Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கையில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் கிருஸ்தவ மிஷனரிகள்!

The Srilankan Hindus were attacked by Christian Missionaries.

இலங்கையில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் கிருஸ்தவ மிஷனரிகள்!
X

Mission KaaliBy : Mission Kaali

  |  23 Sep 2021 10:21 AM GMT

இலங்கையில் கால்நூற்றாண்டுகளாக தமிழ் இந்துக்களுக்கும், பெளத்த சிங்களர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருவது மட்டுமே நமக்குத்தெரியும். ஆனால் இந்த சண்டைக்கு முக்கியக் காரணம் மதம் மாறிய கிருஸ்தவ மிஷனரிகளே. இந்துக்களையும், பெளத்தர்களையும் ஒருசேர மதமாற்றுவதற்காக நிகழ்த்தப்பட்டதே இந்தப் போர் என்பதை போன கட்டுரையில் தெளிவாக பார்த்தோம். அதுமட்டுமல்ல..!

இலங்கையில் நடத்தப்பட்ட போர் என்பது இலங்கை இந்துக்களை மட்டும் மதமாற்ற நடத்தப்பட்ட சதி கிடையாது. உண்மையில் இது இந்தியாவிற்காக விரிக்கப்பட்ட வலை. இந்தியாவில் உள்ள இந்துக்களை முழுவதுமாக பிரித்து அவர்களை அடித்துக்கொள்ள வைப்பதற்கு முன்பு, அதுபோன்ற மாதிரி பரிசோதனை களமாகவே இலங்கை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்தால், மக்கள் பயன்பட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்பு சில மனிதர்களிடம் அதை செலுத்தி பரிசோதனை செய்வது வழக்கம். இதன் மூலம் அந்த மருந்து எப்படி வேலை செய்கிறது? அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன? செலுத்தப்பட்ட மருந்து ஒழுங்காக வேலை செய்கிறதா? என்பதுபோன்ற பல விஷயங்களை மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.

ஒருவேளை ஏதாவது மாற்றம் செய்யவேண்டியிருந்தால் அதை செய்து இறுதியில்தான் வீரியமிக்க அதேநேரம் பாதுகாப்பான மருந்தை வெளியிடுவார்கள். அதேபோலத்தான் இந்தியாவில் தமிழ் இந்துக்களுக்கும், பிற இந்துக்களுக்கும் பிரிவிணையை ஏற்படுத்தி அதன்மூலம் மதமாற்றம் செய்யவேண்டும் என்பதே மிஷனரிகளின் நோக்கம். அதை இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் நேரடியாக செய்வது கடினம். அதனால்தான் பரிசோதனை மாதிரியாக இலங்கையை பயன்படுத்தியுள்ளனர் கிருஸ்தவ மிஷனரிகள். இதுப்பற்றி பிரபல வரலாற்று ஆராச்சியாளர் சந்திரசேகர் 'மீடியான்' என்ற செய்தி நிறுவனத்திற்கு விரிவான பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள தமிழர்கள், சிங்களர்களிடையே போரைத் தூண்டியதன் மூலம் இனவாதத்தை அரசியல் செய்ய எப்படி பயன்படுத்த முடியும்? அந்த அரசியல் மூலம் மதமாற்றத்தை எப்படி ஊக்கப்படுத்த முடியும்? எந்த மாதிரி அரசியல் செய்தால் என்ன மாதிரி ரியாக்‌ஷன் அரசு கொடுக்கும்? என்பதுபோன்ற பல நுட்பமான ஆராய்ச்சிகளை கடந்த கால்நூற்றாண்டுப் போரில் கிருஸ்தவ மிஷனரிகள் செய்து வந்துள்ளனர். இன்று அந்த போரின் வடுக்களை இந்துக்கள் மற்றும் பெளத்தர்கள் ஒருசேர அனுபவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான நேரத்தில், அரசியல் பலத்தை இழந்துள்ள இந்துக்கள் மீது நேரடியாக தாக்குதலில் கிருஸ்தவ மிஷனரிகள் ஈடுபடத்தொடங்கியுள்ளதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. ஆம்! இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள கத்தோலிக்க கிருஸ்தவ பிஷப்கள் அங்கிருக்கக்கூடிய இந்துக்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இந்துக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

அதாவது விஷயம் என்னவென்றால்… கால்நூற்றாண்டுகளாக இந்துக்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே வெறுப்பை மூட்டிவிட்டுள்ளனர் மிஷனரிகள். மேலும் இந்தப்போரை இனப்போராக சித்தரித்து தமிழர்களை நைச்சியமாக மதமாற்றி வந்தனர். தற்போது இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுற்றதையடுத்து தமிழர்களின் அரசியல் பலம் வெகுவாக குறைந்துள்ளது. இதைப்பயன்படுத்தி தற்போது தமிழ் இந்துக்களை நேரடியாகவே இறங்கியடிக்கத் தொடங்கிவிட்டனர் கிருஸ்தவ மிஷனரிகள்.

தற்போது இலங்கையில் இந்துக்களுக்காக செயல்பட்டு வரும் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் கிருஸ்தவர்களின் மதவெறி தாக்குதலை கண்டித்து கிருஸ்தவ கார்டினலுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் சாரம்சம் பின்வருமாறு…

'இலங்கையில் வசிக்கும் 30 லட்சம் சைவ இந்துக்கள் வசித்து வருகிறார்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்த மதவெறி பிடித்த பிரான்சிஸ் சேவியர் மன்னார் பகுதிக்கு வந்தான். அங்கே இருந்த சைவ இந்துக்களை மதமாற்றச்சொல்லி வற்புறுத்தினான். மதம் மாற மறுத்த சைவ இந்துக்களை அவன் தாங்க முடியாத சித்ரவதைகளுக்கு உட்படுத்தினான். பலரின் கைகால்களை துண்டித்து முடமாக்கினான். மேலும் பலரை இரக்கமின்றி கொலை செய்தான். இதுதான் இலங்கையில் கிருஸ்தவர்களால் நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப்போர்.

இப்படி இந்துக்கள் கிருஸ்தவ மிஷனரிகளினால் சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்திருந்தாலும், அன்றும் சரி, இன்றும் சரி இந்துக்கள் அந்த காழ்புணர்ச்சியை மனதில் வைத்திருக்கவே இல்லை. இந்துக்கள் தர்மவழி நடப்பவர்கள். அதனால் சக மதத்தை மதிக்கவேண்டும் என்ற பண்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

அதற்கு உதாரணம் சிலாபம் பகுதி. அங்கே மொத்தம் இருபதாயிடம் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 10, 15 குடும்பங்களைத் தவிர அனைவருமே சைவ இந்துக்கள்தான். அதுமல்ல… இவர்கள் அனைவருமே தங்களை மகாபாரதத்தின் பாண்டவர்கள் வம்சம் வந்தவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். மேலும் அவர்கள் திரெளபதி அம்மனுக்கு திருக்கோயில் கட்டி தீமிதிக்கும் வழக்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அங்கே ஃபிரான்சிஸ் சேவியர் பெயரில் ஒரு தேவாலயம் இருந்து வந்தது. 1848ல் கட்டப்பட்டது அந்த தேவாலயம். ஆனால் சேவியர் அந்தப் பகுதிக்கே வந்தது கிடையாது. (அதாவது இந்துக்கள் குடியிருக்கும் பகுதியில் வரலாற்று பின்புலம் இல்லாத தேவையில்லாத கட்டிடமாகவே அந்த சர்ச் இருந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்)

இந்த சூழ்நிலையில் இந்துக்களே, கிருஸ்தவர்களுக்கு ஆன்மீக ரீதியாக உதவி செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், அந்த சர்சை மறுசீரமைத்து கொடுத்தனர்.

அதாவது காலம் காலமாக கிருஸ்தவ மிஷனரிகள் இந்துக்களுக்கும், இந்துக் கோயில்களுக்கும் எதிராக செய்த அனைத்து சதிகளையும் மறந்து இந்துக்கள் திறந்த மனதுடன் கிருஸ்தவர்களுக்கு உதவி செய்தனர்.

ஆனால் பதிலுக்கு கிருஸ்தவ மிஷனரிகள் செய்தது என்ன? இன்னமும் கிருஸ்தவ மிஷனரிகள் இந்துக்கோயில்களை இடித்துக்கொண்டே இருக்கின்றனர். கிருஸ்தவ மிஷனரிகள் இந்துக்கள் மீது திட்டமிட்டு வெறுப்பை பரப்புகின்றனர். இந்துக்களை விட கிருஸ்தவர்களே உயர்ந்தவர்கள் என்ற மேலாதிக்கத்தை பரப்புகின்றனர். இப்படித்தான் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருக்கேதிச்சரத்தை உடைத்து மண்ணோடு மண்ணாக்கினீர்கள். இப்போது மகாசிவராத்திரி நாளன்று திருக்கேதீச்சர வளைவை உடைத்து, கோயில் நந்தி கொடியை காலால் மிதித்து அராஜகம் செய்துள்ளீர்கள். அதுமட்டுமா? விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட நினைத்த சமயத்தில் பரப்புக்கடந்தான் அருள்மிகு விநாயகர் கோயிலை உடைத்துள்ளீர்கள். இதுப்போல நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டி சம்பங்கள் கிருஸ்தவ மிஷனரிகளால் இந்துக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

கிருஸ்தவ மிஷனரிகளுக்கு தலைமை வாட்டிகன். அப்படியென்றால் அவர்கள் சொல்படிதானே நீங்கள் செயல்படுகிறீர்கள்?

உங்கள் வாடிகன் தலைமையே ஒழுக்கமாக இல்லை.

Pope Stephen VI -22 May 896 to August 897;

Pope John XII – 16 December 955 to 14 May 964;

Pope Benedict VIII – 18 May 1012 to 9 April 1024;

Pope Benedict IX ruler of the Papal States on

three occasions between October 1032 and July 1048;

Pope Urban VI – 1318 to October 15, 1389;

Pope Alexander VI – 11 August 1492 to 18 August

1503;

Pope Leo X – 9 March 1513 to 1 December 1521.

நீங்கள் மேலே பார்க்கும் அனைத்து போப்களுமே அராஜகம் செய்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

உண்மையில் நீங்கள் இலங்கை அரசின் ஆணைகள், விதிகள், சட்டங்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம் தரவேண்டும். வாடிகனின் சட்டமெல்லாம் அதற்குப் பிறகுதான் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

மன்னார் கிருஸ்தவ கல்லூரி பாடத்திட்டங்களில் சைவ இந்துக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் பாடங்களை கிருஸ்தவ மிஷனரிகள் எழுதியுள்ளனர். அரசின் பாதுகாப்பு விவகாரங்களில் தலையிட்டு இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குகிறீர்கள்.

இதுப்போன்ற அனைத்து இந்து விரோத போக்குகளை நிறுத்த வேண்டும். இதுப்பற்றி விசாரிக்க, உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். ஒருவேளை தவறினால், உங்களுடைய அராஜகங்கள் பற்றி விசாரிக்க இலங்கை அரசிடம் கோரிக்கை வைப்போம். மேலும் உங்களுக்கு எதிரான அனைத்து ஆதாரத்தையும் நாங்கள் சமர்பிப்போம்.'

இவ்வாறு அந்த கடிதத்தில் இலங்கை இந்துக்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. என்ன விஷயத்தை தெளிவாக படித்தீர்களா? இந்தியாவில் மட்டுமல்ல எங்கிருந்தாலும், இந்துக்கள் மதசார்பற்றவர்களாகத்தான் இருந்துவருகிறார்கள். கிருஸ்தவ மிஷனரிகள் எங்கிருந்தாலும் மதவெறி பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள்.

அவர்களை அடக்க நாம் மதவெறி கொண்டவர்களாக மாற வேண்டும் என்பதல்ல. குறைந்தபட்சம் ஒற்றுமையுடனாவது இந்துக்கள் வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இன்று இலங்கையில் இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள கதி நாளை இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு ஏற்படும் நாள் தொலைவில் இல்லை.

Mission Kaali

Next Story
கதிர் தொகுப்பு
Trending News