Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் தங்கத்தை தொடக்கூடாது!

கோயில் தங்கத்தை தொடக்கூடாது!
X

Mission KaaliBy : Mission Kaali

  |  17 Oct 2021 2:52 AM GMT

தமிழக அரசுக்கு 'இந்து முன்னனி' எச்சரிக்கை!

இந்துக்கள் தங்களது குல தெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் வேண்டுதலுக்காகவோ, பக்தியின் காரணமகவோ ஆபரணங்களை வழங்குவது வழக்கம். இது இன்றல்ல…நேற்றல்ல… பல ஆயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடையே தொடரும் வழக்கம். இந்து ஆலயங்களின் செழிப்பே, காலங்களை கடந்து இந்து சமுதாயம் தழைத்து வளர காரணம்!

இது இந்துக்களுக்கு புரிந்ததோ இல்லையோ காலம் காலமாக இந்து விரோதிகள் தெளிவாக புரிந்துவைத்துக்கொண்டு ஆலயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கஜினி முகமது தொடங்கி கிருஸ்தவ போர்ச்சுகீசியர்வரை இந்தியாவில் உள்ள கோயில்களை அழித்து கொள்ளையடிப்பதையே முக்கிய கடமையாக செய்துவந்தனர். கோயில்களை கொள்ளையடிப்பதன் மூலம் எக்கச்செக்க செல்வங்களை பெற முடியும். மேலும் இந்து சமுதாயத்தை வறுமைக்குள் தள்ளி, இந்து மதத்தையும் அழிக்க முடியும். இதுவே அந்த அன்னிய படையெடுப்பாளர்களின் நோக்கமாக இருந்தது.





ஆனாலும் இந்த வரலாற்றில் இருந்து இந்துக்கள் பாடம் கற்றுக்கொண்தாக தெரியவில்லை. இன்றும் அந்நியப்படையெடுப்பாளர்கள் இல்லை. ஆனால் அரசாங்கம் என்ற பெயரில் இந்துக்களின் கண் முன்னாலேயே கோயில் சொத்துக்கள் களவாடப்பட்டு வருகின்றன. தற்போது பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த தங்கத்தைத் உருக்கி வங்கியில் போடப்போவதாக அறிவித்துள்ளார் அற(மற்ற)நிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு!

அதன் முதற்கட்டமாக சமயபுரம் கோயில், திருவேற்காடு கோயில், இருக்கன்குடி கோயில்களில் உள்ள தங்க நகைகள் உருக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஒன்றிய முதல்வர் ஸ்டாலின்.

ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கைக்கும், ஆபிரகாமிய காட்டுமிராண்டிக் கூட்டங்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் துளியும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் இந்து மதத்தில் நம்பிக்கையில்லாத அரசு எதற்காக இந்துக்களின் பிரார்த்தனை விஷயத்தில் தலையிடவேண்டும்?

இந்துக்கள் தங்களுடையை குடும்ப உறுப்பினர்களின் நலன், நேர்த்திக் கடன், உடல் ஆரோக்கியம் போன்ற பல காரணங்களுக்காக கோயில்களில் உள்ள சாமிக்கு தங்க நகைகளை வழங்கியுள்ளனர். இந்த நகைகள் அனைத்தும் கோயில்களில் உள்ள சாமிக்கே சொந்தம். வேறு யாரும் அதில் சொந்தம் கொண்டாட முடியாது. நகைகள் மட்டும் கிடையாது. கோயில் மற்றும் கோயில் சார்ந்த சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கடவுளுக்கே சொந்தம்.

குறிப்பாக அறநிலையத்துறைக்கு கோயில்கள் மீது எந்த உரிமையும் கிடையாது. அறநிலையத்துறைக்கு கோயில்களின் கணக்கு வழக்கை சரி பார்க்கும் உரிமை மட்டுமே உள்ளது. அதையே அறநிலையத்துறை சரியாக செய்யவில்லை. ஒருமுறை நீதிமன்றத்திற்குச் சென்று கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்கள் பற்றிய வழக்குகளை விசாரித்தாலே, அறநிலையத்துறையின் லட்சணம் என்னவென்று தெரிந்துவிடும்.

இந்த சூழ்நிலையில் கோயில்களின் தங்கத்தை உருக்கி வங்கியில் போடப்போவதாக திமுக அரசு சொல்லியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பிற்கு பலமான எதிர்ப்பை தெரிவித்துள்ளது 'இந்து முன்னனி' அமைப்பு! இன்று 16.10.2021 சனிக்கிழமை பார்த்தசாரதி கோயிலுக்கு இந்து முன்னனி நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர். இதில் இந்து முன்னனியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில ஒருங்கிணைப்பாளர் பக்தவத்சலம், சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் முதலிய மூத்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.





அதுமட்டுமல்ல… கோயில் நகைகளை உருக்குவது தொடர்பான பன்னிரண்டு முக்கியமான கேள்விகளையும் திமுக அரசுக்கு எதிராக எழுப்பியுள்ளது இந்து முன்னனி அமைப்பு! இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஒருவார காலத்திற்கு மாபெரும் பிரச்சார யாத்திரை நடத்தவும் இந்து முன்னனி முடிவு செய்துள்ளது.

ஆளும் அரசு மற்றும் அறநிலையத்துறை சட்டத்தையும் மதிக்கவில்லை, இந்துக்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை, நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை.

கீழடி அகழ்வாராய்ச்சி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ஆகிய இரண்டிலுமே தமிழ் கலாச்சாரத்தை மீட்கிறோம் என்றப் பெயரில் தவறான தகவல்களே வெளியிடப்பட்டுள்ளதை முன்னாள் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் கல்வெட்டு ராமச்சந்திரன் மற்றும் முன்னனி அகழ்வாராச்சியாளர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். தமிழக மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை நிரூபிக்கும் ஒரே இடமாக இருந்துவருவது கோயில்களே!





அதையும் மொத்தமாகச் சுருட்டிவாரக் கிளம்பியிருக்கிறது திமுக அரசு.

ஒன்றை மட்டும் நினைவுக் கொள்ளுங்கள். இந்துக்களை ஏமாற்றலாம். பரம்பொருளை ஏமாற்ற முடியாது.

சிவன் சொத்து குல நாசம்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News