Kathir News
Begin typing your search above and press return to search.

சத்தியமங்கலம் காட்டில் திட்டம், காய்கறி கடை நடத்தி சாதாரண மக்களுடன் வாழ்கை - கோவை கார் குண்டு வெடிப்பின் தீவிரவாதிகளின் ஆணிவேரை பிரித்த என்.ஐ.ஏ

சத்தியமங்கலம் காட்டில் நடந்த ரகசிய கூட்டம் போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் அம்பலமாகியுள்ளது.

சத்தியமங்கலம் காட்டில் திட்டம், காய்கறி கடை நடத்தி சாதாரண மக்களுடன் வாழ்கை - கோவை கார் குண்டு வெடிப்பின் தீவிரவாதிகளின் ஆணிவேரை பிரித்த என்.ஐ.ஏ
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Dec 2022 2:57 AM GMT

சத்தியமங்கலம் காட்டில் நடந்த ரகசிய கூட்டம் போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் அம்பலமாகியுள்ளது.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது, இதில் ஜமோசா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ், அப்சர் கான், முஹம்மது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கோவை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களை அழைத்து சென்று என்.இ.ஏ விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் வழக்கில் மேலும் இருவரை என்.இ.ஏ கைது செய்துள்ளது. அதன்படி கோவை அல் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த ஷேக் இதயத்துல்லா மற்றும் வின்சன் காலனியாக இந்த சனாபர் அலி கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் கடந்த மாதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அரசு கடம்பூர் வணப்பதற்கு சென்றுள்ளன அங்கு வைத்து ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை உமர் பாரூக் செய்துள்ளார், அதில் முஹம்மது அசாருதீன் மற்றும் உயிரிழந்த ஜெமோசா முபீன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். அங்கு வைத்து தான் தீவிரவாத தாக்குதலுக்கு உண்டான திட்டங்களை தீட்டப்பட்டுள்ளன என என்.இ.ஏ வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஷேக் இதயத்துல்லா கரும்புக்கடை பகுதியில் உலர் பழங்கள் கடை நடத்தி வருகிறார் இவரது தந்தை ஆகும் கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை தொடர் குண்டு வெடிப்பில் 48வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடந்த இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதயத்துல்லாவுடன் என்.இ.ஏ அதிகாரிகள் அப்போதே விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மற்றொரு நபரான சனா அலி மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இப்படி மக்களுடன் மக்களாக பழகி உலர் பழக்கடை காய்கறி வியாபாரம் ஆகியவை செய்து ஏற்கனவே கொன்று விடுப்பில் கைதாகி வெளிவந்தவர்கள் தான் மேலும் தற்போது நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு வைத்துள்ளனர் என்ற தகவல்கள் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன மேலும் இது குறித்து விசாரணை நீடிக்கும் நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் எனவும் அறியப்படுகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News