நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் தடுக்கும் தமிழக எம்.பி'க்கள்
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மாணிக்கம் தாகூர்,ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடை நீக்கம் சபையில் பதாகைகளை காட்டியதால் நடவடிக்கை.
By : Mohan Raj
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மாணிக்கம் தாகூர்,ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடை நீக்கம்
சபையில் பதாகைகளை காட்டியதால் நடவடிக்கை. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,கடந்த 18 -ஆம் தேதி தொடங்கியது.விலைவாசி உயர்வு,உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பபு போன்ற பிரச்னைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்ததிருந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கைக்கு செல்லுமாறு மீண்டும் மீண்டும் கூறினார்.ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அவர் எச்சரிக்கை விடுத்தும் அமளி நிற்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர்,ஜோதிமணி, டி.என்.பி.பிரதாபன் ரம்யா ஹரிதாஸ் ஆகியோரின் பெயரை சபாநாயகர் வாசித்தார்.உடனே சபையை ஒத்தி வைத்தார்.
பின்னர் சபை கூடியபோது,நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி,மேற்கண்ட 4 எம்.பி.க்களையும் நடப்பு கூட்டத்தொடரில் மீதி உள்ள நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.