Kathir News
Begin typing your search above and press return to search.

வையகம் போற்றும் பாரதத்தின் யோகக்கலை: சவுதி அரேபியாவில் கோலாகலமாக நடைபெற்ற யோகா திருவிழா!

சவுதி அரேபியாவில் ஜனவரி 29 அன்று 'ஜெட்டா' என்னும் பகுதியில், அந் நாட்டு மக்களின் பேராதரவை பெற்று யோகா திருவிழா ஒன்று நடைபெற்று முடிந்துள்ளது.

வையகம் போற்றும் பாரதத்தின் யோகக்கலை: சவுதி அரேபியாவில் கோலாகலமாக நடைபெற்ற யோகா திருவிழா!
X

DhivakarBy : Dhivakar

  |  12 Feb 2022 9:28 AM GMT

'இந்தியா' உலகிற்கு ஆன்மீக குரு என்று பலராலும் போற்றப்படும் நிலையில், பாரதத்தின் பெருமையும் தொன்மையுமுடைய யோகா மற்றும் தியான கலைகளை, உலக மக்கள் ஏற்கத் தொடங்கி விட்டனர். மேற்கத்திய நாட்டு மக்களின் வாழ்க்கையை, நமது யோகக்கலை 30 ஆண்டுகளாக செழுமையடையச் செய்து வருகிறது.

இந்நிலையில் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்த பின்னர். யோகக் கலைகளை உலகம் முழுவதற்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில், பல முன்னெடுப்புக்களை எடுத்து வந்தனர் என்பதை நாம் அறிவோம்.


கடந்த வருடம் ஜூன் 21 (சர்வதேச யோகா தினம்) அன்று சவுதி அரேபியா நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும், இடையே பொது யோகா நெறிமுறைகளை நிறுவ வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.


இதன் நீட்சியாக, சவுதி அரேபியாவின் 'ஜெட்டா' என்னும் பகுதியில் ஜனவரி 29 அன்று, ஆயிரம் நபர்கள் பங்கேற்ற யோகா திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அந்நாட்டில் இந்த நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால், யோகா மற்றும் தியான முறைகளின் முக்கியத்துவத்தை சவுதி அரேபிய மக்கள் அறிந்துள்ளதால், யோக கலைகளை கற்பதற்காக மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த நிகழ்வில் மக்கள் ஆர்வமாக கலைகளை கற்றுக்கொண்டனர்.


சவுதி அரேபியாவின் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சகமும் யோகக் கலையை பரிபூரணமாக அங்கீகரித்துவிட்டது.


இதன் மூலம் சவுதி அரேபியா போன்ற முக்கியமான அரபு நாட்டில், மக்களும் அரசாங்கமும் யோகக்கலையை போற்றி ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News