இயற்கை வள சுரண்டல்... நாடக அரசியலை அரங்கேற்றிய தி.மு.க... உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய SG. சூர்யா!
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை 12 மணி நேரம் வேலை நேர நாடக அரசியலை அரங்கேற்றிய தி.மு.க, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள்.
By : Bharathi Latha
தமிழகத்தில் இருக்கும் 8:00 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்ந்த தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் சட்டம்-2023 திருத்தி குரல் வாக்கெடுப்பு மூலமாக தமிழக அரசு 21 ஏப்ரல் 2023 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு முழு ஒத்துழைப்புடன் தி.மு.க அரசு இருந்தது, அதை நாளில் சட்டப்பேரவையில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற மசோதாவை தாக்கல் செய்தார். அந்த சட்டமும் தொழிற்சாலைகள் சட்டம் போலவே எந்த ஒரு வித்தியாசமும் இன்றி, அதே நாளில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. எந்த அளவிற்கு வேலை நேரத்தை உயர்த்துவது தொடர்பாக பேசப்பட்டதோ, அந்த அளவிற்கு இந்த ஒரு சட்டம் முழுமையாக மறைக்கப்பட்டது. இதைப்பற்றி யாரும் பேசவில்லை இந்த சட்டம் மூலம் நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள எவரும் தங்களுடைய நிலத்தை வணிகம், உள்கட்ட அமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக இந்த ஒரு சிறப்பு திட்டத்தின் மூலமாக விண்ணப்பித்து அரசிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அனுமதி பெற்ற பிறகு தங்களுடைய நிலத்தை அரசு அனுமதியுடன் நில உரிமையாளர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒரு சிறப்பு திட்டத்தின் மூலமாக நீர் நிலைகள் வாய்க்கால்கள் போன்றவற்றை தன்னுடைய இஷ்டத்திற்கு நில உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சட்டமானது இயற்கை வளங்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் நாம் நீர் நிலைகளை விற்பதற்கு சமமானது. தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்த பலர் தங்களுடைய சொத்துக்களான கல்வி நிலையங்கள், விற்பனைக் கூடங்கள், நீர் நிலைய ஆக்கிரமிப்புகள் போன்ற பல்வேறு இடங்களில் தான் கட்டி இருக்கிறார்கள். எனவே இத்தகைய ஒரு சிறப்புச் சட்டம் கொண்டு வருவதன் மூலமாக அவர்கள் நீர் நிலையத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்தாலும் அவற்றை காசு கொடுத்து வாங்கியதாக கூறி தங்களுடைய இஷ்டத்திற்கு தாங்கள் எதுவாக வேணாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஒரு தைரியத்தை இந்த ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இதுகுறித்து பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட ஜூனியர் விகடனும் இதைப்பற்றி தெளிவாக கருத்துக்களை பறைசாற்று இருக்கிறது. ஏற்கனவே நீர் நிலைகளை ஆக்ரமித்து கட்டியுள்ள சட்ட விரோதமான கட்டிடங்களை அங்கீகரிக்கவும், மீத இருக்கும் நீர் நிலைகளை தாங்கள் முழுவதுமாகவே ஆக்கிரமிக்கவும் தி.மு.க அரசால் அவசர அவசரமாக எந்த ஒரு விவாதமும் இன்றி சட்டப்பேரவையில் இது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
வேலை நேரத்தை அதிகரித்ததை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால் எந்த ஒரு கவனமுமே பெறாமல் இப்படி இயற்கை வழங்களை சுரண்டுவதை இவர்கள் நோக்கமாக வைத்திருக்கிறார்கள், தொழிலாளர் நல சட்டத்தை நிறைவேற்றினால் நிச்சயம் பிரச்சினைகள் வரும். அந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நீர்நிலை மசோதாவை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது மறைத்து விடலாம் என்று தி.மு.கவும், அதனுடைய கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், வி.சி.கே போன்ற மக்கள் விரோத கட்சிகளும் தொழிலாளர் அமைப்புகளும் திட்டம் போட்டு இந்த ஒரு செயலை அரங்கேற்று இருக்கிறது தெரிய வருகிறது.
கடந்த ஆட்சிகளின் போது தொண்டை நீர் வற்ற தங்களுடைய பேச்சுக்களினால் கவனத்தை ஈர்த்த பூவுலக்கின் நண்பர்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது தி.மு.கவின் முழு அடிமைகளாக மாறி இயற்கை வளங்களை தற்போது சுரண்டுவதற்கு இந்த ஒரு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. இதற்கு அவர்கள் குறைந்தபட்ச எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது மிகவும் வெட்கக்கேடான செயல் தமிழகத்தின் தமிழர்களின் நீர்நிலைகளை ஒட்டுமொத்தாகமாக அளித்துக் கொள்ளையடிக்க துடிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டம் 2023 திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கையும் தற்போது எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: Twitter