Kathir News
Begin typing your search above and press return to search.

தலிபான்களுடன் உறவாடும் சீனா- ஆப்கானிஸ்தான் தாங்குமா?

China-Taliban relationship, doomed Afganisthan?

தலிபான்களுடன் உறவாடும் சீனா- ஆப்கானிஸ்தான் தாங்குமா?

Saffron MomBy : Saffron Mom

  |  5 Aug 2021 2:00 PM GMT

தெற்காசியாவில் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இவை உலகநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவின் எதிர்காலத்தில், கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நாட்களுக்கு முன்பு வரை தலிபான்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சிலநாடுகளின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தற்போது இந்த கொடூரவாதிகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ஒசாமா பின்லேடன் உட்பட தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது உலகறிந்த செய்தி. தலிபான்கள் 1400களின் மனநிலையில் இருக்கும் காட்டுமிராண்டி கும்பல். ஷரியா மற்றும் காலிபாவை நிலைநிறுத்த முயலும் இவர்கள் ஹக்கானி நெட்ஒர்க், அல்கொய்தா, LeT, ISIS ஆகியோரின் கலவையாகும்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற பாகிஸ்தான் தனது உளவுத்துறை அமைப்பான ISI மூலம் பெரும் ஆதரவு அளிக்கிறது.

இதில் மற்றொரு தீய சக்தியும் தற்போது இணைவது போல் தெரிகிறது. சீன ஸ்டேட் கவுன்சிலரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யி இந்த வாரம் தியான்ஜின் சீனாவில், தலிபான் அரசியல் பிரதிநிதி முல்லா அப்துல் கனி பரதர், மத ஆணையம் மற்றும் சில பிரதிநிதிகளை சந்தித்தார்.

சீனாவிற்கு ஆபத்து விளைவிக்க நினைக்கும் எந்த வித சக்தியும் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த தலிபான் அனுமதிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. சீனாவிலிருந்து தனியாக பிரிய நினைக்கும் கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) அல்லது எந்த சீன எதிர்ப்பு சக்திகளும் எதிர்காலத்தில் தலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் ஊக்குவிக்கப்பட மாட்டாது எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனத் தரப்பிலிருந்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஊக்குவிக்க விரும்புவதாகவும், போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் எதிர்கால சீரமைப்பில் தங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவது போல சர்வதேச மன்றத்தில் சீனா அவர்களுக்கு ஆதரவளிக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


ஆப்கானிஸ்தானுடனான சீனாவின் எல்லை வடகிழக்கு வாகான் மாவட்டத்தில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் தொடங்குகிறது. ஜனாதிபதி அஷ்ரப் கானியின் கீழ் ஆப்கானிஸ்தான் ஜனநாயக ஆட்சியில் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அமெரிக்க படையினர் திரும்பப் பெறத் தொடங்கியவுடன், தலிபான்கள் சின்ஹியாங் பிராந்தியத்துடன் இணைந்துள்ள வடகிழக்கு படாக்ஷான் மாகாணத்தை தாக்கிக் கைப்பற்றி வருகின்றனர்.

இதனால் அதன் எல்லையில் சீனா தனது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது. சின்ஜியாங்கில் சீனா கலாச்சார இனப்படுகொலையை செய்தது என்பது உலகிற்கு தெரியும். உய்க்குர் முஸ்லிம்களின் பெயர்கள், உணவுப் பழக்கங்கள், மதம், உடை, நடத்தைகள் மாற்றப்பட்டன. தொழிற்பயிற்சி மற்றும் வதை முகாம்கள் இன்றுவரை கடுமையான மனித உரிமை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் உய்குர் போராளிகள் பலர் சிரியாவிற்கு சென்றனர், கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கைப் படி, ETIM இன் சுமார் 500 உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில், பெரும்பாலும் பதக்ஷான் மாகாணத்தின் ரெஜிஸ்தான் மற்றும் வார்டுஜ் மாவட்டங்களில் இருப்பதாக கணித்துள்ளனர். டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு ETIM அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது சீனாவிற்கு பெரும்கோபத்தை உண்டாக்கியது.

சீனா 1990 களின் பிற்பகுதியிலிருந்து தலிபான்களுடன் ஏதாவது ஒரு வழியில் உறவாடி வருகிறது. 1999 ஆம் ஆண்டில், சீன அதிகாரிகள் குழு காபூலுக்கு பறந்து இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடங்கினர். பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதுவர் 2000 ல் தலிபான் தளபதி முல்லா உமரை சந்திக்க முயன்றார்.

நாட்டில் ETIM ஐ கட்டுப்படுத்த தலிபான் பரஸ்பரம் ஒப்புக்கொண்டது; ஆனால் அவர்கள் குழுவை வெளியேற்றவில்லை. 2014 ல் தொடங்கி, தலிபான் பிரதிநிதிகள் தவறாமல் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கியது சின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் காபூலுக்கும் தலிபான்களுக்கும் இடையே சீனா ஏற்பாடு செய்த இரகசியப் பேச்சுவார்த்தையில் முடிவடைந்தது.


தாலிபான்களுடனான சீனாவின் உறவுக்கு காரணம் என்ன?

முதலில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை மீண்டும் பெறுவதைக் குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. தலிபானின் முக்கிய ஆதரவாளரான பாகிஸ்தானுடனான சீனாவின் நல்லுறவினால், இப்பகுதியில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.

ஜின்ஜியாங்கில் சக முஸ்லிம்கள் (உய்க்குர்) பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டதையும், அங்குள்ள மற்ற மனித உரிமை மீறல்களையும் மற்ற அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன.

இரண்டாவதாக, அல்கொய்தா மற்றும் ISIS போன்ற சர்வதேச லட்சியங்களைக் கொண்ட தீவிரவாத குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு புகலிடமாக மாறி வருவது சீனாவுக்கு தலைவலி தரலாம். சீனா குறிப்பாக உய்கூர் போராளிகள் மீது கவனம் செலுத்துகிறது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு பரவினால், தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மத்திய ஆசிய நாடுகள் மற்றும் பாகிஸ்தான் வழியாக சீனாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளது என்று சீன ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

மூன்றாவதாக, பாதுகாப்பையும் தாண்டி, சீன நிறுவனங்கள் அயனாக் தாமிர சுரங்கம் மற்றும் அமு தர்யா எண்ணெய் துறையில் ஆய்வு செய்வதில் ஈடுபட்டுள்ளன.

தாலிபானின் எழுச்சி ரஷ்யாவிற்கு தலைவலியாகிவிட்டது, ஏனெனில், எதிர்காலத்தில் தலிபான்கள் தங்கள் ஆட்சியை நீட்டிக்க எந்தத் தாக்குதலையும் நடத்த இராணுவமயமாக்கத் தொடங்கியுள்ளன. ரஷ்யா மற்றும் ஐந்து முன்னாள் சோவியத் நாடுகளை உள்ளடக்கிய கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO) கீழ் மத்திய ஆசியாவின் பாதுகாப்பிற்கான முக்கிய பொறுப்பை ரஷ்யா சுமக்கிறது.

இறுதியாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இதுவரை எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்றாலும், சீனா பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. தலிபான்களை எதிர்த்துப் போராட அமெரிக்காவிடம் இருந்து 30 பில்லியன் டாலர்களைப் பெற்ற பாகிஸ்தான், NATO மற்றும் அமெரிக்கப் படைகளைக் கொன்றது. இப்போதைக்கு சீனா நெருப்புடன் விளையாடுவதால் கவனமாக இருக்க வேண்டும். இதில் காயம்பட்டத்தில் முந்தைய சோவியத் ஒன்றியம் ஒரு உதாரணம்.


Image Courtesy: South China Morning Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News