Kathir News
Begin typing your search above and press return to search.

வழக்கம்போல் கேக் வெட்டி சிறப்பாக கிருஸ்துமஸ் கொண்டாடிய மதசார்பற்ற ஸ்டாலின்.!

வழக்கம்போல் கேக் வெட்டி சிறப்பாக கிருஸ்துமஸ் கொண்டாடிய மதசார்பற்ற ஸ்டாலின்.!

வழக்கம்போல் கேக் வெட்டி சிறப்பாக கிருஸ்துமஸ் கொண்டாடிய மதசார்பற்ற ஸ்டாலின்.!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Dec 2020 4:17 PM GMT

திராவிட முன்னேற கழகத்தை மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அடிக்கடி வார்த்தைக்கு வார்த்தை "மைனாரிட்டி தி.மு.க", "மைனாரிட்டி தி.மு.க" என்பார். பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் அது ஏதோ குறைவான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ'க்களை சட்டசபையில் கொண்டுள்ளதால் இதுபோல் "மைனாரிட்டி தி.மு.க" என கூறுகிறார் என தெரியும்.

ஆனால் புரட்சிதலைவி தி.மு.க'வை "இந்துக்களின் எதிரி" "மைனாரிட்டி சமூகமான கிருஸ்துவ, இஸ்லாமியர்களின் நண்பன்" ஆகையால் "மைனாரிட்டி தி.மு.க" என கூறினார் என்பதை தற்பொழுதைய தி.மு.க'வின் அரசியல் நிலைப்பாடு உணர்த்தி வருகிறது.

இந்துக்கள் பண்டிகை'க்கு வாயால் ஒரு வாழ்த்து கூட இல்லை! தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, கார்த்திகை தீபம், சித்திரை திருநாள் போன்று இந்துக்கள் வாழ்வில் அங்கமாகி போன பண்டிகைகளுக்கு மனதில் காழ்ப்புணர்ச்சி'யில், இந்துக்கள் வழக்கம் ஒழிய வேண்டும்,

இந்துக்கள் என்ற சொல்லே வழக்கொழிந்து போக வேண்டும், இந்துக்களின் வம்சம் கருவருக்கப்பட மற்ற மதங்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட கழகமும் இணைந்து இந்துக்கள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு அதற்கு "மத சார்பின்மை" என பெயரிட்டுக்கொண்டு அரசியலில் வலம் வருகின்றன.

ஆனால் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிருஸ்தவ நல்லெண்ணம் இயக்கம் சார்பில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்று கிருஸ்துமஸ் "கேக்" வெட்டி கொண்டாடி விழாவை சிறப்பித்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். இதுவா "மதச்சார்பின்மை"?

ஏன் இந்து இயக்கங்கள் சார்பில் விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாதா? ஆயுத பூஜை பண்டிகையின் போது அறிவாலயத்தில் கொண்டாடி சுண்டல் வழங்கினால் யாரும் வேண்டாம் என்பார்களா? தீபாவளியின் போது இனிப்புகள் வழங்கினால் தி.மு.க'வின் பெயருக்கு இழுக்கு வந்துவிடுமா? இல்லை பொதுமக்களை விடுங்க வெள்ளை சட்டை, தி.மு.க கரைவேட்டியை கட்டிகொண்டு பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கும் "இந்து உடன்பிறப்பு"க்களுக்கு இதுவரை பண்டிகைகளுக்கு ஒரு வாய் இனிப்பாவது தி.மு.க வழங்கியிருக்குமா?

பொதுக்களை விட பாவம் தி.மு.க உடன்பிறப்புகள், அதிலும் குறிப்பாக இந்துவாக பிறந்து தி.மு.க'வில் இணைந்த உடன்பிறப்புகளை போன்று பாவப்பட்ட ஜென்மங்கள் இவ்வுலகில் இல்லை. அட்டை போல் தன் உடலில் ஒட்டிக்கொண்டு தி.மு.க ரத்தத்தை உறிச்சுகிறதே என்று கூட அறியாமல் கருணாநிதி குடும்ப உயர பண்டிகை என்று கூட பாராமல் ஒரு வாய் இனிப்பிற்கு வக்கற்று உழைக்கும் திக்கற்ற உடன்பிறப்புகளே ஏன் இந்த அவலநிலை உங்களுக்கு? இப்பூவுலகில் பிழைக்கவா வழி இல்லை?

இந்துக்களின் ஒற்றுமை ஏற்பட்டால் அது தனது அரசியல் வாழ்வில் அஸ்தமனம் என்பதை தி.மு.க உணர்ந்துவிட்டது. தலைமை உணர்ந்ததை கூட தொண்டர்கள் உணரவில்லையே ஏன்?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News