Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கையில் 'பர்தா' தடை விதிக்கும் சட்டம் பரிசீலனை - சாத்தியமாகுமா?

இலங்கையில் பர்தா தடை விதிக்கும் சட்டம் பரிசீலனை - சாத்தியமாகுமா?

Saffron MomBy : Saffron Mom

  |  28 March 2021 11:22 AM GMT

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இலங்கை அரசாங்கம் பர்தா அணிவதற்கு தடை விதித்தது எனக் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், இத்தகைய ஒரு கொள்கை பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெளிவுபடுத்தினர்.

மேலும், "இதுகுறித்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒரு பரந்த உரையாடல் நடத்தி எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு ஒருமித்த கருத்தை எட்ட தேவையான ஆலோசனைகள் நடைபெறும்" என்றும் உறுதி அளித்தனர்.

இலங்கை வெளியுறவு துறை செயலர் ஜெயநாத் கொலம்பேஜ் இதுகுறித்துக் கூறுகையில், இதுபோன்ற தடையை விதிக்க அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், இந்தப் பரிசீலனை விவாதத்தின் கீழ் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அமைச்சக செய்தித் தொடர்பாளர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் கூறுகையில், இது சம்மந்தமான உரையாடல்கள் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை பொது இடங்களில் முழு முகம் அணியும் பர்தா மற்றும் நிக்காப்களை தடை செய்து விட்டதாக வெளியான அறிவிப்புகள் குறித்து பல நாடுகளில் ஆதரவும், முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பும் நிலவியது. இலங்கை அரசு மறுபடியும் நிதானமாக யோசித்து இந்த தடையை வேறுவகையில் கொண்டுவர முடிவு செய்யலாம். ஏனெனில் உலகம் முழுக்க இந்த விவாதங்கள் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இந்த விவாதங்கள் பரவி வருகின்றன. மார்ச் 7, 2021ல் பொது இடங்களில் முகங்களை மறைப்பது (முஸ்லிம் பெண்களால் அணியப்படும் பர்தா, நிகாப் அனைத்தையும் சேர்த்து) தடை செய்ய வேண்டும் என சுவிட்சர்லாந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகள் பர்தாவை முழுவதுமாக தடை செய்யவோ அல்லது முழு முகத்தை மூடுவதை மட்டும் தடை செய்யவோ பல சட்டங்களை இயற்றியுள்ளன. உதாரணமாக பிரான்ஸ், பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள். பல ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களுக்கு பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பர்தாவை தடை செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் நடந்து வந்த பொழுது ஜெர்மனியின் 0.01 சதவிகித மக்கள் மட்டுமே பர்தா அணிகிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. எனவே இது ஒரு முக்கியமான கேள்வி. எத்தனை பெண்கள் இப்படி முகங்களை மூடும் அளவிற்கு பர்தாக்களை அணிகிறார்கள்?

முஸ்லிம்கள் இலங்கை மக்கள் தொகையில் அதிகபட்சம் பத்து சதவிகிதம் இருக்கிறார்கள். அங்கே புத்திஸ்ட்கள் 70 சதவிகிதம் ஆகவும், 13 சதவிகித ஹிந்துக்களும் 7 சதவிகித கிறிஸ்தவர்களும் இருப்பார்கள். இலங்கை முஸ்லிம் பெண்களில் மிக குறைந்த அளவு சதவிகிதத்தினரே பர்தா அணிகிறார்கள். இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 22 மில்லியன் மக்கள்தொகையில் மிக மிகக் குறைந்த அளவினரே பர்தா அணிவார்கள். இலங்கை அரசாங்கம் இத்தகைய பெண்களை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதுகிறார்களா?

ஐரோப்பிய நாடுகளில் தடை விதிப்பதற்கு முக்கியமான காரணம் இத்தகைய முகங்களை மறைக்கும் பர்தாக்கள் பெண்களை அடிமைப்படுத்துவதின் ஒரு அடையாளமாகும் என்றும், சுவிட்சர்லாந்து போன்ற திறந்த சமூகங்களில் முகங்கள் காட்டப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதுபோலவே பிரான்ஸில் தடை செய்த போதும் அந் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இது எதிராக செல்வதாக வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது, நீதிமன்றம் இந்தத் தடை நியாயமானது என்று கூறி முடிவு செய்தது.

ஐரோப்பிய நாடுகளில் இவை தடை செய்யப்படுவது பெண்களின் உரிமைகள் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் பெண்கள் சமுதாயத்தில் எளிதாக இணக்கமாக வாழ வேண்டும் என்பதும் காரணமாக கூறப்பட்டது.

நமக்கு அவ்வளவாக தெரியாத இலங்கையின் இந்த திட்டம் மேற்கண்ட எந்த காரணங்களையும் குறித்து பேசவில்லை. இது கடந்த வருடத்திற்கு முன்பு நடந்த ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல்களின் விசாரணைக்குப் பிறகு தேசிய பாதுகாப்பிற்கு அறிவுறுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என்று தெரிவிக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் தனிப்பட்டவர்களின் உரிமை தொடர்பான வாதங்கள் பல காலமாக நடந்து வருகிறது. அவசர நிலைகளில் பொழுது தனிப்பட்ட உரிமைகள் தேசிய பாதுகாப்பிற்காக எளிதாக பறிக்கப்பட்டு விடுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான் என பல உதாரணங்களை வரலாற்றின் பல சம்பவங்களில் இருந்து நாம் கூற முடியும். எனவே தேசிய பாதுகாப்பை அதிகரிக்கவும், தீவிரவாதத்தை ஒடுக்கவும் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்படுவார் என நாம் எதிர்பார்க்கலாம் . தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பாதுகாப்பு ஆகிய அனைத்தும் மற்ற அனைத்து தனிமனித உரிமைகளையும் மிஞ்சி விடுகிறது.

இலங்கை, பர்தா தடையை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு போலதான் தெரிகிறது. இலங்கை ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இந்த எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. கொரானா வைரசினால் இறந்த நோயாளிகள் முஸ்லிம்களாக இருந்தாலும் எரிக்கத்தான் வேண்டும் என்ற கொள்கையை, சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பிற்க்குப் பிறகு தற்பொழுது தளர்த்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்க முஸ்லிம் சமூகங்கள் ஏற்கனவே தங்களது வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் இந்த திட்டத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இலங்கை ஏற்கனவே கொரானா வைரஸ் பின்னால் வந்த பொருளாதார நெருக்கடி, கடன், வளர்ச்சியின்மை மற்றும் சுற்றுலா அப்படியே நின்றுவிட்டது ஆகிய காரணங்களினால் ஏற்கனவே நொந்து போயிருக்கும் நிலையில் இத்தனை நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். அவர்களின் உள்ளூர் அரசியல் எந்த அளவிற்கு ஆளுங்கட்சிக்கு பாதிப்பையும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை பொறுத்துதான் இந்தத் திட்டம் நிறைவேறுவது அமையும்.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News