பிரியாணி இல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு கூடும் கூட்டம் - அதிர்ச்சியில் மாற்று காட்சிகள்.!
பிரியாணி இல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு கூடும் கூட்டம் - அதிர்ச்சியில் மாற்று காட்சிகள்.!
By : Mohan Raj
தற்கால அரசியலில் ஓர் கட்சி கூட்டம் கூட்டுவதற்க்கு, கோஷமிடுவதற்கு, அந்த கட்சி தலைவர்கள் வரும் பாதையெல்லாம் நின்று வரவேற்பதற்கு ஏன் கைகள் தட்டி ஆராவாரம் செய்வதற்கு கூட ஆட்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்படுகின்றனர்
இன்றைய சூழலில் உதாரணமாக தஞ்சாவூர் மாநகரில் ஓர் அரசியல் கட்சியின் கூட்டமோ அல்லது மாநாடோ என்றால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வேன்கள், சிறிய அளவில் உள்ள ஆட்டோக்கள், பேருந்துகள் என அந்தந்த ஏரியா நிர்வாகிகள் மூலம் அழைந்து வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்படுகிறது.
சில நாட்கள் முன்பு கூட தஞ்சையில் ஓர் அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு பள்ளியக்கிரஹாரம், நடுக்கடை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம் போன்ற பகுதிகளில் இருந்த ஆட்கள் வேன்களில் ஏற்றி வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்பட்டனர்.
பின் அந்த கட்சியின் கூட்டம் ஓர் மூலையில் நடந்து கொண்டிருக்க மற்றோர் மூலையிலோ கூலிக்கு வந்த ஆட்கள் மதுபானம் அருந்துவதிலும், சாப்பாட்டை பிரித்து சாப்பிடுவதிலும், அழைத்து வந்தவரிடம் இன்னும் கூடுதலாக பணம் கறப்பதிலும் பரபரவென இருந்தனர். இவ்வளவிற்கும் அந்த அரசியல் கட்சி கூட்டத்தின் முக்கிய நபர் பேசுகையில் அங்கு நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன.
இப்படி உள்ளது இன்றைய அரசியல் கட்சிகளின் கூட்டம் சேர்க்கும் கலாட்டா. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் ஓர் கட்சி சாப்பாடு, மதுபானம், பணம் என ஏதுவும் குடுக்காமல் கூட்டம் சேர்க்கிறது என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்பது கடந்தி சில நாட்களாக அந்த கட்சிக்கு கூடும் கூட்டத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.
பா.ஜ.க'வின் தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த நவம்பர் 6'ம் தேதி முதல் வரும் டிசம்பர் 6'ம் தேதி வரை தமிழகத்தில் திருத்தணியில் துவங்கி திருச்செந்தூர் வரையில் 'வெற்றிவேல் யாத்திரை' நடத்த திட்டமிட்டு நடத்தி வருகிறார். இதற்கு தி.மு.க, தி.க, விடுதலை சிறுத்தைகள் போன்ற பல்வேறு இந்து மத எதிர்ப்பு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசும் கொரோனோ'வை காரணம் காண்பித்து அனுமதி மறுத்தது.
ஆனால் இந்த யாத்திரையானது இந்து மத மக்களின் ஒற்றுமையை ஓங்க செய்யும் என்ன நோக்குடன் எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் துவங்கி வைத்தார்.
துவங்கி வைத்த நாள் அன்று அனுமதி மறுக்கப்பட்டு காவல்துறையால் எல்.முருகன் கைது செய்யப்பட்ட அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 40,000 தமிழக பா.ஜ.க தொண்டர் படையினர் கைது செய்யப்பட்டனர். இதனை தமிழக பா.ஜ.க மட்டுமல்லாது காவல்துறையும் உறுதிபடுத்தியது. அவ்வாறு கைது செய்யப்பட்ட 40 ஆயிரம் பேர்களில் ஒருவர் கூட எனக்கு காசு வேண்டும் என்றோ, சாப்பாடு வேண்டும் என்றோ அல்லது மதுபானம் வேண்டும் என்றோ 'வெற்றிவேல் யாத்திரை'க்கு வரவில்லை மாறாக இந்து மத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், இந்துக்கள் சமுதாயத்தில் ஒடுக்கப்படாமல் வாழ வேண்டும் என்று யாத்திரைக்கு வந்தவர்கள்.
இப்படி தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் காசு, பணம் செலவழிக்காமல், மதுபான ஆசை காண்பித்து போதையில் மயக்காமல் ஓர் பட்டாளத்தை கூட்ட பா.ஜ.க'வால் முடிகிறதே என திராவிட கட்சிகள் விம்முகின்றன. அதிலும் குறிப்பாக தி.மு.க அடுத்தவர் கட்சி ஆட்களை ஆசை காண்பித்து இழுத்து பழக்கப்பட்ட கட்சி ஆதலால் இந்த பணத்தாசை இல்லாத காவி கூட்டத்தை பார்த்து நெஞ்சில் அடித்துகொள்கிறது.
தமிழகத்தில் தாமரை மலர மட்டுமல்ல தன் வேர்களை தமிழகம் முழுவதும் பரப்பவும் துவங்கிவிட்டது. இனி தமிழகம் தாமரை படர்ந்த குளமாக காட்சி தரும் காலம் வெகுதொலைவில் இல்லை.