வெளிநாட்டு நிதி பெறும் சென்னை அனாதை இல்லத்தில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்!
வெளிநாட்டு நிதி பெறும் சென்னை அனாதை இல்லத்தில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்!

சென்னை வியாசர்பாடி அருகே SEERS(Socio-Economic Education Rehabilitation Society) என்ற பெயரில் செயல்பட்டு வந்த அனாதை இல்லத்தில் காப்பக உரிமையாளர் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து இல்லம் சீல் வைக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த இல்லம் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் இந்த இல்லத்தை நடத்தி வந்த கல்யாண சுந்தரம், அவரது மகன் மற்றும் சகோதரர் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர். கல்யாண சுந்தரம் தப்பிச் சென்று விட்ட நிலையில் அவரைத் தேடி வருகின்றனர். 9 வயது முதல் 17 வயது வரை உள்ள 23 சிறுமிகள் இந்த இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.
இவர்களில் சிலர் மட்டுமே அனாதைகள் என்றும் பலருக்கு பெற்றோர், உறவினர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களிடம் நையப் பேசி உணவு, உடை, கல்வி உட்பட எல்லா வசதியும் செய்து தருகிறோம் என்று கூட்டி வந்ததாகக் கருதப்படுகிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் 5 சிறுமிகள் தங்களது வீட்டுக்குச் சென்று விட்ட நிலையில், மீதி 18 சிறுமிகளிடம் கல்யாண சுந்தரம், அவரது மகன் மற்றும் சகோதரர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிறுமிகள் கூறியுள்ளனர்.
குழந்தைகளுக்கு உதவி புரியும் நோக்கில் செயல்படும் 1098 சைல்டு லைன் எண்ணுக்கு ஃபோன் செய்து ஒரு சிறுமி இல்லத்தில் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக தெரிவித்ததை அடுத்து இல்லத்தை சோதித்த குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டி(CWC) அதிகாரிகள் இல்லத்தை ஆய்வு செய்து குழந்தைகளை மீட்டுள்ளனர்.
எனினும் மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றொரு தனியார் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். SEERS என்ற இந்த 'அனாதைகள்' இல்லம் வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிதியில் செயல்பட்டு வந்துள்ளது. Rice Bowls என்ற அமெரிக்க அமைப்பிடம் இருந்து சமீபத்தில் நிதி பெற்றுள்ள இந்த அமைப்புக்கு முன்னர் ARUN(Association for Rural and Urban Needy), Centre for Equity Studies(CES) ஆகிய அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்று இயங்கி வந்துள்ளது.
Rice Bowls அமைப்பு 2007ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ள 'கிறிஸ்தவ' குழந்தைகள் இல்லங்களுக்கு நிதி உதவி செய்து வருவதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 'மத அடிப்படையிலான' இல்லங்கள் சிறந்த இடமாக அமையும் என்றும், குழந்தைகளின் உணவு செலவை பார்த்துக் கொண்டால் அது அனாதை இல்லங்களை நடத்துபவர்கள் குழந்தைகளுக்கு 'விவிலிய உண்மைகளை' கற்றுத் தர ஏதுவாக இருக்கும் என்றும் கூறி நன்கொடை வசூலிக்கிறது.
Rice Bowls இந்தியாவில் உள்ள 30 'அனாதைக்' குழந்தைகள் இல்லங்களுக்கு நிதி வசூலித்து FCRA வாயிலாக அனுப்புகிறது. இந்த அமைப்பு முழுக்க முழுக்க 'கிறிஸ்தவ' அனாதை இல்லங்களுக்கு மட்டுமே நிதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ARUN அமைப்பு 2010ஆம் ஆண்டில் இருந்து FCRA உரிமம் பெற்று இயங்கி வருகிறது. ARUN மற்றும் CES ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
Foreign 'Donations' received by Association for Rural and Urban Needy (ARUN), #FCRA-NGO, TS/10220147, Hyderabad, over the years. Chief Functionary: Anuradha Konkepudi (signed FC4 in 2018-19).
— UniversalReligiousFreeDoom (@by2kaafi) November 1, 2020
Sorry for small font. pic.twitter.com/sHpkeZIIrS
CES நிதி வழங்கிக் கொண்டிருந்த இல்லங்களுக்கு FCRA உரிமம் பெற்ற பின்னர் ARUN அமைப்பு நிதி வழங்கி வந்துள்ளது. இந்தியா முழுவதும் Rainbow Children Homes என்ற பெயரில் ARUN அமைப்பு அனாதை இல்லங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் அமைப்புக்களிடம் இருந்து நிதி பெற்று இயங்குவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
#BREAKING NCPCR @NCPCR_ raids on Child homes of ARUN funded by Radical #Islamist Islamic Relief Worldwide underway in #Chetpet @Chennai as per local media reports. Illegal Child Care Homes spotted in a raid, FIR under JJ Act possible @KanoongoPriyank https://t.co/eyz2u0bXv7
— Legal Rights Observatory- LRO (@LegalLro) January 20, 2021
இதையடுத்து Legal Rights Observatory தன்னார்வ அமைப்பு உள்துறை அமைச்சகத்துக்கு இது குறித்து புகார் அளித்தது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள Rainbow Children Homes இல்லங்களில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது ARUN நிதி உதவி செய்த SEERS அனாதைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அனாதை இல்லங்களுக்கு, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று இயங்கும் இல்லங்களுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கும் போது FCRA சட்டத்தையும் நீக்காமல், இதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ பெற்றோர் உள்ள குழந்தைகளையும் அனாதைகள் என்று கூறி வெளிநாடுகளில் பிச்சையெடுப்பதையும் தடுக்க அனாதை இல்லங்களையும் மூடாமல் அரசு மெளனமாக இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
With Inputs from @by2kaafi