Kathir News
Begin typing your search above and press return to search.

சமூக வலைத்தளங்களில் அராஜகமாக உலா வரும் திமுக தர்மபுரி எம்.பி செந்தில் குமார்!

சமூக வலைத்தளங்களில் அராஜகமாக உலா வரும் திமுக தர்மபுரி எம்.பி செந்தில் குமார்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Jun 2023 4:13 AM GMT

சமூக வலைதள இயங்குதளமான ட்விட்டரில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், சாதாரண பொதுமக்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது கணக்குகளை தொடங்கி, தங்களுடைய twitter பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இந்த ட்விட்டரில் பரபரப்பான அரசியல் ட்விட்டுகளுக்கு எப்பொழுதும் பஞ்சமிருகத்தும் எப்பொழுதுமே சர்ச்சைக்குரிய twitter பதிவுகளை போட்டுவிட்டு பின்னர் வம்பில் மாட்டி விட்டோம் என தெரிந்த பிறகு அதை டெலிட் செய்து விட்டு சமூக வலைத்தளங்களில் அமைதியாகி விடுகிறார்கள் சில அரசியல் பிரபலங்கள். இன்னும் சிலரோ போலி கணக்குகள் மூலமாக அராஜகமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள் அதுவும் நாளடைவில் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறது.


தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் என்பவர் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து மக்களின் பக்தி பண்பாட்டு உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பல விடியோக்கள் உலா வருகின்றவருகின்றன.

உதாரணமாக சில மாதங்களுக்கு முன்பு அரசின் நலத்திட்ட பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கும் போது இது திராவிட மாடல் ஆட்சி , இங்கே இந்து மத அர்ச்சகர் மட்டும் இருக்கக் கூடாது. பாதிரியார் இருக்க வேண்டும், முஸ்லீம் முல்லா மெளலவி இருக்கவேண்டும், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இருக்க வேண்டும் என்று பிரச்சனை செய்ததை தமிழ்நாடே அறியும்.இதுமட்டுமில்லாமல் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் கடந்த ஆண்டு நடந்த பூமி பூஜை விழாவில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உடனே தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் எத்தனை முறை உங்களுக்கு சொல்வது? இதுபோன்று பூசைகள் செய்யக்கூடாது என்று! இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் மிரட்டியுள்ளார். உடனே மஞ்சள் குங்குமம் பூசி பூமிபூஜைக்கு வைக்கப்பட்ட செங்கற்களை தனது காலால் எட்டி உதைத்து கேவலப் படுத்தியிருக்கிறார். மஞ்சள் குங்குமம் பூசி பூமிபூஜைக்கு வைக்கப்பட்ட செங்கற்களை தனது காலால் எட்டி உதைத்து இந்து மதத்தை இழிவுபடுத்திய தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரின் செயல் கண்டிக்க தக்கது என்றும், அவருக்கு மனநல சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி தலைவர் இரவிக்குமார் வலியுறுத்தி இருந்தார்.இது கடந்த காலத்தில் திமுக எம்பி செய்த ஒரு சில செயல்கள் மட்டும்தான். மற்றொரு பக்கம் சமீபத்தில், சமூக வலைதளங்களில் சில சேஷ்டிகளையும் செய்து இருக்கிறார் எம்.பி செந்தில்குமார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கார்ட்டூன் வடிவத்தில் சித்தரித்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிலர் கமாண்டுகளில் ஏன் இப்படி ரோட்டு சைடு இருக்கும் ஆட்களைப் போல நடந்து கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆம் 'நான் அப்படித்தான் ரோடு சைடு இருக்கும் ஆள் தான்' என்று திமிராக பதிலளித்து இருக்கிறார். ஒரு மருத்துவம் படித்தவர், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி என்று கூட பாராமல், இவ்வாறு பேசி இருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இவருடைய கட்சியை சேர்ந்த திமுகவினரே ஏன் இப்படி எல்லாம் தேவையற்ற பதிவுகளை பதிவிடுகிறீர்கள்? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


மேலும் ஒரு சிலரோ இது போன்ற பதிவுகள் தேவையற்றது என கூறுபவர்களிடம் போய்விட்டு 'ஆமாம் நான் ரோடு சைடு ஆள் தான்! ரோடு சைடு ஆள் தான்!' என்பது போன்று ஒரு மீசையை முறுக்கிய படத்தை பதிவிட்டு வருகிறார். இப்படி சமூக வலைதளத்தில் பரபரப்பு க்காக அவர் இவ்வாறு நடந்து கொள்வது முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News