பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாமதத்தினால் பரிதவித்து நின்று மாணவர்கள்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாமதத்தினால் பரிதவித்து நின்று மாணவர்கள், தொடரும் அலட்சியம்.
By : Bharathi Latha
2023 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே எட்டாம் தேதி காலை 9:30 மணிக்கு வழியாகும் என்று தமிழக பள்ளி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று காலை 9: 30 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் 9:30 மணிக்கு தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேர்வு முடிவு வெளியாகவில்லை இதன் காரணமாக தமிழக மாணவர்களுக்கு பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஏற்கெனவே அறிவித்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வு முடிவுகள் காத்துக் கொண்டு இருந்தார்கள்.
இதனிடையே 12 ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திருச்சியில் சில நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முடிவுகள் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைச்சருக்காக அதிகாரிகள் காத்துக் கொண்டு உள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இதில் குறிப்பாக திமுக அரசின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். இது பற்றி அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி. இந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருகைக்காக 8.51 லட்சம் மாணவர்கள் காத்திருந்த அவலம் நேற்று நடந்துள்ளது. ஆட்சியமைத்து இரண்டாண்டு முடிந்த தருவாயில் தமிழக வரலாற்றில் +2 தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதப்படுத்திய ஒரே அரசு இந்த தி.மு.க அரசு தான் என்ற கோப்பையை தட்டிச்சென்றுள்ளார் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்.
முழு நேர உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும், பகுதி நேர தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திற்கு வர தாமதம் ஆனதால் 8.51 லட்சம் +2 தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று காலை 9.30 மணியில் இருந்து தமிழகம் முழுக்க காக்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் திருச்சியில் இருந்து விமானத்தில் வர தாமதமானதாக கூறுகிறார்கள். 8.51 லட்சம் மாணவர்கள் சரியாக காலை 9.30 மணிக்கு கனவுகளுடன் காத்திருப்பார்கள் என்ற அக்கறை இருந்திருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நேரத்தில் அமைச்சர் வந்திருப்பார். அந்த பொறுப்புணர்வும், கடமையும் கிஞ்சித்தும் இல்லாததால் அமைச்சர் தாமதமாக வந்துள்ளார். இது இந்த தி.மு.க ஆட்சியின் கையாலாகாததனத்தையும், நிர்வாகத் திறமையின்மையையுமே மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தயவு செய்து உங்கள் அற்ப அரசியலுக்காக மாணவர்களின் கனவுகளுடன் விளையாட வேண்டாம் முதல்வரே. தமிழகத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்கள் சினம் கொண்டால் அதை தாங்கும் திராணி உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ கிடையாது" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy: News