Kathir News
Begin typing your search above and press return to search.

முறைகேட்டினை அம்பலப்படுத்திய தேஜஸ்வி சூர்யா- கொதிக்கும் பிரபலங்கள் & 'பத்திரிகையாளர்கள்'.!

முறைகேட்டினை அம்பலப்படுத்திய தேஜஸ்வி சூர்யா- கொதிக்கும் பிரபலங்கள் & பத்திரிகையாளர்கள்.!

Saffron MomBy : Saffron Mom

  |  7 May 2021 12:06 PM GMT

பெங்களூரு தெற்கு பகுதியின் பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யா BBMPயின் 'படுக்கை ஒதுக்கீடு முறைகேட்டினை' அம்பலப்படுத்திய பிறகு, பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களில் ஒரு பகுதியினர் அவர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தேஜஸ்வி சூர்யா செவ்வாய்க்கிழமை அன்று கொரானா வைரஸ் நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட படுக்கை முறையில் மோசடி நடைபெற்றிருப்பதாக உண்மையை வெளிக் கொண்டு வந்திருந்தார். அதாவது படுக்கைகளுக்கு செயற்கையாக ஒரு தட்டுப்பாடை உருவாக்கி எந்த அறிகுறிகளும் இல்லாத நோயாளிகளுக்காக அவற்றை தடுத்து வைத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் தேஜஸ்வி சூர்யா இறங்கினார். 4065 படுக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதை பதிவு செய்தவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது, அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு கூட வரவில்லை என்பதை அறிந்து கொண்டனர். ஒரு நோயாளியின் பெயரால் 5 முதல் 20 படுக்கைகள் தடுத்து வைக்கப்பட்டு, பிறகு மற்ற நோயாளிகளுக்கு ஒரு பெரும் பணத்திற்கு அவை விற்கப்பட்டுள்ளன என்று சூர்யா பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. அதில் அவருடன் எம்எல்ஏக்கள் ரவி சுப்பிரமணியம் மற்றும் சதீஷ் ரெட்டி ஆகியவர்கள் அதிகாரிகளை கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த வீடியோவில் தேஜஸ்வி சூர்யா சில முஸ்லிம்களை பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எதன் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து மீடியாக்களின் ஒரு பகுதி இந்த விவகாரத்தை பெரிதாக்கி இதற்கு மத ரீதியிலான சாயம் பூசி தேஜஸ்வி சூர்யா இந்த பிரச்சாரத்திற்கு மத சாயம் பூச பார்ப்பதாகவும் அதனாலேயே அவர்கள் முஸ்லிம் பெயர்களை குறிப்பிட்டதாகவும் குற்றம் சுமத்தினர்.

முதல் இதில் முதல் முறையாக இறங்கியது 'நியூஸ் மினிட்' பத்திரிக்கை'. "ஊழலை வெளிக் கொணர்வது போல தேஜஸ்வி சூர்யா மத சார்பான சூழ்ச்சிகளில் இறங்குகிறார்" என்ற தலைப்பில் பெயரிட்டு, ஒரு கட்டுரையில் மத வெறுப்பு பிரச்சாரத்தை தேஜஸ்வி சூர்யா நடத்துவதாகவும், மத்திய அரசின் திறமையின்மையில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் இதை செய்வதாக குறிப்பிட்டனர்.

குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இதன் தலைமை எடிட்டர் தன்யா ராஜேந்திரன், சில நாட்களுக்கு முன்பு பல தனியார் மருத்துவமனைகள் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு படுக்கைகளை ஒதுக்கீடு செய்வதற்கு BBMP வார் ரூம் லஞ்சம் கேட்பதாக புகார் அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.



BBMP துணை கமிஷனர் சர்பராஸ் கான் மீதும் விமர்சனங்கள் எழுந்ததால் இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக்கில் விளக்கம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி சூர்யாவும் இவரிடம் பேசி அவரையோ அவரது சமூகத்தையோ இந்த விவகாரத்தில் குறை சொல்லவில்லை என்றும் அவர் பணியை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.


நியூஸ் மினிட் பத்திரிக்கை தேஜஸ்வி சூர்யாவை எதிர்த்து வெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்ட பிறகு பலரும் இதே பாணியில் ட்வீட் செய்ய தொடங்கினர். நடிகர் சித்தார்த் ஒரு படி மேலே சென்று பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபை சூர்யாவுடன் ஒப்பிட்டார்.








ஆல்ட் நியூஸ் பத்திரிகை சேர்ந்த முகமது சபீர் தேஜஸ்வி சூர்யாவைத் தாக்கி, இந்த முறைகேட்டில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயன்றார்.

இந்த விவகாரத்திற்கு பிறகு எம்பியின் குழுவில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவருடைய குழுவை சேர்ந்த 20 பேரின் தொலைபேசி எண்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் பெயர் தெரியாத எங்களிடமிருந்து மிரட்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதை தொடர்ந்து சூர்யா நீக்கம் செய்யப்பட்ட 17 பேரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் போலி செய்திகள் வரத் தொடங்கின. இதுகுறித்த தேஜஸ்வி சூர்யா கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

தேஜஸ்வி சூர்யா இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து டாக்டர் நேத்ராவதி, Dr. ரேஹான், ரோஹித், ஷாஷி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

With Inputs from: The Commune Mag

Next Story
கதிர் தொகுப்பு
Trending News