரிமை என தகவல் பரவி வருவது பற்றி விவரங்கள் கிடைத்துள்ளது.

ஜம்முவில் தளர்த்தப்பட்ட விதிகள் - புதிதாக இணையும் 12 லட்சம் வாக்காளர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2022 5:11 AM GMT

ஜம்மு காஷ்மீரில் விதிகள் தளர்த்தப்பட்டு ஓராண்டு வசித்தால் வாக்குரிமை என தகவல் பரவி வருவது பற்றி விவரங்கள் கிடைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது அதன் பின்னர் அரங்கேறிய பல அரசியல் நிகழ்வுகளுக்கு பின்னர் வரும் 2023 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்ட விதி 370 நீக்கிய பின்னர் நடைபெறுவதால் காஷ்மீர் மக்களை எந்த கட்சி ஆளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரையும் தொற்றி இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க, முக்தி முகமது சையது தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சில குழப்பங்களை கடந்து முக்தி முகம்மது சையத்தின் மகள் மெகபூபா முக்தி தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.

அந்த கூட்டணியும் 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடுகள் காரணமாக முறிந்தது மெகபூபா அரசு கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் சிறப்பு அந்த திரும்பப்பெற்றது. இதனால் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டன. அப்போது மத்திய பா.ஜ.க அரசு போராட்டத்தை அடக்கி பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளுக்கு நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பாக தீவிரவாதிகளின் போராட்டத்தை தடுக்க உத்தரவுகளை பிறப்பித்த காரணத்தினால் இன்று காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

இந்த நிலையில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி ஜம்மு காஷ்மீரில் ஓராண்டுக்கு மேல் வசிப்பவராக இருந்தால் ஆதார், தண்ணீர் மற்றும் கேஸ் இணைப்புகள் ரசீது, சொந்த வீட்டின் பத்திரம், வாடகை வீட்டின் குத்தகை பத்திரம், வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கின் விவரம், பாஸ்போர்ட் நகல் ஆகிய ஆவணங்கள் மூலம் வாக்குரிமையை பெறலாம். இந்த ஆவணங்களை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்த பின்னர் இருப்பிட சான்றிதழ் பெற்று வாக்காளர் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் புதிதாக 12 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்படுவார்கள் என ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. சட்டப்பிரிவு 370 திரும்ப பெற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும் ராஜஸ்தான், கர்நாடகா, சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடக்க இருப்பதால் ஜம்மு காஷ்மீரின் வெற்றி அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News