தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான்: இந்தியாவின் நிலைப்பாடும், எதிர்காலமும் !
அல்கொய்தாவிற்கு புகலிடம் வழங்கி அமெரிக்காவின் மீதான 2001 தாக்குதல் தொடுக்கப்பட்டதோ, அதே தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.
By : Saffron Mom
செப்டம்பர் 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதத்தின் மீதான உலகத்தின் போர் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்த ஒப்பந்தத்தை தான் பின்பற்றியதை ஜோ பிடென் நியாயப்படுத்தினார்.
அமெரிக்காவும் தலிபான்களும் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் அரசு எந்தவித ஆதாரவும் இல்லாமல் தனித்து விடப்பட்டது. எந்த தாலிபான்கள் அல்கொய்தாவிற்கு புகலிடம் வழங்கி அமெரிக்காவின் மீதான 2001 தாக்குதல் தொடுக்கப்பட்டதோ, அதே தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.
தலிபான்களை கேம்ப் டேவிட்டிற்கு செப்டம்பர் 2019 இல் அழைத்தபோது தொடங்கிய இந்த பேச்சுவார்த்தைகள் 2020 பிப்ரவரியில் கத்தார் தலைநகர் தோஹாவில் தொடர்ந்தது. இது ஆப்கானிஸ்தானிற்கு 'அமைதி ஒப்பந்தம்' என்பதை விட, இருபது வருடங்களாக வெற்றி பெற முடியாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரு போரிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான ஒரு வழி என்பதே சரி.
டோஹா ஒப்பந்தத்தில் இருந்து ஜோ பிடென் வெளியேறியிருந்தால் என்றால் ஐந்து அதிபர்களை தாண்டி நடந்து கொண்டிருக்கும் ஒரு போரை அடுத்து வருபவரிடம் அவர் ஒப்படைக்க வேண்டியிருக்கும். இது அமெரிக்காவிற்கு ஒரு வாய்ப்பாக இல்லை. எனவே வெளியேறி விட்டபிறகு இராஜதந்திரம், சர்வதேச செல்வாக்கு, மற்றும் மனிதாபிமான உதவிகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உதவ இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வங்கி கணக்குகளில் உள்ள ஆப்கான் அரசாங்கத்தின் பல மில்லியன் டாலர்களை தலிபான்கள் அணுக முடியாமல் முடக்கியுள்ளனர்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு இவ்வளவு சீக்கிரம் குழப்பங்கள் நேரும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தலிபான்கள் சில வாரங்களுக்குள் நாடு முழுவதையும் கடந்து தலைநகரை எட்டினர். கடந்த முறை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினர் அனுபவித்த கொடுமைகள் நினைவுகளாக பலர் மனதிலும் இருந்தது.
காபூல் விமான நிலையத்தில் தப்பிச் செல்வதற்காக ஏற்படும் குழப்பங்களும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தாலும் ஜோ பிடன் அசைந்து கொடுக்கவில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா வெளியேறுவதற்கு என்று எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை என்று அவர் வாதிட்டார். ஆப்கான் மக்கள், அதன் அரசாங்கம், அதன் ராணுவம் ஆகியோர் தலிபான்களை எதிர்த்துப் போராடவில்லை என்றும் தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் சொந்த ஆதரவாளர்களே இந்த அளவு கல்நெஞ்சு கணக்கீடுகளை எதிர்பார்க்கவில்லை.
உலகம் முழுவதும் மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி வரும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் அதற்கு நேர்மாறான முடிவுகளை எடுத்துள்ளது. என்ன நடந்தாலும் அமெரிக்க வீரர்களை வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அமெரிக்க மக்களின் பெரும்பாலானோரின் கருத்துக்களையே அமெரிக்க அரசு பின்பற்றுகிறது என்றும் வாதிடுகிறார்கள்.
இருபது வருடங்களாக எந்தவித முடிவும் இல்லாமல் தொடரும் போர் அனைவரையும் சோர்வடைய வைத்து விட்டது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தொடர்ந்து வரும் போட்டி அடுத்து ஆப்கானிஸ்தானில் தொடரலாம். சீனாவில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் குழுக்களுக்கு தலிபான ஆதரவு வழங்கக் கூடாது என்று சீனா ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக சீனாவும் தலிபான்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த பலமுறை சந்தித்து வருகின்றனர். ஒருவேளை அமெரிக்கா, தங்களால் செய்ய முடியாததை சீனா செய்து பார்க்கட்டுமே என்று விட்டு விட்டதாக கூட கூறலாம். சீனா ஏற்கனவே தலிபான்களுடன் நட்புறவை நீட்டிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா இந்த விவகாரத்தில் புதிய அரசாங்கம் எப்படி நடந்து கொள்கிறது என்பதை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்று பொறுமையாக இருக்கிறது. அதனால் மாஸ்கோவில் இன்னும் தடை செய்யப்பட்டிருக்கும் தலிபான் எப்படி நடந்து கொள்கிறது என்று பார்த்த பிறகே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடியும் என்று ஆப்கானிஸ்தானிற்கான ரஷ்யாவின் தூதுவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஏற்கனவே தலிபான்களின் வருகையே வரவேற்று இது ஆப்கானிஸ்தானில் 'அமெரிக்க அடிமைத்தனத்தின் முடிவு' என்று தெரிவித்துள்ளனர்.
இது எதுவுமே இந்தியாவிற்கு நல்ல விஷயமாக தெரியவில்லை. அதிகப்படியான விஷயங்கள் மாறினாலும் பல விஷயங்கள் அப்படியே உள்ளன. ஆப்கானிஸ்தான் உடனான அமெரிக்காவின் தீவிரவாத போர் முடிவுக்கு வந்தாலும், தற்பொழுது ISIக்கும் தலிபான்களுக்கும் இடையிலான உறவு இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.
1999 இல் நடத்தப்பட்ட IC 814 விமானக் கடத்தலுக்கு தலிபான் அளித்த ஆதரவை மறக்க கூடியது அல்ல. சொல்லப்போனால் இதன்காரணமாக விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள் தலிபான்களின் ஆதரவுடனேயே கந்தஹார் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
20 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா வெளியேறுவது இந்தியாவிற்கு தெளிவான ஆபத்தை அளிக்கிறது.
2001 அக்டோபரில் ஜிகாதி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான் இடையிலான உறவை முறிக்க தயாராக இருந்தது.
2001 செப்டம்பர் தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அப்போதைய இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், "செப்டம்பர் 11 இல் அமெரிக்கா அனுபவித்த மோசமான அனுபவங்களை தான் கடந்த 20 வருடங்களாக இந்தியா அனுபவித்து வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் இவற்றையெல்லாம் யார் நடத்துகிறார்கள் என்றும், அதை எப்படி கையாள வேண்டும் என்றும் எங்களுக்குத் தெரியும்" என்றும் தெரிவித்தார்.
இந்தியா ஆப்கானிஸ்தானிற்க்கு பல வழிகளிலும் உதவி புரிந்து வருகிறது. அவர்களது அவருடைய பாராளுமன்ற கட்டடம், நெடுஞ்சாலைகள், அணைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று பலவற்றை கட்டிக் கொடுத்தது.
இன்று அத்தனை நல்லெண்ணமும் வேலையும் ஆபத்தில் உள்ளது. தலிபான் தங்களுடைய இரண்டாவது ஆட்சியை எப்படி நடத்துகிறார்கள் என்று அனைவரும் பொறுத்து பார்க்க இந்தியாவும் காத்திருக்கிறது. இந்தியா அமெரிக்கா விட்டு ச்சென்ற இடத்தை நிரப்புவதற்காக முன் செல்லுமா, அல்லது அந்த இடம் சீனா பாகிஸ்தானால் நிரப்பப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Cover Image Courtesy: Al Jazeera