உதயநிதியின் ஆபாச பேச்சை கண்டிக்காமல் பொள்ளாச்சி போராட்டத்திற்கு நாள் குறித்த மு.க.ஸ்டாலின்!
உதயநிதியின் ஆபாச பேச்சை கண்டிக்காமல் பொள்ளாச்சி போராட்டத்திற்கு நாள் குறித்த மு.க.ஸ்டாலின்!
By : Mohan Raj
இது மட்டுமல்லாமல் ஒரு பெண்ணை பற்றி பேசிய தன் மகனை கண்டிக்க வக்கற்று பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு தன் தங்கையாகிய கனிமொழியை போராட அழைத்திருப்பது இவர்களுக்கு மக்கள் பிரச்சினைகளை விட நடக்கும் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்து அரசியல் ஆதாயம் தேடி ஆட்சிக்கு வர துடிப்பது மட்டுமே தெரிகிறது.
கடந்த வாரம் உதயநிதியை ஒரு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடியை விமர்சிக்கிறேன் "எடப்பாடி அல்ல அவர் டெட்பாடி, அதிலும் மேசைக்கடியில், இரு காலுக்கிடையில் சென்று பதவியை வாங்கியவர்" என தரம் கெட்ட வார்த்தைகளால் முதல்வரையும், ஒரு பெண் என பாரமல் சசிகலா'வையும் விமர்சித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன குறிப்பாக பெண்கள் மத்தியில். பா.ஜ.க அகில இந்திய மகளிரணி தலைவி திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் "உங்கள் மகனை கண்டியுங்கள் திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களே" என கடுமையாக ட்விட் செய்யும் அளவிற்கு இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்ந நிலையில் தான் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளுக்கு நீதி கேட்க ஸ்டாலின் அரசியல் லாப கணக்கோடு இறங்கியுள்ளார். அதாவது நாளை காலை (10/01/21) அன்று பொள்ளாச்சியில் தி.மு.க மகளிரணி தலைவி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் தி.மு.க சார்பாக போராட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களின் பிரச்சினை முன்னெடுத்து போராடுவது நியாயமான செயல்தான் பாராட்டதக்கது. ஆனால் தன் கட்சியிலேயே அதுவும் தன் மகனே ஒரு பெண்ணை அதுவும் துர்கா ஸ்டாலின் ஒத்த வயதுடைய பெண்மணியை ஆபாசமாக விமர்சிப்பதை கண்டிக்க வக்கற்று ஊரார் பிரச்சினையை வைத்து குளிர்காய முயற்சிப்பது கண்டு ஊர் சிரிக்கிறது. ஸ்டாலின் அரசியல் லாப நோக்க நடவடிக்கை அப்பட்டமாக பல் இளித்துக்கொண்டு தெரிகிறது.