Kathir News
Begin typing your search above and press return to search.

"தமிழ் ஆண்கள் தங்கள் ஆண்மையை உறுதிப்படுத்தவே ஜல்லிக்கட்டு நடத்தினார்கள்" - காங்கிரஸ் பத்திரிகை நேஷனல் ஹெரால்டு அவதூறு.!

"தமிழ் ஆண்கள் தங்கள் ஆண்மையை உறுதிப்படுத்தவே ஜல்லிக்கட்டு நடத்தினார்கள்" - காங்கிரஸ் பத்திரிகை நேஷனல் ஹெரால்டு அவதூறு.!

தமிழ் ஆண்கள் தங்கள் ஆண்மையை உறுதிப்படுத்தவே ஜல்லிக்கட்டு நடத்தினார்கள் - காங்கிரஸ் பத்திரிகை நேஷனல் ஹெரால்டு அவதூறு.!

Saffron MomBy : Saffron Mom

  |  13 Jan 2021 7:45 AM GMT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வதில் மிகுந்த ஆர்வத்தை தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது காட்டி, அதை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.

சொல்லப்போனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்த்து டிசம்பர் 15, 2015ல் PETA வைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்த ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் (human society international) என்ற அமைப்பிற்கு கடிதம் எழுதினார். அதில் மிக 'கொடூரமான' பொழுதுபோக்கை அளிக்கும் ஜல்லிக்கட்டை நாம் ஊக்குவிக்கக் கூடாது என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தடை செய்யும் அவர்களுடைய நோக்கில் அந்த அமைப்பு வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

ஜெயராம் ரமேஷ் உட்பட பல ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களும் இதே நிலைப்பாட்டை தான் கொண்டு இருந்தனர். ஆனால் 2017 ஜனவரியில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் வெடித்த பொழுது ,காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜதீப் சுர்ஜெவாலா உட்பட சிலர் தங்கள் தொனியை மாற்றத் தொடங்கி மக்களின் வேண்டுகோளை மதிப்பதாகவும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாற்றி பேசினர்.

ஆனால் மறுபுறம் மற்றொரு செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் மனுதாரர்களுக்கு வழக்கறிஞராக தோன்றி, ஜல்லிக்கட்டு ஒரு கொடூரமான 'விளையாட்டு' என்றும் விலங்குகளை அது துன்புறுத்தும் என்றும், அதை நடத்த வேண்டுமென்று கோருவது உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளுக்கு புறம்பானதாகும் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

2017 ஜனவரியில் இத்தகைய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, காங்கிரசின் ஊதுகுழலான, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை, ஜல்லிக்கட்டை பற்றி மிகவும் அவதூறாகவும் அதை வீர விளையாட்டாக கருதும் தமிழர்களை குறித்து மிக மோசமான வார்த்தைகளிலும் விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிட்டனர்.

ஒரு பெண்மணியான ஜெயலலிதாவின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு தமிழ்நாடு ஆண்கள் இருந்ததாகவும், தமிழ் ஆண்கள் தங்களுடைய ஆண்மையை உறுதிப்படுத்தும் கொள்ளும் விதமாகவே இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வரவேற்பதாகவும் இது தமிழர்களின் விளையாட்டு அல்ல என்றும் குறிப்பாக முக்குலத்தோர் தேவர் சமுதாயம் விளையாடும் விளையாட்டு என்றும், இதில் தலித்துகள் ஈடுபட அனுமதிக்கப்படாமல் ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் இஷ்டத்திற்கு ஜல்லிகட்டை பற்றி அவதூறாக தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஜல்லிக்கட்டை தடை செய்தது. மோடி அரசாங்கம் அதை திரும்பக் கொண்டு வந்தது. தற்பொழுது வரை காங்கிரஸ் அமைச்சர்களும் காங்கிரஸுக்கும் இவ்விஷயத்தில் மாறிமாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் தற்போது ராகுல் காந்தி அதே 'கொடூரமான' விலங்குகளை 'துன்புறுத்தும்' ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வருகிறாராம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News