Kathir News
Begin typing your search above and press return to search.

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை விழுங்கப்பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை - கோவில் சொத்தை வித்துப் பிழைக்கும் அவலம்..!

SC stays Madras HC order permitting use of temple land to construct Kallakurichi Collectorate

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை விழுங்கப்பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை - கோவில் சொத்தை வித்துப் பிழைக்கும் அவலம்..!

MuruganandhamBy : Muruganandham

  |  29 Sep 2021 4:19 AM GMT

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்கக் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும் விவகாரத்தில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் குளறுபடி

கடந்த 2020ஆம் ஆண்டு வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சியைச் சுற்றியே அரசுக்குச் சொந்தமான 39 இடங்களில் நிலம் உள்ளபோது, கோயில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார். இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி கோயில் நிலங்கள், கோயிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், என்னதான் குத்தகை மூலம் கோயிலுக்கு வருமானம் கிடைத்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டால் அது நிரந்தரமாகிவிடும் எனவும், அந்த நிலம் மீண்டும் கோயிலுக்குத் திரும்பக் கிடைக்கப் பெறாமல் போகும் எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பின் பதிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் யோசனையும்

தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பந்தப்பட்ட இடத்தின் மூலம் கோயிலுக்குத் தற்போது எந்த வருமானமும் இல்லை எனவும், அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதன் மூலம் கோயிலுக்கு மாதம் 1.3 லட்சம் வாடகையாகக் கிடைக்கப்பெறும் எனவும், இதன் மூலம் கோயிலுக்கு வருவாய் பெருகும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப் புனரமைக்க அரசு 2.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீதிமன்றங்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இடம் பெற உள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிடும் மற்ற இடங்கள் உகந்ததாக இல்லாததன் காரணமாகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.அப்போது நீதிபதிகள் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதற்குப் பதிலாக அரசே உரிய இழப்பீட்டுத் தொகையை அறநிலையத்துறைக்குச் செலுத்திவிட்டு, அந்த இடத்தைக் கையகப்படுத்தலாமே என யோசனை தெரிவித்தனர்.

விற்பனை செய்ய முடிவெடுத்த அரசு, உச்சநீதி மன்றத்தில் வழக்கு

உயர் நீதிமன்ற யோசனையை தொடர்ந்து அருள்மிகு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 43 ஏக்கா் நிலத்தை வருவாய்த் துறைக்கு விற்பதற்கான ஆணை 19.9.2020-இல் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தசென்னை உயா்நீதிமன்றம், ஆட்சியா் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க இடைக்காலத் தடை விதித்து 27.11.2020-இல் உத்தரவிட்டது.இந்நிலையில், கோயில் நிலத்தை நீண்டகாலத்துக்குக் குத்தகைக்கு விடுவது தொடா்பாக மறுதினம் 28.11.2020-இல் தமிழக அரசால் ஓா் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்வலா் ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நிலத்தை குத்தைக்கு எடுக்கும்போது உரிய தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து, ஓா் உத்தரவை பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவை எதிா்த்தும், அரசின் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அறநிலைத்துறை விதிகள் பின்பற்றப்படவில்லை

மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா். ஆனந்த் பத்மநாபன் ஆஜராகி வாதிடுகையில், 'முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் நிலத்தை விற்பது, குத்தகைக்கு வழங்குவது தொடா்பாக தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தின் பிரிவு 34-இன்படி கோயில் நிலங்கள், கோயிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். குத்தகை மூலம் கோயிலுக்கு வருமானம் கிடைத்தபோதிலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டால் அதன்பிறகு அந்த நிலம் மீண்டும் கோயிலுக்குத் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில், உயா்நீதிமன்றம் இந்த விஷயங்களைக் கருத்தில்கொள்ளாமல் நிலம் தொடா்புடைய மனுவை நிலுவையில் வைத்துவிட்டு தமிழக அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்களை ஆட்சியா் அலுவலகம் கட்டுமானத்தை மேற்கொள்ளும் வகையில் உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் இந்து சமய அறநிலையைத் துறைச் சட்டம் பிரிவு 34-ஐ மீறி வீரசோழபுரத்தில் உள்ள அா்த்த நாரீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை நீண்டகால குத்த.கையை அனுமதியை நியாயப்படுத்துகிறதா என்ற சட்டக் கேள்வி எழுகிறது.மேலும், விவசாய நிலையத்தை திட்டமிடாத பகுதிகளில் விவசாயம் சாரா நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட கோயில் நிலத்தை குத்தைக்கு விடும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.மேலும், உயா்நீதிமன்றம் மற்றொரு விவகாரத்தில் கோயில் சொத்துகளை அரசின் பொதுக் கொள்கை எனும் பெயரில் விற்க முடியாது எனவும் தீா்ப்புக் கூறியுள்ளது என வாதிட்டாா்.இதையடுத்து, நீதிபதிகள் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News