Kathir News
Begin typing your search above and press return to search.

குடும்ப அட்டைக்கு 2500 என்ற எடப்பாடியின் அறிவிப்பால் வாயடைத்து நிற்கும் தி.மு.க.!

குடும்ப அட்டைக்கு 2500 என்ற எடப்பாடியின் அறிவிப்பால் வாயடைத்து நிற்கும் தி.மு.க.!

குடும்ப அட்டைக்கு 2500 என்ற எடப்பாடியின் அறிவிப்பால் வாயடைத்து நிற்கும் தி.மு.க.!

Mohan RajBy : Mohan Raj

  |  20 Dec 2020 10:22 AM GMT

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு தலா 2500 வீதம் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்தாலும், தமிழகத்தில் எது நடந்தாலும் உடனே கூச்சல், கூப்பாடு போடும் தி.மு.க தரப்பில் இருந்து இதுவரை சத்தம் வரவில்லை.

குறிப்பாக முதல்வர் எடப்பாடி'யின் அறிவிப்புகள், செய்கைகள், பிரச்சாரங்கள், கருத்துக்கள் போன்றவைகளை முதல் ஆளாக குறை கண்டறிந்து "இது சரியில்லை, அதில் குறையுள்ளது, இதனால் மக்கள் துன்பப்படுவர்" என எதாவது ஒரு கருத்தை தெரிவித்து தன் இருப்பை காட்டிக்கொள்ளும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த 2500 ரூபாய் பண்டிகை பணத்திற்கு வாயை திறக்காமல் உள்ளார்.

இது பற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி'யின் இந்ந அறிவிப்பு மக்களுக்கு பண்டிகை காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் அதனால் இதனை எதிர்த்தால் மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என ஸ்டாலின் உணர்ந்துள்ளார், ஆகையால் இதனை எதிர்க்காமல் உள்ளார்" என்றார் ஒருவர்.

மற்றொருவரோ, "மக்களிடையே 2500 வழங்கும் நிகழ்வு என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2500 ரூபாய் என்பது விளிம்பு நிலை மக்களுக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களுக்கும் பண்டிகை காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் இதனை எதிர்ப்பது என்பது தி.மு.க'வின் வாக்கு வங்கிக்கு தீ வைப்பது போலாகும் என்பதை ஸ்டாலின் உணர்ந்ததால் இந்த அமைதி" என்றார்.

எது எப்படியோ தமிழ்நாட்டில் குறைகளை சுட்டிகாட்டி சப்தமிடும் ஸ்டாலின் மக்களுக்கு இதுபோல் நிறைகள் நடக்கும்போது அதனை பாராட்ட கூட மனமின்றி இப்படி இறுக்கமாக இருப்பது காழ்ப்புணர்ச்சி'யின் வெளிப்பாடு அன்றி வேறில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News