அமெரிக்கப் போர்க்கப்பல் USS ஜான் பால் ஜோன்ஸ் லட்சத் தீவு அருகே சென்றதன் பின்னணி!
By : Saffron Mom
லட்சத் தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் கடந்த வாரம் அமெரிக்காவின் USS ஜான் பால் ஜோன்ஸ் போர்க்கப்பல் ஒரு சுதந்திரமான வழிசெலுத்தல் நடவடிக்கை (Freedom of navigation operation (FONOP)) மேற்கொண்ட பொழுது இந்தியாவின் மூலோபாய சமூகம் பரபரப்பானது.
அமெரிக்க கடற்படை இவ்வாறு நடந்துகொண்டது தேவையற்ற ஆத்திரமூட்டல் என்றுகூட தெரிவித்தனர். US 7வது கடற்படை தளபதியின் ஒரு செய்திக்குறிப்பில், "இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வழிகாட்டுதல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வலியுறுத்தியதாக......இந்தியாவின் முன் அனுமதி கோராமல்" எனத் தெரிவித்திருந்தார். இது இந்திய-அமெரிக்க உறவுகள் உயர்ந்த நிலையில் இருக்கும் நேரத்தில் ஒரு அரசியல் சமிங்ஞையா என்று கூட பலரும் பார்த்தார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்க ராணுவத்தின் பெண்டகன், சர்வதேச சட்டங்கள் உடன் இது ஒத்துப் போவதாக வாதிட்டனர். அமெரிக்க கடற்படையை பொருத்தவரை இத்தகைய FONOPக்களை செய்வது , சில நாடுகளின் கடல் சார் உரிமைகள் சர்வதேச சட்டத்தோடு பொருந்தாது என்பதை காட்டும் வழியாக உள்ளன.
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வெளி நாட்டு போர்க்கப்பல்கள் வருவதற்கு இந்தியாவின் முன் அனுமதி தேவை என்பது, அமெரிக்க அதிகாரிகளை பொருத்தவரை கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNCLOS) பிரிவு 56, 58 ல் ஐந்தாம் பகுதியில் விதிமீறல் ஆகும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி அமெரிக்க போர்க்கப்பல்கள், மற்றொரு கடற்கரை நாட்டில் 100 கடல் மைல் தொலைவில் இருக்கும் பிரத்தியேக மண்டலங்களுக்கும் சென்று வரலாம். இந்த கடல்சார் மாநாட்டை இந்தியா வித்தியாசமாக பார்க்கிறது. மற்றொரு நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்குள் ராணுவக் கப்பல்களை அனுப்ப இந்த மாநாடு வெளிப்படையாக அனுமதிக்கவில்லை என்று இந்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
1995 இலும் இந்த மாநாட்டின் பொழுது இந்தியா, "இந்த மாநாடு மற்ற நாடுகளை அடுத்த நாடுகளின் பிரத்தியேகமான பொருளாதார மண்டலங்கள் மற்றும் கண்ட ஷெல்ப்களில் ராணுவ பயிற்சிகள் குறிப்பாக குறிப்பாக கடலோர நாட்டின் அனுமதியின்றி ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்களை கொண்ட போர்க்கப்பல்களை கடந்து செல்ல அங்கீகாரம் அளிக்கவில்லை" என்பதை இந்தியா புரிந்து கொள்வதாக தெரிவித்தனர். இது இந்தியாவின் உள்ளூர் கடல் மண்டலங்கள் சட்டம் 1976 உடன் ஒத்துப்போகிறது.
இத்தகைய வழிகாட்டுதல் சுதந்திரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதும் இந்தியாவும் அமெரிக்காவும் பொதுவெளியில் இப்படி வேறுபாடுகளை வெளிப்படுத்தவில்லை. தென்சீனக் கடலில் சீனாவுடனான போட்டியில் அமெரிக்க கடற்படைக்கு ஒரு முன்னேற்றத்தை அளிக்கும் அமெரிக்காவின் இராணுவ மற்றும் இராஜதந்திர விவகாரங்களில் இது ஒரு கருவி என இந்திய நிபுணர்கள் பார்க்கின்றனர்.
இந்திய கடலில் சீன கடற்படை அதிகமாக இருக்கும் சாத்தியம் தான் இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலை என்பது அமெரிக்காவிற்கும் தெரியும். குறிப்பாக இந்தியத் தீவுகளுக்கு அருகில் உள்ள சீன ராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல். எனவே இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகள் என்று அவர்களில் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று அமெரிக்காவிற்கு நன்றாகவேப் புரிகிறது. எனவே அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் கொஞ்சம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
முக்கியமாக அமெரிக்க கடற்படையின் ஆசிய செயல்பாட்டில் இது நடந்தது என்று குறிப்பிட மட்டுமே இது உதவுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க கடற்படை இந்திய பிராந்திய நீர்நிலைகளுக்கு வெளியே மூன்று முறை சென்று வந்தது. இதற்கு நேர்மாறாக சீன பிராந்திய நீர்நிலைகளுக்கு வெளியே 2016 இல் மூன்று முறை, 2017இல் நான்கு முறை, 2018ல் ஆறுமுறை, 2019ல் 8 முறை, 2020ல் 9 முறை என சவால் விட்டுள்ளது.
சீன தீவுகளின் கடல் பிராந்தியத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் எல்லாம் அமெரிக்க போர் கப்பல்கள் சென்றதாகத் தெரிய வருகிறது. எனவே அமெரிக்காவின் ராணுவ முன்னுரிமைகள் ஆசியாவில் யாரை நோக்கி இருக்கிறது என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா ஏன் லட்சத் தீவை தேர்ந்தெடுத்தது?
ஏனெனில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது சர்ச்சைக்குரியதாக இருக்கும். இந்தியாவிடமிருந்து இதற்கு கண்டிப்பாக ஒரு பதில் தேவைப்படுவதை தவிர, UNCLOS மாநாடு குறித்து இரு நாடுகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டி இருந்திருக்கும். லட்சத்தீவு பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் அந்த அளவு குறிப்பிடத்தக்கதாக இருக்காது என்று அமெரிக்கா திட்டமிட்டு இருக்கலாம்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளை விட இந்த லட்சத் தீவு கடல் எல்லைகள் நன்றாக நியமிக்கப்பட்டு இருக்கின்றன. எந்த தவறான நோக்கமும் புரிந்துகொள்ளபடக்கூடாது என்பதற்காக அமெரிக்க கடற்படை இந்திய கடலில் மாலத்தீவின் பிராந்திய கடல் வழியாக சென்றது. மாலத்தீவு 2020ம் ஆண்டில் அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது சீனாவுக்கு ஒரு சமிங்ஞையை தெரிவிக்கும். அதாவது அமெரிக்க கடற்படை, கடல் பகுதிகளில் ஒழுங்கு விதிமுறைகளை எதிரிகளாக இருந்தாலும் கூட்டாளிகளாக இருந்தாலும் ஒரே மாதிரி செயல்படுத்தும் என்பதாகும்.
ஆனால் அமெரிக்க 7th fleet தேவையில்லாமல் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டு தவறிழைத்து விட்டது. சமூக ஊடகங்களில் இந்த பிரச்சனை வெளியானவுடன் அது வேறுமாதிரியாக பிரிந்து சென்றுவிட்டது.
நடந்த சம்பவத்தில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. அமெரிக்கா, இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இத்தகைய கடல் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை வழக்கம் ஆக்குவது அண்டை நாடுகளின் போர்க்கப்பல்கள் நுழைவதற்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றி இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் அமெரிக்கா நுழைவது மற்ற பிராந்திய கடற்படை நுழைவதை ஊக்குவிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கா, UNCLOS பற்றி பாடம் கூறினாலும் அமெரிக்காவே இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை இந்தியாவின் உள்நாட்டு விதிமுறைகள் சர்வதேச சட்டங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு நண்பன் செய்த துரோகம் என்று பலரும் காட்டுவதைப் போல் அல்ல. ஒரு சிக்கலான பிரச்சினையான போனோப் கடல்சார் சுதந்திரத்தில் இது இந்தியா மற்றும் அமெரிக்க பார்வையில் ஒரு இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.
This commentary originally appeared in English in "The Hindu". இது தமிழ் சாராம்சம்.