Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கையின் தலையெழுத்தை மாற்றிய குடும்ப அரசியல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை மணியா?

இலங்கையின் தலையெழுத்தை மாற்றிய குடும்ப அரசியல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை மணியா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 May 2022 2:47 AM GMT

இலங்கை சுதந்திர கட்சி தலைவர் பண்டாரநாயகா. அவருடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சே. தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த ராஜபக்சே அரசியலுக்கு வந்தார். அவர் 1970இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

பின்னர் 2002 இல் எதிர்க்கட்சி தலைவராகவும், பிறகு 2004ம் ஆண்டு இலங்கையின் 13வது பிரதமராக பதவியேற்றார், 2005இல் இலங்கையின் உச்சபட்ச அதிகார பதவியான அதிபர் பதவியையும் அடைந்தார்.

இவர் அரசியலில் இருந்தபோது இவரது தம்பிகள் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டுவந்தார்.

தற்போது ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் உயர்பதவியான அதிபர் பதவியை வகிக்கிறார். மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் அமைச்சராக உள்ளார்.

ராஜபக்சேவின் மற்றோரு தம்பியான சமல் ராஜபக்சேவும் இலங்கையின் பாசனத்துறை அமைச்சராக உள்ளார் அவரின் மகன் நாமல் ராஜபக்சேவும் அமைச்சராக உள்ளார், இவரின் மற்றொரு மகனும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தின் 20 ஆண்டுகால ஊழல் அரசியல்தான் என்பது குறிப்பிடத்தாக்கது.

ராஜபக்சே தந்தை யாரோ ஒருவர் ஆரம்பித்த கட்சியை கைப்பற்றினார். அதே போல தமிழகத்திலும் ஒரு கட்சித்தலைவர் கைப்பற்றினார்.

ராஜபக்சே குடும்பம் போலவே, மகன், மகள், மருமகள், உறவினர்கள் என அனைவரையும் அரசியலுக்குள் கொண்டு வந்தார். அங்கே எப்படி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ, அதே போல தமிழகத்திலும் நடக்க வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News