Kathir News
Begin typing your search above and press return to search.

கச்சத் தீவை மீட்கும் நேரம் வந்து விட்டதா? அதன் தேவையும், அதில் உள்ள சிக்கல்களும்!

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளையும், அரசியலமைப்பு சிக்கல்களையும் தாண்டி கவலைகள் அதிகமாக உள்ளது.

கச்சத் தீவை மீட்கும் நேரம் வந்து விட்டதா? அதன் தேவையும், அதில் உள்ள சிக்கல்களும்!

Saffron MomBy : Saffron Mom

  |  1 March 2021 1:18 PM GMT

முன்னாள் இராணுவத் தளபதியும், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு), கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க 'தீவிரமான முயற்சிகளை' மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு சில காலம் எடுக்கும் என்றும் சமீபத்தில் தனது தமிழக வருகையின் போது அறிவித்தார்.

சாதாரண சமயத்தில், சிங்கின் 'கட்சத் தீவு வாக்குறுதி'யை இந்த விஷயத்தில் சிக்கல்களை அறிந்த ஒரு ராணுவ தளபதியின் கருத்துக்களாக எடுத்துக்கொள்ளாமல், ஆளும் பா.ஜ.க-NDA வின் ஒரு தலைவரால் தேர்தலுக்கு சற்று முன்னால் வழங்கப்படும் வாக்குறுதி எனலாம். ஆனால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளையும், அரசியலமைப்பு சிக்கல்களையும் தாண்டி இந்த முறை கவலைகள் இன்னும் அதிகமாக உள்ளது.

'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை' நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகியவற்றில் சீன நிறுவனங்கள் அமைக்க அனுமதிக்கும் இலங்கையின் முடிவு தான் தற்போது சர்ச்சைக்குரியது. ஏனெனில் இவை அனைத்தும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் அமைந்துள்ள பால்க் விரிகுடாவில் (இந்தியாவில் இருந்து 55 கி.மீ.) தூர தொலைவில் மட்டுமே உள்ளன.


இந்தியா, சீனாவுடன் விரோதமான உறவுகளைக் கொண்டுள்ளது, சீனாவின் 'கடன் கொடுத்து வலையில் விழ வைக்கும் ராஜ தந்திரத்" திட்டத்திற்கு இலங்கையில் ஒரு பெரிய இடம் உள்ளது. ஆளும் கட்சி அல்லது இலங்கையில் தலைவர்கள் யாராக இருந்தாலும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு குறித்து இந்தியாவிற்கு கவலைகள் வளரத் தான் செய்யும்.

போருக்குப் பிந்தைய இலங்கையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு இலங்கையை மேம்படுத்த இந்தியா உதவிகளை வழங்கியது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட இத்தகைய உதவிகளுக்கு, இலங்கைத் தமிழர்கள், தமிழகத்துடன் கொண்ட 'தொப்புள் கொடி' உறவு மட்டும் காரணமல்ல.

சீனக் கடன் வழங்குநர்கள் இலங்கை ஹம்பாந்தோட்டாவை 99 ஆண்டு குத்தகைக்கு பெற்ற பிறகு, இலங்கையில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளித்தல் மற்றும் செயல்படுத்துதல் என்ற பெயரில், சீனா தனது கரையோரங்களுக்கு எங்கும் நெருங்கி வருவதை இந்தியா விரும்பவில்லை.

ஹம்பந்தோட்டா போர்ட்

நீண்ட காலமாக இங்கும் அங்கும் ஊசலாடும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இன்னும் ஒரு முறை சமீபத்தில் கவிழ்ந்தது. இந்தியா மற்றும் ஜப்பானுடன் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) கூட்டாக உருவாக்க கையெழுத்திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அதிபர் கோதபய ராஜபக்சேவின் அரசாங்கம் ரத்து செய்தது.

இலங்கை அரசாங்கத்தின் இம்முடிவுக்கு பின்னால் சீனாவின் அழுத்தம் உள்ளதா அல்லது தொழிலாளர் சங்கங்களினால் ஏற்பட்ட பிரச்சினையா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், இந்த நடவடிக்கைக்கு பின்னால் சீனா இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது. இருப்பினும், இலங்கை வெளியுறவு மந்திரி தின்சே குணவர்தன, சீனாவின் அழுத்தத்தை மறுத்துள்ளார்.

இந்திய சிந்தனை சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு, பசுமை மின் திட்டங்களுடன் சேர்ந்து, இலங்கையின் வடக்கு தீவுகளில், 'ஒட்டுக்கேட்கும் போஸ்ட்களை' சீனா நிறுவ முடியும் என்பதில் கவலை உள்ளது. இப்போது யாழ்ப்பாணத் தீவுகளாக இருந்தால், அது அடுத்ததாக கச்சத்தீவு ஆகலாம்.

வளர்ந்து வரும் நிலைமையை இந்தியா கவனிக்க வேண்டியது அவசியம். இப்போது அந்த நாட்டில் ஆட்சியில் இருக்கும் ராஜபக்சர்களாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுக்கு பதிலாக வேறு யாராக இருந்தாலும் சரி, இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும். ராஜபக்ஷேக்களை விட 'இந்தியாவின் நண்பர்' என்று கூறப்படும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான், ஹம்பன்தோட்டா 99 வருட குத்தகையில் சீனர்களுக்கு சென்றதற்கு முக்கிய காரணம் என்பதை உணர வேண்டும்.

இரு நாடுகளுக்கிடையில் IMBL (சர்வதேச கடல் எல்லைக் கோடு) ​​1974 மற்றும் 1976 ஆம் ஆண்டின் இரட்டை உடன்படிக்கைகள் வரை வரையறுக்கப்படவில்லை என்று இந்தியா எப்போதும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1974-76 உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கையெழுத்திட்டபோது இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தார் என்பதும், இரண்டாவது உடன்படிக்கை அவசரகாலத்தில் கையெழுத்திடப்பட்டதும், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ததும் முக்கியமற்றது.

உடன்படிக்கைகளின்படி, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'சராசரி கோடு' கொள்கையிலிருந்து விலகுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. கச்சத்தீவு, IMBL கோடில் இலங்கை தரப்பில் விழுந்தது. இரு நாடுகளையும் இணைக்கும் பால்க் நீரிணை, இருவரின் 'பிரத்யேக களமாக' மாறியது என்பதும் இதன் பொருள்.

60 கள் மற்றும் 70 களின் முற்பகுதியில் நடந்த போர்களுக்குப் பிறகு, குறிப்பாக பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயணிக்கத் தொடங்கிய பின்னர், குறைவாக- பாதுகாக்கப்பட்ட பெருங்கடலை காக்க இந்தியாவிற்கு நண்பர்கள் தேவைப்பட்டது. பா.ஜ.க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் கையெழுத்திட்டபோது இந்த ஒப்பந்தங்களை எதிர்த்தார், ஆனால் பிரதமராக அவர் அவற்றை ஏற்றுக்கொண்டார். ஆனால் இலங்கை, சீனர்களை இந்திய கடற்கரைக்கு நெருக்கமாக அழைப்பதன் மூலம் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கைகள் இப்போது பொய்யாக மாறியதாகவும் தெரிகிறது.

கச்சத்தீவை மீட்க, மறைந்த தமிழக முதலமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல், கட்சத்தீவை மத்திய அரசு 'கொடுத்ததை' எதிர்த்து சவால் விடுத்தனர். 2011 ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக அரசும் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்தது. இரு தலைவர்களின் மரணத்தோடு, மாநில அரசின் மனு மட்டும் நடப்பில் இருக்கலாம்.


1991 ல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபின், ஜெயலலிதா, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கோபுரங்களிலிருந்து தனது சுதந்திர தின உரையிலும், 2016ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். நீண்ட காலமாக, மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் இத்தகைய உணர்வுகளை ஒளிபரப்பி வருகின்றன, குறிப்பாக கடலில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் தோட்டாக்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில்.

ஆகஸ்ட் 2014 இல், மோடி அரசு மையத்தில் பதவியேற்ற சில மாதங்களிலேயே, அப்பொழுது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில், கச்சத்தீவை போரின் மூலம் மட்டுமே இந்தியா திரும்பப் பெற முடியும் என்றும் போர் நடத்தும் திட்டம் இல்லை என்றும் கூறினார். UNCLOS (ஐ.நா. கடல் சட்டம் தொடர்பான மாநாடு) இன் கீழ் 70கள் உடன்படிக்கைகளை இரு நாடுகளும் அறிவித்திருந்ததால், ஒருதலைப்பட்சமாக கச்சத்தீவை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை. இது சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள நிலைப்பாடாகும். இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும், எதிர்காலத்தில், தீவை (திரும்ப?) இந்தியாவுக்கு வழங்குவதாக / பரிசாக வழங்குவதாக எதிர்பார்க்க முடியாது.

உடன்படிக்கைகளின் கச்சதீவு பகுதி நன்கு அறியப்பட்டாலும், இந்தியா பிரத்தியேகமாக 'வெட்ஜ் கரை' யை (கன்னியாகுமாரி அருகில்) சொந்தம் கொண்டிருப்பது தமிழக அரசியல் மற்றும் இந்த விஷயத்தில் பல அறிஞர்களால் அதிகம் அறியப்படவில்லை அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை. வெட்ஜ் கரையில் இலங்கை மீனவர்களின் உரிமைகளை ஒப்புக்கொள்வதன் மூலம், இந்தியா மூன்று வருடங்கள் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதித்தது.

வெட்ஜ் கரை பகுதியில் உள்ள இலங்கை மற்றும் இலங்கை மீனவர்களுக்கு 'கருணைக் காலம்' (?) முடிவடைந்ததிலிருந்து, இந்தியா அந்த நீரில் முன்பே தீர்மானிக்கப்பட்ட கரையை அமல்படுத்தியுள்ளது. இது 1974 ஆம் ஆண்டு உடன்படிக்கை போலில்லை. அது இந்திய மீனவர்களுக்கு கட்சத் தீவில் வலைகளை உலர்த்துவதற்கான சுதந்திரத்தை உறுதியளித்தது - இது ஒரு வாதத்திற்கு வழிவகுக்கிறது, அதாவது வலைகள் ஈரமாகிவிட்டால் மட்டுமே வலைகளை உலர வைக்க வேண்டும், இது மறைமுகமாக அந்த நீரில் மீன் பிடிக்க அனுமதியை குறிக்கிறது.


இந்தியா 'திரும்ப' கச்சத்தீவை எடுக்க வேண்டியிருந்தால், வெட்ஜ் கரை இலங்கைக்கு 'திரும்பிச் செல்ல வேண்டும்'. இந்தப் பகுதி கடல்களில் உள்ள பாறைகள் காரணமாக ஒரு ரோந்து படகு கூட இந்த நீர்நிலைகளுக்குள் செல்ல முடியாது. இது இந்தியாவுக்கு விரோதமான நாடுகளின் படகுகளுக்கும் பொருந்தும். அது ஒரு நல்ல விஷயம்.

இறுதியாக, இந்தியாவிற்கு விஷயங்களைப் பற்றி சிந்திக்க நேரம் தேவைப்படும். ஆகவே மே மாதம் நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் ஆளும் அ.தி.மு.க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வரும் ஆளும் கட்சித் தலைவர்கள் கவனமுடன் பேச அறிவுறுத்தபட வேண்டும்.

Reference : ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News