Kathir News
Begin typing your search above and press return to search.

பெயரை மட்டும் மாற்றி அப்படியே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு - இடதுசாரிகளை ஏமாற்றவா?

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயரை மட்டும் மாற்றி அப்படியே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு - இடதுசாரிகளை ஏமாற்றவா?

Mohan RajBy : Mohan Raj

  |  8 Oct 2022 1:31 PM GMT

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 'தேசிய கல்விக் கொள்கை 1986'க்கு மாற்றாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 'புதிய தேசிய கல்விக் கொள்கை 2020'ஐ உருவாக்கியது. இந்த கல்விக் கொள்கையின் வரைவு வெளியான போதே தமிழ்நாட்டிலிருந்து இடதுசாரிகள் மத்தியில் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் தேசிய கல்விக் கல்லூரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வலம் வர துவங்கின. பிரதமர் மோடி முதல் ஆளுநர் ரவி வரை எல்லா மேடைகளிலும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க கூட்டணி அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது தி.மு.க அரசு. இருந்தபோதும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை பெயர் மாற்றி சத்தம் இல்லாமல் அமல்படுத்தி வருவதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக 'நான் முதல்வன்', 'இல்லம் தேடிக் கல்வியி', 'தகைசால் பள்ளி', 'எண்ணும் எழுத்தும் திட்டம்' உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் அம்சங்களை பெயரை மட்டும் மாற்றி தி.மு.க அரசு அமல்படுத்தியுள்ளது.

அதேபோல் இலவச மதிய உணவுத் திட்டம், காலை உணவளிக்கும் வகையில் அமல்படுத்தப்படும் அம்சம் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது! அதே போல் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள வயது வந்ததற்கான 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' என்ற திட்டத்தை அதே பேரில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தேசிய கல்வி மையம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், தேசிய திறந்தவெளி பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 2027 ஆம் ஆண்டுக்குள் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்ட ஐந்து கோடி பேருக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவிப்பது 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' அதன்படி தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இலக்கு நிர்ணயத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் குப்புசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். இது தமிழ்நாடு அரசின் செயலுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்கின்றனர் இடதுசாரிகள்.

அதேபோல் தேசிய கல்விக் கொள்கையில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளை பயிலும் திட்டத்தில் கீழ் எல்லா பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அமல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மாநில குழு (யூ.ஜி.சி) அண்மையில் அறிவித்துள்ளது. இதனை முறையாக செயல்படுத்தாத பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி வழங்கும் மானியங்களை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதன் காரணமாக திட்டத்தை செயல்படுத்ததற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News