Kathir News
Begin typing your search above and press return to search.

சுயமரியாதை திருமண கும்பலுக்கு உச்சிமண்டையில் ஓங்கி அடித்த நீதிமன்றம் - இனி சட்டம் பாயும்!

சுயமரியாதை திருமணம் செய்து வைக்கும் பெரியார் பேரன்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு அடித்த சம்பட்டி அடி..

சுயமரியாதை திருமண கும்பலுக்கு உச்சிமண்டையில் ஓங்கி அடித்த நீதிமன்றம் - இனி சட்டம் பாயும்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 May 2023 3:32 AM GMT

சாத்திரங்கள், சாதகங்கள் பார்க்காமல், சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல், திராவிடர் கழகத்தின் முக்கியமான நபர்களை கூப்பிட்டு பேசவைத்து திராவிடர் கழக தலைவர்களின் உருவச்சிலைக்கு முன்பாக நடத்தப்படும் திருமணத்தை சுயமரியாதைத் திருமணம் என கூறிக்கொண்டு, தங்களுக்கு தாங்களே திருமணம் செய்து கொண்டு வாழும் ஒரு பழக்கத்தை நாங்கள் பெரியாரின் பேரன்கள் இப்படிதான் செய்வோம் என மார்தட்டிக் கொண்டு கலாச்சாரத்தை திணிக்கும் பழக்கம் இருந்துவந்தது. பெரும்பாலும் திராவிடர் கழகத்து ஆட்களால் நடத்தி வைக்கப்படும் இத்தகைய சுயமரியாதை திருமணங்கள் முடிவில் விவாகரத்தில் தான் முடிகிறது பெரும்பாலான தம்பதிகள் இந்த திருமண நிகழ்வில் முடிவில் பிரிவை தான் சந்தித்து இருக்கிறார்கள்.


இத்தகைய திருமணங்களின் காரணமாக வயது வித்தியாசம் இல்லாமல் பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவிகளை காதலிக்கும் நபர்கள் கூட சுலபமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த மாதிரியான சம்பவங்கள் தற்போது தொடர்ச்சியாக தமிழகத்தில் அரங்கேறி வருகிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த இருக்கிறது. இந்த சம்பவங்களின் பின்னணியில் சுயமரியாதை திருமணம் இருக்கிறது, குறிப்பாக சுயமரியாதை திருமணத்தில் வயது வித்தியாசம் பார்ப்பது கிடையாது, பெற்றோர்கள் சம்மதம் தேவை கிடையாது, அர்ச்சகர் தேவை இல்லை, கடவுள் முன்னிலையில் நடைபெறுவது இல்லை, குறிப்பாக பதிவு பெற்ற ஒரு வழக்கறிஞர் மூலமாக இந்த திருமணத்தை எளிதாக நடத்தி விட முடியும் என்பதன் காரணமாக சுலபமாக திருமணத்தை செய்து கொள்கிறார்கள். கடைசியில் முடிவாகப் பிரிவை சந்திக்கிறார்கள். சுயமரியாதை திருமணங்கள் தற்போது அதிகமான பிரிவுகளை சந்தித்து வருவது மற்றும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதால் இதில் உள்ள உள்நோக்கத்தை புரிந்துகொண்டதன் காரணமாக நீதிமன்றம் தற்பொழுது ஒரு முக்கியமான கருத்தை கூறியிருக்கிறது.


அந்த வகையில் சுயமரியாதை திருமணத்திற்கு எதிராக நீதிமன்றம் கொடுத்த உத்தரவு தான் பெரியார் பேரன் என்று மார்தட்டிக் கொள்ளும் கருப்பு சட்டைகளுக்கு சம்பட்டி அடியாக அமைந்து இருக்கிறது. சுய மரியாதை திருமணம் செய்து வைக்கும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை மோர் பண்ணையைச் சேர்ந்த இளவரசன், இவர் அங்கு வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி, இவர் தற்போது உயர் நீதிமன்றக் கிளையில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில் என்னுடைய மனைவியை காணவில்லை அவளை கண்டுபிடித்து என் முன்னால் கொண்டு வருமாறு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் இவர்.


மோர் பண்ணையைச் சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்து இருக்கிறார், அந்தப் பெண்ணிற்கு 16 வயதில் அவருடைய வீட்டில் தாய் மாமனுக்கு அவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவெடுத்து விட்டார்களாம். இது தொடர்பாக இவர் மாவட்டக் குழந்தைகள் நல மையத்திற்கு புகார் அளித்து திருமணத்தை நடத்த விடாமல் செய்து இருக்கிறார். பின்னர் 11ஆம் வகுப்பு சேர்ந்த அந்த சிறுமிக்கு மீண்டும் வீட்டில் ஆறு மாதம் கழித்து தாய் மாமன் உடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி எனது வீட்டுக்கு வந்து என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். நானும், அவரும் திருப்பூரில் வழக்கறிஞர் ஒருவர் நடத்தி வரும் அம்பேத்கர் சுயமரியாதை திருமண மையத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டோம்.

இந்த சூழ்நிலையில் பெண் வீட்டை சேர்ந்த நபர்கள் காவல் நிலையத்தில் இளவரசன் என்பவர் தன்னுடைய மகளை கடத்தியதாக புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்கள். பின்னர் விசாரணை நடத்திய போலீஸார் அந்த பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். குழந்தைத் திருமணமாக இருந்தாலும், அந்தத் திருமணத்தை ரத்து செய்த பிறகே மறுமணம் செய்ய முடியும் என்று தற்போது நீதிமன்றத்தின் சார்பில் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து நீதிபதி இந்த வழக்கின் முடிவில் இது பற்றி கூறுகையில், வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.


இதனால் மனுதாரருக்கும் சுய மரியாதை திருமணம் செய்து வைத்த வழக்கறிஞருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி அவர் மீது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் வேறு யாரேனும் இவ்வாறு செயல்படுவது தெரியவந்தால் அவர்கள் மீதும் பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவின் காரணமாக சுயமரியாதை திருமண கும்பல்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Input & Image courtesy:The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News