Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வியில் பின்தங்கிய கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிய Sixth Sense Foundation அறக்கட்டளை.!

கல்வியில் பின்தங்கிய கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிய Sixth Sense Foundation அறக்கட்டளை.!

கல்வியில் பின்தங்கிய கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிய Sixth Sense Foundation அறக்கட்டளை.!

Muruganandham MBy : Muruganandham M

  |  4 Dec 2020 6:15 AM GMT

கோவையைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேஷன், சென்னையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் திருவள்ளூருக்கு அருகிலுள்ள பிஞ்சிவாக்கம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு சமூக மையத்தை அமைத்துள்ளது. கிராமத்தின் பிரதான மையத்தில் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமூக மையம், பள்ளி கல்வி வகுப்புகள், இணையம், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன், கிராம குழந்தைகளின் கல்வி மற்றும் தனித்திறமையை முன்னேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

150 குழந்தைகளுக்கு உதவும் இந்த சமூக மையம், தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் மூலம், சரியான நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படுவதையும், அவற்றில் குழந்தைகள் கலந்துகொள்வதையும் உறுதிசெய்கிறது. இதன் மூலம், பள்ளியில் கற்பிக்கப்பட்ட பாடங்களுடன், குழந்தைகள் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளை தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக அவ்வப்போது தேர்வுகளும் வைக்கப்படுகிறது. இந்த மையத்தில் இணைய இணைப்பு கொண்ட கணினிகளும் உள்ளன. அவை குழந்தைகள் கற்றல் தொடர்பான பல்வேறு திட்டங்களைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக பொறுப்பாளர் எஸ்.ஜி.சூர்யா கூறுகையில், “2017 ஆம் ஆண்டில் நான் இந்த கிராமத்திற்குச் சென்றபின் இந்த யோசனை உருவானது. இந்த கிராமத்தில் பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பு தடைபடுவது மிக அதிகமாக இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தேர்வுகளில் கிராம குழந்தைகள் 30% மட்டுமே தேர்ச்சி கண்டனர். தேர்வுகள் முடித்த குழந்தைகள் பள்ளியை கைவிட்டு வயல்களில் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள் அல்லது திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த மையமும் எங்கள் அறக்கட்டளையும் தேர்ச்சி சதவீதம் மேம்படுவதை உறுதிசெய்து கல்லூரி முடிக்கும் வரை கவனித்துக் கொள்ளும்" என்று கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் இந்த மையம் அமைக்கப்பட்ட பின்னர், தேர்வுகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது என்று சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலரும், பொதுச் செயலாளருமான பிரதீப் குணசேகரன் கூறுகிறார். “2019 ல் தேர்ச்சி சதவீதம் 70% ஆக உயர்ந்துள்ளது. இது சிறந்த முன்னேற்றம் என்று நாங்கள் உணர்கிறோம். குழந்தைகளின் கல்வியைத் தொடர நிதி ரீதியாக உதவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம் ”.

இது தவிர, சமூக மையம் என்பது கிராமப்புற பெண்களுக்கு தொழில்சார் படிப்புகள் நடத்தப்படும் இடமாகவும், அவர்கள் தன்னிறைவு பெறவும் அதிகாரம் அளிக்கிறது. "இந்த ஆண்டு 10 தொழிற்பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டன, இந்த பயிற்சி அமர்வுகளில் 100 பெண்கள் பயனடைந்துள்ளனர்" என்கிறார் அம்பேதானந்த்

சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா மூலம் 100 ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த அறக்கட்டளை, பிஞ்சிவாக்கத்தை அப்பகுதியின் ஒரு மாதிரி கிராமமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "தமிழகம் முழுவதும் கிராமங்களில் மேலும் மையங்களை அமைக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று பிரதீப் கூறுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News